Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௬௬

Qur'an Surah Yusuf Verse 66

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ لَنْ اُرْسِلَهٗ مَعَكُمْ حَتّٰى تُؤْتُوْنِ مَوْثِقًا مِّنَ اللّٰهِ لَتَأْتُنَّنِيْ بِهٖٓ اِلَّآ اَنْ يُّحَاطَ بِكُمْۚ فَلَمَّآ اٰتَوْهُ مَوْثِقَهُمْ قَالَ اللّٰهُ عَلٰى مَا نَقُوْلُ وَكِيْلٌ (يوسف : ١٢)

qāla
قَالَ
He said
கூறினார்
lan ur'silahu
لَنْ أُرْسِلَهُۥ
"Never will I send him
அனுப்பவே மாட்டேன்/அவரை
maʿakum
مَعَكُمْ
with you
உங்களுடன்
ḥattā
حَتَّىٰ
until
வரை
tu'tūni
تُؤْتُونِ
you give to me
கொடுப்பீர்கள்/எனக்கு
mawthiqan
مَوْثِقًا
a promise
ஓர் உறுதிமானத்தை
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
by Allah
அல்லாஹ்வின்
latatunnanī
لَتَأْتُنَّنِى
that surely you will bring him to me
நிச்சயமாக வருவீர்கள்/என்னிடம்
bihi
بِهِۦٓ
that surely you will bring him to me
அவரைக் கொண்டு
illā
إِلَّآ
unless
தவிர
an yuḥāṭa
أَن يُحَاطَ
that you are surrounded"
அழிவு ஏற்பட்டால்
bikum
بِكُمْۖ
you are surrounded"
உங்களுக்கு
falammā
فَلَمَّآ
And when
போது
ātawhu
ءَاتَوْهُ
they had given him
அவர்கள்கொடுத்தனர் அவருக்கு
mawthiqahum
مَوْثِقَهُمْ
their promise
தங்கள் உறுதிமானத்தை
qāla
قَالَ
he said
கூறினார்
l-lahu
ٱللَّهُ
"Allah
அல்லாஹ்வே
ʿalā mā naqūlu
عَلَىٰ مَا نَقُولُ
over what we say
நாம் கூறுவதற்கு
wakīlun
وَكِيلٌ
(is) a Guardian"
பொறுப்பாளன்/சாட்சியாளன்

Transliteration:

Qaala lan ursilahoo ma'akum hattaa tu'tooni mawsiqam minal laahis lataa tunnanee biheee illaaa nay yuhaata bikum falammaaa aatawhu mawsiqahum qaalal laahu 'alaa maa naqoolu Wakeel (QS. Yūsuf:66)

English Sahih International:

[Jacob] said, "Never will I send him with you until you give me a promise [i.e., oath] by Allah that you will bring him [back] to me, unless you should be surrounded [i.e., overcome by enemies]." And when they had given their promise, he said, "Allah, over what we say, is Entrusted." (QS. Yusuf, Ayah ௬௬)

Abdul Hameed Baqavi:

(அதற்கு அவர்களின் தந்தை) "நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன். ஆயினும், உங்கள் அனைவரையுமே (யாதொரு ஆபத்து) சூழ்ந்து கொண்டாலன்றி நிச்சயமாக அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் (அனைவரும்) எனக்குச் சத்தியம் செய்து கொடுத்தாலன்றி" என்று கூறினார். அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து கொடுக்கவே அதற்கு அவர் "நாம் செய்துகொண்ட இவ்வுடன்பாட்டிற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்" என்று (கூறி புன்யாமீனை அழைத்துச் செல்ல அனுமதியளித்தார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௬௬)

Jan Trust Foundation

அதற்கு யஃகூப் “உங்கள் யாவரையுமே (ஏதாவதோர் ஆபத்து) சூழ்ந்து (உங்களைச் சக்தியற்றவர்களாக ஆக்கிக்) கொண்டாலன்றி, நிச்சயமாக நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் எனக்குச் சத்தியம்செய்து (வாக்குறுதி) கொடுத்தாலன்றி, நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்” என்று கூறினார்; அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து (வாக்குறுதி) கொடுத்ததும் அவர் “நாம் பேசிக்கொண்டதற்கு அல்லாஹ்வே காவலனாக இருக்கின்றான்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“உங்களுக்கு அழிவு ஏற்பட்டால் தவிர நிச்சயமாக அவரை என்னிடம் நீங்கள் கொண்டு வருவீர்கள் என்று அல்லாஹ்வின் (மீது சத்தியம் செய்து) ஓர் உறுதிமானத்தை நீங்கள் எனக்கு கொடுக்கும் வரை அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்”என்று கூறினார். அவர்கள் (அவ்வாறு) அவருக்கு தங்கள் உறுதிமானத்தை கொடுக்கவே அவர் “நாம் கூறுவதற்கு அல்லாஹ்வே சாட்சியாளன் (இன்னும் பொறுப்பாளன்) ஆவான்”என்று கூறினார்.