Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௮௦

Qur'an Surah Yusuf Verse 80

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௮௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا اسْتَا۟يْـَٔسُوْا مِنْهُ خَلَصُوْا نَجِيًّاۗ قَالَ كَبِيْرُهُمْ اَلَمْ تَعْلَمُوْٓا اَنَّ اَبَاكُمْ قَدْ اَخَذَ عَلَيْكُمْ مَّوْثِقًا مِّنَ اللّٰهِ وَمِنْ قَبْلُ مَا فَرَّطْتُّمْ فِيْ يُوْسُفَ فَلَنْ اَبْرَحَ الْاَرْضَ حَتّٰى يَأْذَنَ لِيْٓ اَبِيْٓ اَوْ يَحْكُمَ اللّٰهُ لِيْۚ وَهُوَ خَيْرُ الْحٰكِمِيْنَ (يوسف : ١٢)

falammā
فَلَمَّا
So when
போது
is'tayasū
ٱسْتَيْـَٔسُوا۟
they despaired
அவர்கள் நம்பிக்கையிழந்தனர்
min'hu
مِنْهُ
of him
அவரிடம்
khalaṣū
خَلَصُوا۟
they secluded themselves
அவர்கள் விலகினர்
najiyyan
نَجِيًّاۖ
(in) private consultation
ஆலோசித்தவர்களாக
qāla
قَالَ
Said
கூறினார்
kabīruhum
كَبِيرُهُمْ
the eldest among them
பெரியவர் அவர்களில்
alam taʿlamū
أَلَمْ تَعْلَمُوٓا۟
"Do not you know
நீங்கள் அறியவில்லையா?
anna
أَنَّ
that
நிச்சயமாக
abākum
أَبَاكُمْ
your father
தந்தை/உங்கள்
qad
قَدْ
has taken
திட்டமாக
akhadha
أَخَذَ
has taken
வாங்கினார்
ʿalaykum
عَلَيْكُم
upon you
உங்களிடம்
mawthiqan
مَّوْثِقًا
a promise
ஓர் உறுதிமானத்தை
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
by Allah
அல்லாஹ்வின்
wamin qablu
وَمِن قَبْلُ
and before and before
இன்னும் முன்னர்
mā farraṭtum
مَا فَرَّطتُمْ
that you failed
நீங்கள் தவறிழைத்ததை
fī yūsufa
فِى يُوسُفَۖ
concerning Yusuf?
யூஸுஃப் விஷயத்தில்
falan abraḥa
فَلَنْ أَبْرَحَ
So never will I leave
ஆகவே நகர மாட்டேன்
l-arḍa
ٱلْأَرْضَ
the land
பூமியைவிட்டு
ḥattā
حَتَّىٰ
until
வரை
yadhana
يَأْذَنَ
permits
அனுமதியளிக்கின்றார்
lī abī
لِىٓ أَبِىٓ
me my father
எனக்கு/என் தந்தை
aw
أَوْ
or
அல்லது
yaḥkuma
يَحْكُمَ
Allah decides
தீர்ப்பளிக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
Allah decides
அல்லாஹ்
لِىۖ
for me
எனக்கு
wahuwa
وَهُوَ
and He
அவன்
khayru
خَيْرُ
(is) the Best
மிக மேலானவன்
l-ḥākimīna
ٱلْحَٰكِمِينَ
(of) the judges
தீர்ப்பளிப்பவர்களில்

Transliteration:

Falammas tay'asoo minhu khalasoo najiyyan qaala kabeeruhum alam ta'lamoon anna abaakum qad akhaza 'alaikum mawsiqam minal laahi wa min qablu maa farrattum fee Yoosufa falan abrahal arda hattaa yaazana leee abeee aw yahkumal laahu lee wa huwa khairul lhaakimeen (QS. Yūsuf:80)

English Sahih International:

So when they had despaired of him, they secluded themselves in private consultation. The eldest of them said, "Do you not know that your father has taken upon you an oath by Allah and [that] before you failed in [your duty to] Joseph? So I will never leave [this] land until my father permits me or Allah decides for me, and He is the best of judges. (QS. Yusuf, Ayah ௮௦)

Abdul Hameed Baqavi:

அவரிடம் அவர்கள் நம்பிக்கையிழந்து விடவே, அவர்கள் (தங்களுக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களில் பெரியவர் (மற்றவர்களை நோக்கி) "உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் வாங்கியிருப்பதை நீங்கள் அறியவில்லையா? இதற்கு முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் செய்த துரோகம் வேறு இருக்கிறது. ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கும் வரையில் அல்லது அல்லாஹ் எனக்கு யாதொரு தீர்ப்பளிக்கும் வரையில் இங்கிருந்து நான் அகல மாட்டேன்; தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் அவன்தான் மிக்க மேலானவன்" என்று கூறினார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௮௦)

Jan Trust Foundation

எனவே அவரிடம் அவர்கள் நம்பிக்கை இழந்து விடவே, அவர்கள் (தமக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களுக்குள் பெரியவர் சொன்னார்| நிச்சயமாக உங்களுடைய தந்தை உங்களிடமிருந்து அல்லாஹ்வின் மீது (ஆணையிட்டு) வாக்குறுதி வாங்கியிருக்கிறார் என்பதையும் முன்னர் யூஸுஃப் சம்பந்தமாக நீங்கள் பெருங்குறை செய்து விட்டீர்கள் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதி அளிக்கும் வரை, அல்லது அல்லாஹ் எனக்கு (இது பற்றி) ஏதாவது தீர்ப்புச் செய்யும் வரை நான் இந்த பூமியை விட்டு ஒரு போதும் அகலவே மாட்டேன்; தீர்ப்பளிப்போரில் அவன் தான் மிகவும் மேலானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவரிடம் அவர்கள் நம்பிக்கையிழந்தபோது, அவர்கள் ஆலோசித்தவர்களாக விலகினர். அவர்களில் பெரியவர் “திட்டமாக உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் (பெயரால்) ஓர் உறுதிமானத்தை வாங்கியதையும், முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் தவறிழைத்ததையும் நீங்கள் அறியவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கின்ற வரை அல்லது அல்லாஹ் எனக்கு தீர்ப்பளிக்கின்ற வரை இந்த பூமியை விட்டு நான் நகர மாட்டேன்; அவன் தீர்ப்பளிப்பவர்களில் மிக மேலானவன்”என்று கூறினார்.