குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௬௯
Qur'an Surah Yusuf Verse 69
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௬௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَلَمَّا دَخَلُوْا عَلٰى يُوْسُفَ اٰوٰٓى اِلَيْهِ اَخَاهُ قَالَ اِنِّيْٓ اَنَا۠ اَخُوْكَ فَلَا تَبْتَىِٕسْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ (يوسف : ١٢)
- walammā
- وَلَمَّا
- And when
- போது
- dakhalū
- دَخَلُوا۟
- they entered
- நுழைந்தனர்
- ʿalā yūsufa
- عَلَىٰ يُوسُفَ
- upon Yusuf
- யூஸுஃபிடம்
- āwā
- ءَاوَىٰٓ
- he took
- ஒதுக்கிக் கொண்டார்
- ilayhi
- إِلَيْهِ
- to himself
- தன் பக்கம்
- akhāhu
- أَخَاهُۖ
- his brother
- தன் சகோதரனை
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- innī anā
- إِنِّىٓ أَنَا۠
- "Indeed I [I] am
- நிச்சயமாக நான்தான்
- akhūka
- أَخُوكَ
- your brother
- உம் சகோதரன்
- falā tabta-is
- فَلَا تَبْتَئِسْ
- so (do) not grieve
- ஆகவே வேதனைப்படாதே
- bimā
- بِمَا
- for what
- எதன் காரணமாக
- kānū
- كَانُوا۟
- they used (to)
- இருந்தனர்
- yaʿmalūna
- يَعْمَلُونَ
- do"
- அவர்கள்செய்வார்கள்
Transliteration:
Wa lammaa dakhaloo 'alaa Yoosufa aawaaa ilaihi akhaahu qaala inneee ana akhooka falaa tabta'is bimaa kaanoo ya'maloon(QS. Yūsuf:69)
English Sahih International:
And when they entered upon Joseph, he took his brother to himself; he said, "Indeed, I am your brother, so do not despair over what they used to do [to me]." (QS. Yusuf, Ayah ௬௯)
Abdul Hameed Baqavi:
அவர்கள் அனைவரும் யூஸுஃபிடம் சென்றபொழுது, அவர் தன் சகோதரன் புன்யாமீனை(த் தனியாக அழைத்து) அமர்த்திக்கொண்டு (அவரை நோக்கி) "நிச்சயமாக நான் உங்களுடைய சகோதரன் (யூஸுஃப்)தான். எனக்கு இவர்கள் செய்தவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்" என்று (இரகசியமாகக்) கூறினார். (அன்றி, உங்களை நிறுத்திக்கொள்ள நான் ஓர் உபாயம் செய்வேன் என்றார்.) (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௬௯)
Jan Trust Foundation
(பின்னர்) அவர்கள் யாவரும் யூஸுஃபின் பால் பிரவேசித்த போது அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னைத் தம்முடன் அமரச் செய்து “நிச்சயமாக நாம் உம்முடைய சகோதரன் (யுஸுஃப்); அவர்கள் (நமக்குச்) செய்தவை பற்றி(யெல்லாம்) விசாரப்படாதீர்” என்று (இரகசியமாகக்) கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் யூஸுஃபிடம் நுழைந்தபோது, அவர் தன் சகோதரனை தன் பக்கம் ஒதுக்கி (அனைத்து)க் கொண்டார். “நிச்சயமாக நான்தான் உம் சகோதரன். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி வேதனைப் படாதே!” என்று கூறினார்.