Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௭௦

Qur'an Surah Yusuf Verse 70

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ جَعَلَ السِّقَايَةَ فِيْ رَحْلِ اَخِيْهِ ثُمَّ اَذَّنَ مُؤَذِّنٌ اَيَّتُهَا الْعِيْرُ اِنَّكُمْ لَسَارِقُوْنَ (يوسف : ١٢)

falammā jahhazahum
فَلَمَّا جَهَّزَهُم
So when he had furnished them
அவர் தயார்படுத்தியபோது/அவர்களுக்கு
bijahāzihim
بِجَهَازِهِمْ
with their supplies
பொருள்களை/அவர்களுடைய
jaʿala
جَعَلَ
he put
வைத்தார்
l-siqāyata
ٱلسِّقَايَةَ
the drinking cup
குவளையை
fī raḥli
فِى رَحْلِ
in the bag
சுமையில்
akhīhi
أَخِيهِ
(of) his brother
தன் சகோதரனின்
thumma
ثُمَّ
Then
பிறகு
adhana
أَذَّنَ
called out
அறிவித்தார்
mu-adhinun
مُؤَذِّنٌ
an announcer
ஓர் அறிவிப்பாளர்
ayyatuhā l-ʿīru
أَيَّتُهَا ٱلْعِيرُ
"O you (in) the caravan!
ஓ! பயணக் கூட்டத்தார்களே!
innakum
إِنَّكُمْ
Indeed you
நிச்சயமாக நீங்கள்
lasāriqūna
لَسَٰرِقُونَ
surely (are) thieves"
திருடர்கள்தான்

Transliteration:

Falammaa jahhazahum bijahaazihim ja'alas siqaayata fee rahli akheehi summa azzana mu'azzinun ayyatuhal'eeru innakum lasaariqoon (QS. Yūsuf:70)

English Sahih International:

So when he had furnished them with their supplies, he put the [gold measuring] bowl into the bag of his brother. Then an announcer called out, "O caravan, indeed you are thieves." (QS. Yusuf, Ayah ௭௦)

Abdul Hameed Baqavi:

பின்னர், அவர்களுக்கு வேண்டிய தானியங்களைத் தயார்படுத்தியபோது தன்னுடைய சகோதர(ன் புன்யாமீ)னுடைய சுமையில் (ஒரு பொற்)குவளையை வைத்துவிட்டார். பின்னர் (அவர்கள் விடை பெற்றுச் சிறிது தூரம் செல்லவே) ஒருவன் அவர்களை (நோக்கி) "ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்களாக இருக்கிறீர்கள்" என்று சப்தமிட்டான். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௭௦)

Jan Trust Foundation

பின்னர், அவர்களுடைய பொருள்களைச் சித்தம் செய்து கொடுத்த போது, தம் சகோதரர் (புன்யாமீன்) உடைய சுமையில் (பானங்கள் பருகுவதற்கான ஒரு பொற்)குவளையை (எவரும் அறியாது) வைத்து விட்டார்; (அவர்கள் புறப்பட்டுச் செல்லலானதும் அரசாங்க) அறிவிப்பாளர் ஒருவர், “ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்களே!” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு அவர்களுடைய பொருள்களை அவர் தயார்படுத்தியபோது தன் சகோதரனின் சுமையில் குவளையை வைத்தார். பிறகு, ஒரு அறிவிப்பாளர் “ஓ! பயணக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்கள்தான்”என்று அறிவித்தார்.