Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௭௫

Qur'an Surah Yusuf Verse 75

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௭௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا جَزَاۤؤُهٗ مَنْ وُّجِدَ فِيْ رَحْلِهٖ فَهُوَ جَزَاۤؤُهٗ ۗ كَذٰلِكَ نَجْزِى الظّٰلِمِيْنَ (يوسف : ١٢)

qālū
قَالُوا۟
They said
கூறினர்
jazāuhu
جَزَٰٓؤُهُۥ
"Its recompense
அதன் தண்டனை
man
مَن
(is that one) who
எவர்
wujida
وُجِدَ
it is found
காணப்பட்டது
fī raḥlihi
فِى رَحْلِهِۦ
in his bag
சுமையில்/அவருடைய
fahuwa
فَهُوَ
then he
அவரே
jazāuhu
جَزَٰٓؤُهُۥۚ
(will be) his recompense
அதற்குரிய தண்டனையாவார்
kadhālika
كَذَٰلِكَ
Thus
இவ்வாறுதான்
najzī
نَجْزِى
(do) we recompense
நாம் தண்டிப்போம்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the wrongdoers"
அநியாயக்காரர்களை

Transliteration:

Qaaloo jazaaa'uhoo manw wujida fee rahlihee fahuwa jazaaa'uh; kazaalika najziz zaalimeen (QS. Yūsuf:75)

English Sahih International:

[The brothers] said, "Its recompense is that he in whose bag it is found – he [himself] will be its recompense. Thus do we recompense the wrongdoers." (QS. Yusuf, Ayah ௭௫)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "எவனுடைய சுமையில் அது காணப்படுகிறதோ அவனே அதற்குரிய தண்டனையாவான். (ஆகவே, அவனை அடிமையாக வைத்துக் கொள்ளலாம். திருடும்) அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே நாங்கள் தண்டனை அளிப்போம்" என்று கூறினார்கள். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௭௫)

Jan Trust Foundation

அதற்குரிய தண்டனையாவது, “எவருடைய சுமையில் அது காணப்படுகிறதோ (அவரை பிடித்து வைத்துக் கொள்வதே) அதற்குத் தண்டனை; அநியாயம் செய்வோரை இவ்வாறே நாங்கள் தண்டிக்கிறோம்” என்று (அந்த சகோதரர்கள்) கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“அதன் தண்டனை எவருடைய சுமையில் (அது) காணப்படுகிறதோ அவரே அதற்குரிய தண்டனையாவார். இவ்வாறுதான் அநியாயக்காரர்களை நாம் தண்டிப்போம்” என்று கூறினர்.