Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௬௨

Qur'an Surah Yusuf Verse 62

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَ لِفِتْيٰنِهِ اجْعَلُوْا بِضَاعَتَهُمْ فِيْ رِحَالِهِمْ لَعَلَّهُمْ يَعْرِفُوْنَهَآ اِذَا انْقَلَبُوْٓا اِلٰٓى اَهْلِهِمْ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ (يوسف : ١٢)

waqāla
وَقَالَ
And he said
கூறினார்
lifit'yānihi
لِفِتْيَٰنِهِ
to his servants
தன் வாலிபர்களிடம்
ij'ʿalū
ٱجْعَلُوا۟
"Put
வையுங்கள்
biḍāʿatahum
بِضَٰعَتَهُمْ
their merchandise
அவர்களுடைய கிரயத்தை
fī riḥālihim
فِى رِحَالِهِمْ
in their saddlebags
அவர்களுடைய மூட்டைகளில்
laʿallahum yaʿrifūnahā
لَعَلَّهُمْ يَعْرِفُونَهَآ
so that they may recognize it
அவர்கள் அறியவேண்டும்/அதை
idhā inqalabū
إِذَا ٱنقَلَبُوٓا۟
when they go back
அவர்கள் திரும்பினால்
ilā ahlihim
إِلَىٰٓ أَهْلِهِمْ
to their people
தங்கள் குடும்பத்திடம்
laʿallahum yarjiʿūna
لَعَلَّهُمْ يَرْجِعُونَ
so that they may return"
அவர்கள் திரும்பி வரவேண்டும்

Transliteration:

Wa qaala lifityaanihij 'aloo bidaa'atahum fee rihaalihim la'allahum ya'rifoonahaaa izan qalabooo ilaaa ahlihim la'allahum yarji'oon (QS. Yūsuf:62)

English Sahih International:

And [Joseph] said to his servants, "Put their merchandise into their saddlebags so they might recognize it when they have gone back to their people that perhaps they will [again] return." (QS. Yusuf, Ayah ௬௨)

Abdul Hameed Baqavi:

(பின்னர் யூஸுஃப்) தன் ஆட்களை நோக்கி "அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய (பொதி) மூட்டைகளில் (மறைத்து) வைத்துவிடுங்கள். அவர்கள் தங்கள் குடும்பம் சேர்ந்து (தானிய மூட்டைகளை அவிழ்க்கும்போது) அதனை அறிந்துகொண்டு (அதனை நம்மிடம் செலுத்தத்) திரும்பி வரக்கூடும்" என்று கூறினார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௬௨)

Jan Trust Foundation

(பின்னர் யூஸுஃப்) தம் பணியாட்களை நோக்கி, “அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய மூட்டைகளிலே வைத்து விடுங்கள்; அவர்கள் தம் குடும்பத்தாரிடம் சென்ற பிறகு இதை அறிந்தால், (நம்மிடம் அதைச் சேர்ப்பிக்க) அவர்கள் திரும்பி வரக்கூடும்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(பின்னர் யூஸுஃப்) தன் வாலிபர்களிடம் கூறினார்: “அவர்களுடைய கிரயத்தை அவர்களுடைய மூட்டைகளில் வையுங்கள். அவர்கள் தங்கள் குடும்பத்திடம் திரும்பினால் அதை அவர்கள் அறியவேண்டும், (அதை செலுத்த நம்மிடம்) அவர்கள் திரும்பி வரவேண்டும். (ஆகவே, இப்படி செய்யுங்கள்)” என்று கூறினார்.