குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௭௭
Qur'an Surah Yusuf Verse 77
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௭௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ قَالُوْٓا اِنْ يَّسْرِقْ فَقَدْ سَرَقَ اَخٌ لَّهٗ مِنْ قَبْلُۚ فَاَسَرَّهَا يُوْسُفُ فِيْ نَفْسِهٖ وَلَمْ يُبْدِهَا لَهُمْۚ قَالَ اَنْتُمْ شَرٌّ مَّكَانًا ۚوَاللّٰهُ اَعْلَمُ بِمَا تَصِفُوْنَ (يوسف : ١٢)
- qālū
- قَالُوٓا۟
- They said
- கூறினர்
- in yasriq
- إِن يَسْرِقْ
- "If he steals
- அவர் திருடினால்
- faqad saraqa
- فَقَدْ سَرَقَ
- then verily stole
- திருடி விட்டான்
- akhun
- أَخٌ
- a brother
- ஒரு சகோதரன்
- lahu
- لَّهُۥ
- of his
- அவருடைய
- min qablu
- مِن قَبْلُۚ
- before" before"
- முன்னர்
- fa-asarrahā
- فَأَسَرَّهَا
- But Yusuf kept it secret
- மறைத்தார்/அதை
- yūsufu
- يُوسُفُ
- But Yusuf kept it secret
- யூஸுஃப்
- fī nafsihi
- فِى نَفْسِهِۦ
- within himself
- தன் உள்ளத்தில்
- walam yub'dihā
- وَلَمْ يُبْدِهَا
- and (did) not reveal it
- வெளியாக்கவில்லை/அதை
- lahum
- لَهُمْۚ
- to them
- அவர்களுக்கு
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- antum
- أَنتُمْ
- "You
- நீங்கள்
- sharrun
- شَرٌّ
- (are the) worse
- மிகவும் கெட்டவர்கள்
- makānan
- مَّكَانًاۖ
- (in) position
- தரம்
- wal-lahu
- وَٱللَّهُ
- and Allah
- அல்லாஹ்
- aʿlamu
- أَعْلَمُ
- knows best
- மிக அறிந்தவன்
- bimā taṣifūna
- بِمَا تَصِفُونَ
- of what you describe"
- நீங்கள் வருணிப்பதை
Transliteration:
Qaaloo iny yasriq faqad saraqa akhul lahoo min qabl; fa asarrahaa Yoosufu fee nafsihee wa lam yubdihaa lahum; qaala antum sharrum makaananw wallaahu a'lamu bimaa tasifoon(QS. Yūsuf:77)
English Sahih International:
They said, "If he steals – a brother of his has stolen before." But Joseph kept it within himself and did not reveal it to them. He said, "You are worse in position, and Allah is most knowing of what you describe." (QS. Yusuf, Ayah ௭௭)
Abdul Hameed Baqavi:
(புன்யாமீனின் பொதியில் அளவு பாத்திரத்தைக் கண்ட யூஸுஃபின் மற்ற சகோதரர்கள்) அவன் (அதனைத்) திருடியிருந்தால் அவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) இதற்கு முன் நிச்சயமாகத் திருடியே இருப்பான் என்று (எப்ரூ மொழியில் தங்களுக்குள்) கூறிக்கொண்டனர். (இதனைச் செவியுற்ற எப்ரூ மொழி அறிந்த) யூஸுஃப் (அதன் உண்மையை) அவர்களுக்கு வெளியாக்காது, அதைத் தன் மனத்திற்குள் வைத்துக்கொண்டு "நீங்கள் மிகப் பொல்லாதவர்கள். (அவருடைய சகோதரர் திருடியதாக) நீங்கள் கூறுகிறீர்களே. அதனை அல்லாஹ் நன்கறிவான்" என்று கூறிவிட்டார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௭௭)
Jan Trust Foundation
(அப்போது) அவர்கள், “இவன் (அதைத்) திருடியிருந்தால் இவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) முன்னால் நிச்சயமாக திருடியிருக்கிறான்” என்று (தங்களுக்குள்) கூறிக்கொண்டார்கள்; (இச்செய்திகளைச் செவியேற்றும்) அவர்களிடம் வெளியிடாது யூஸுஃப் தம் மனதுக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்; அவர் “நீங்கள் தரத்தில் இன்னும் தீயவர்கள்; (இவர் சகோதரரும் திருடியிருப்பார் என்று) நீங்கள் வர்ணிக்கிறீர்களே அதை அல்லாஹ் நன்றாக அறிவான்” என்று (தமக்குள்ளே) சொல்லிக் கொண்டார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் (அதைத்) திருடினால் (யூஸுஃப் என்ற) அவருடைய ஒரு சகோதரன் முன்னர் (இப்படித்தான்) திருடிவிட்டான் என்று கூறினர். யூஸுஃப் அதை தன் உள்ளத்தில் மறைத்தார்; அதை அவர்களுக்கு வெளியாக்கவில்லை _ “நீங்கள் மிகவும் தரம் கெட்டவர்கள். நீங்கள் வருணிப்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்” _ என்று (தன் மனதில்) கூறினார்.