Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௮௧

Qur'an Surah Yusuf Verse 81

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௮௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِرْجِعُوْٓا اِلٰٓى اَبِيْكُمْ فَقُوْلُوْا يٰٓاَبَانَآ اِنَّ ابْنَكَ سَرَقَۚ وَمَا شَهِدْنَآ اِلَّا بِمَا عَلِمْنَا وَمَا كُنَّا لِلْغَيْبِ حٰفِظِيْنَ (يوسف : ١٢)

ir'jiʿū
ٱرْجِعُوٓا۟
Return
திரும்பிச்செல்லுங்கள்
ilā abīkum
إِلَىٰٓ أَبِيكُمْ
to your father
உங்கள் தந்தையிடம்
faqūlū
فَقُولُوا۟
and say
இன்னும் கூறுங்கள்
yāabānā
يَٰٓأَبَانَآ
O our father!
எங்கள் தந்தையே
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
ib'naka
ٱبْنَكَ
your son
உம் மகன்
saraqa
سَرَقَ
has stolen
திருடினான்
wamā
وَمَا
and not
சாட்சி பகரவில்லை
shahid'nā
شَهِدْنَآ
we testify
சாட்சி பகரவில்லை நாங்கள்
illā
إِلَّا
except
தவிர
bimā ʿalim'nā
بِمَا عَلِمْنَا
of what we knew
நாங்கள் அறிந்ததைக் கொண்டு
wamā kunnā
وَمَا كُنَّا
And not we were
நாங்கள் இருக்கவில்லை
lil'ghaybi
لِلْغَيْبِ
of the unseen
மறைவானவற்றை
ḥāfiẓīna
حَٰفِظِينَ
guardians
பாதுகாப்பவர்களாக

Transliteration:

Irji'ooo ilaaa abeekum faqooloo yaaa abaanaaa innab naka saraq; wa maa shahidnaaa illaa bimaa 'alimnaa wa maa kunnaa lilghaibi haafizeen (QS. Yūsuf:81)

English Sahih International:

Return to your father and say, 'O our father, indeed your son has stolen, and we did not testify except to what we knew. And we were not witnesses of the unseen. (QS. Yusuf, Ayah ௮௧)

Abdul Hameed Baqavi:

(மேலும் அவர்களை நோக்கி) "நீங்கள் (அனைவரும்) உங்கள் தந்தையிடம் திரும்பச் சென்று, எங்கள் தந்தையே! உங்கள் மகன் (புன்யாமீன்) மெய்யாகவே திருடிவிட்டான். உண்மையாகவே எங்களுக்குத் தெரிந்ததையே அன்றி (வேறொன்றும்) கூறவில்லை. மறைவாக நடைபெற்ற (இக்காரியத்)தில் இருந்து (அவரை) பாதுகாத்துக் கொள்ள எங்களால் முடியாமலாகி விட்டது என்றும்; (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௮௧)

Jan Trust Foundation

ஆகவே, “நீங்கள் உங்கள் தந்தையாரிடம் திரும்பிச் சென்று, “எங்களுடைய தந்தையே! உங்கள் மகன் நிச்சயமாக திருடியிருக்கிறான்; நாங்கள் உறுதியாக அறிந்ததைத் தவிர (வேறெதையும்) கூறவில்லை; மேலும், நாங்கள் மறைவானவற்றின் காவலர்களாகவும் இருக்கவில்லை என்று கூறுங்கள்;

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நீங்கள் உங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்று, எங்கள் தந்தையே! நிச்சயமாக உம் மகன் திருடினான். நாங்கள் அறிந்ததைக் கொண்டே தவிர நாங்கள் சாட்சி பகரவில்லை. மறைவானவற்றை பாதுகாப்பவர்களாக (அறிந்தவர்களாக) நாங்கள் இருக்கவில்லை என்று கூறினர்.