Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௬௭

Qur'an Surah Yusuf Verse 67

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَ يٰبَنِيَّ لَا تَدْخُلُوْا مِنْۢ بَابٍ وَّاحِدٍ وَّادْخُلُوْا مِنْ اَبْوَابٍ مُّتَفَرِّقَةٍۗ وَمَآ اُغْنِيْ عَنْكُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَيْءٍۗ اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ ۗعَلَيْهِ تَوَكَّلْتُ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُوْنَ (يوسف : ١٢)

waqāla
وَقَالَ
And he said
இன்னும் கூறினார்
yābaniyya
يَٰبَنِىَّ
"O my sons!
என் பிள்ளைகளே
lā tadkhulū
لَا تَدْخُلُوا۟
(Do) not enter
நுழையாதீர்கள்
min bābin
مِنۢ بَابٍ
from one gate
ஒரு வாசல் வழியாக
wāḥidin
وَٰحِدٍ
one gate
ஒரே
wa-ud'khulū
وَٱدْخُلُوا۟
but enter
இன்னும் நுழையுங்கள்
min abwābin
مِنْ أَبْوَٰبٍ
from gates
வாசல்கள் வழியாக
mutafarriqatin
مُّتَفَرِّقَةٍۖ
different
பல்வேறு
wamā ugh'nī
وَمَآ أُغْنِى
And not I can avail
நான் தடுக்க முடியாது
ʿankum
عَنكُم
you
உங்களை விட்டும்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
against Allah
அல்லாஹ்விடமிருந்து
min shayin
مِن شَىْءٍۖ
any thing
எதையும்
ini l-ḥuk'mu
إِنِ ٱلْحُكْمُ
Not (is) the decision
இல்லை/அதிகாரம்
illā
إِلَّا
except
தவிர
lillahi
لِلَّهِۖ
with Allah
அல்லாஹ்வுக்கே
ʿalayhi
عَلَيْهِ
upon Him
அவன் மீதே
tawakkaltu
تَوَكَّلْتُۖ
I put my trust
நான் நம்பிக்கை வைத்து விட்டேன்
waʿalayhi
وَعَلَيْهِ
and upon Him
அவன் மீதே
falyatawakkali
فَلْيَتَوَكَّلِ
let put (their) trust
நம்பிக்கை வைக்கவும்
l-mutawakilūna
ٱلْمُتَوَكِّلُونَ
the ones who put trust"
நம்பிக்கை வைப்பவர்கள்

Transliteration:

Wa qaala yaa baniyya laa tadkhuloo mim baabinw waa hidinw wadkhuloo min abwaabim mutafarriqah; wa maaa ughnee 'ankum minal laahi min shai'in; inil hukmu illaa lillaahi 'alaihi tawakkaltu wa 'alaihi fal yatawakkalil Mutawakkiloon (QS. Yūsuf:67)

English Sahih International:

And he said, "O my sons, do not enter from one gate but enter from different gates; and I cannot avail you against [the decree of] Allah at all. The decision is only for Allah; upon Him I have relied, and upon Him let those who would rely [indeed] rely." (QS. Yusuf, Ayah ௬௭)

Abdul Hameed Baqavi:

பின்னும் (அவர்களை நோக்கி) "என் அருமை மக்களே! (எகிப்தில் நீங்கள் அனைவரும்) ஒரே வாசலில் நுழையாதீர்கள். வெவ்வேறு வாசல்கள் வழியாக (தனித் தனியாக) நுழையுங்கள். அல்லாஹ்வின் கட்டளையில் யாதொன்றையும் நான் உங்களுக்குத் தடுத்துவிட முடியாது. ஏனென்றால், எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறெவருக்கும்) இல்லை. நான் அவனிடமே பொறுப்பை ஒப்படைத்தேன். பொறுப்பை ஒப்படைக்க விரும்பு பவர்களும் அவனிடமே பொறுப்பை ஒப்படைக்கவும்" என்றார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௬௭)

Jan Trust Foundation

(பின்னும்) அவர், “என் (அருமை) மக்களே! நீங்கள் (மிஸ்ருக்குள்) ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்; வெவ்வேறு வாசல்களின் வழியாக நுழையுங்கள்; அல்லாஹ்வின் விதிகளில் யாதொன்றையும் நான் உங்களை விட்டுத்தடுத்து விட முடியாது; (ஏனென்றால்) அதிகாரமெல்லாம் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறு எவருக்கும்) இல்லை; அவன் மீதே நான் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழுமையாக நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே முழு நம்பிக்கைவைப்பார்களாக!” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“என் பிள்ளைகளே! (எகிப்தில் நுழையும் போது) ஒரே ஒரு வாசல் வழியாக நுழையாதீர்கள். (தனித் தனியாக) பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள். அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதையும் நான் உங்களை விட்டும் தடுக்க முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறெவருக்கும்) இல்லை. நான் அவன் மீதே நம்பிக்கை வைத்துவிட்டேன். நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே நம்பிக்கை வைக்கவும்”என்று கூறினார்.