Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௬௪

Qur'an Surah Yusuf Verse 64

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ هَلْ اٰمَنُكُمْ عَلَيْهِ اِلَّا كَمَآ اَمِنْتُكُمْ عَلٰٓى اَخِيْهِ مِنْ قَبْلُۗ فَاللّٰهُ خَيْرٌ حٰفِظًا وَّهُوَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ (يوسف : ١٢)

qāla
قَالَ
He said
கூறினார்
hal āmanukum
هَلْ ءَامَنُكُمْ
"Should I entrust you
நான் நம்புவதா?/உங்களை
ʿalayhi
عَلَيْهِ
with him
இவர் விசயத்தில்
illā kamā
إِلَّا كَمَآ
except as
தவிர/போல்
amintukum
أَمِنتُكُمْ
I entrusted you
நம்பினேன்/உங்களை
ʿalā akhīhi
عَلَىٰٓ أَخِيهِ
with his brother
இவருடைய சகோதரர் விஷயத்தில்
min qablu
مِن قَبْلُۖ
before? before?
முன்னர்
fal-lahu
فَٱللَّهُ
But Allah
அல்லாஹ்
khayrun
خَيْرٌ
(is) the best
மிக மேலானவன்
ḥāfiẓan
حَٰفِظًاۖ
Guardian
பாதுகாவலன்
wahuwa
وَهُوَ
and He
அவன்
arḥamu
أَرْحَمُ
(is the) Most Merciful
மகா கருணையாளன்
l-rāḥimīna
ٱلرَّٰحِمِينَ
(of) the merciful"
அருள் புரிபவர்களில்

Transliteration:

Qaala hal aamanukum 'alihi illaa kamaa amintukum 'alaaa akheehimin qabl; fal laahu khairun haafizanw wa Huwa arhamur Raahimeen (QS. Yūsuf:64)

English Sahih International:

He said, "Should I entrust you with him except [under coercion] as I entrusted you with his brother before? But Allah is the best guardian, and He is the most merciful of the merciful." (QS. Yusuf, Ayah ௬௪)

Abdul Hameed Baqavi:

(அதற்கு யஃகூப்) "இதற்கு முன்னர் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் நான் உங்களை நம்பி (மோசம் போ)னது போல் இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (முடியாது.) பாதுகாப்பதில் அல்லாஹ் மிக்க மேலானவன்; அவனே அருள் புரிபவர்களிலெல்லாம் மிக்க அருளாளன்" என்று கூறிவிட்டார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௬௪)

Jan Trust Foundation

அதற்கு (யஃகூப்; “இதற்கு) முன்னர் இவருடைய சகோதரர் விஷயத்தில் உங்களை நம்பியது போன்று, இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (அது முடியாது.) பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்” என்று கூறிவிட்டார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(யஅகூப்,) “முன்னர் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் நான் உங்களை நம்பியது போல் தவிர இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? அல்லாஹ் மிக மேலான பாதுகாவலன்; அருள் புரிபவர்களில் அவன் மிக அதிகம் அருள் புரிபவன்”என்று கூறினார்.