Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௬௮

Qur'an Surah Yusuf Verse 68

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَمَّا دَخَلُوْا مِنْ حَيْثُ اَمَرَهُمْ اَبُوْهُمْۗ مَا كَانَ يُغْنِيْ عَنْهُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَيْءٍ اِلَّا حَاجَةً فِيْ نَفْسِ يَعْقُوْبَ قَضٰىهَاۗ وَاِنَّهٗ لَذُوْ عِلْمٍ لِّمَا عَلَّمْنٰهُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ ࣖ (يوسف : ١٢)

walammā
وَلَمَّا
And when
போது
dakhalū
دَخَلُوا۟
they entered
நுழைந்தனர்
min ḥaythu
مِنْ حَيْثُ
from where
முறையில்
amarahum
أَمَرَهُمْ
ordered them
கட்டளையிட்டார் அவர்களுக்கு
abūhum
أَبُوهُم
their father
தந்தை/தங்கள்
mā kāna yugh'nī
مَّا كَانَ يُغْنِى
not it avail(ed)
தடுப்பதாக இல்லை
ʿanhum
عَنْهُم
them
அவர்களைவிட்டு
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
against Allah
அல்லாஹ்விடமிருந்து
min shayin
مِن شَىْءٍ
any thing
எதையும்
illā ḥājatan
إِلَّا حَاجَةً
but (it was) a need
ஒரு தேவை/தவிர
fī nafsi
فِى نَفْسِ
of Yaqub's soul
மனதில்
yaʿqūba
يَعْقُوبَ
Yaqub's soul
யஃகூபுடைய
qaḍāhā
قَضَىٰهَاۚ
which he carried out
நிறைவேற்றினார்/அதை
wa-innahu
وَإِنَّهُۥ
And indeed, he
நிச்சயமாக அவர்
ladhū ʿil'min
لَذُو عِلْمٍ
(was) a possessor (of) knowledge
அறிவுடையவர்
limā ʿallamnāhu
لِّمَا عَلَّمْنَٰهُ
because We had taught him
நாம் கற்பித்த காரணத்தால்/அவருக்கு
walākinna
وَلَٰكِنَّ
but
எனினும்
akthara
أَكْثَرَ
most
அதிகமானவர்(கள்)
l-nāsi
ٱلنَّاسِ
(of) the people
மக்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
(do) not know
அறியமாட்டார்கள்

Transliteration:

Wa lammaa dakhaloo min haisu amarahum aboohum maa kaana yughnee 'anhum minal laahi min shai'in illaa haajatan fee nafsi Ya'qooba qadaahaa; wa innahoo lazoo 'ilmil limaa 'allamnaahu wa laakinna aksaran naasi laa ya'lamoon (QS. Yūsuf:68)

English Sahih International:

And when they entered from where their father had ordered them, it did not avail them against Allah at all except [it was] a need [i.e., concern] within the soul of Jacob, which he satisfied. And indeed, he was a possessor of knowledge because of what We had taught him, but most of the people do not know. (QS. Yusuf, Ayah ௬௮)

Abdul Hameed Baqavi:

(எகிப்துக்குச் சென்ற) அவர்கள் தங்கள் தந்தையின் கட்டளைப்படி (வெவ்வேறு பாதைகள் வழியாக) நுழைந்ததனால் யஃகூபினுடைய மனதிலிருந்த ஒரு எண்ணத்தை, அவர்கள் நிறைவேற்றியதைத் தவிர, அல்லாஹ்வுடைய யாதொரு விஷயத்தையும் அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்க வில்லை. (ஏனென்றால், புன்யாமீனை அவர்கள் விட்டுவிட்டு வரும்படியே நேர்ந்தது.) எனினும், நிச்சயமாக நாம் அவருக்கு (யூஸுஃபும் புன்யாமீனும் உயிருடன் இருக்கின்றனர் என்ற விஷயத்தை) அறிவித்திருந்ததால், அவர் (அதனை) அறிந்த வராகவே இருந்தார். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (அதனை) அறியாதவர்களாகவே இருந்தனர். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௬௮)

Jan Trust Foundation

(மிஸ்ரு சென்ற) அவர்கள் தம் தந்தை தங்களுக்குக் கட்டளையிட்ட படி நுழைந்ததனால் யஃகூபுடைய மனதிலிருந்து ஒரு நாட்டத்தை அவர்கள் நிறைவேற்றி வைத்தார்களே தவிர, அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதனையும் அது அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை; நாம்அவருக்கு அறிவித்துக் கொடுத்தவற்றில் நிச்சயமாக அவர் அறிவு(த் தேர்ச்சி) பெற்றவராக இருக்கின்றார்; எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்கள் தந்தை கட்டளையிட்ட முறையில் நுழைந்த போது, யஅகூபுடைய மனதிலிருந்த ஒரு தேவையை அவர் நிறைவேற்றியதைத் தவிர அது அவர்களைவிட்டும் அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய வேறு) எதையும் தடுப்பதாக இல்லை. நிச்சயமாக அவர் நாம் அவருக்கு கற்பித்த காரணத்தால் அறிவுடையவர் ஆவார். ஆனால் மக்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.