Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௫௯

Qur'an Surah Yusuf Verse 59

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ قَالَ ائْتُوْنِيْ بِاَخٍ لَّكُمْ مِّنْ اَبِيْكُمْ ۚ اَلَا تَرَوْنَ اَنِّيْٓ اُوْفِى الْكَيْلَ وَاَنَا۠ خَيْرُ الْمُنْزِلِيْنَ (يوسف : ١٢)

walammā
وَلَمَّا
And when
போது
jahhazahum
جَهَّزَهُم
he had furnished them
தயார்படுத்தினார் அவர்களுக்கு
bijahāzihim
بِجَهَازِهِمْ
with their supplies
சாமான்களை அவர்களுடைய
qāla
قَالَ
he said
கூறினார்
i'tūnī
ٱئْتُونِى
"Bring to me
வாருங்கள் என்னிடம்
bi-akhin
بِأَخٍ
a brother
ஒரு சகோதரனைக் கொண்டு
lakum
لَّكُم
of yours
உங்களுக்குள்ள
min
مِّنْ
from
மூலமாக
abīkum
أَبِيكُمْۚ
your father
உங்கள் தந்தை
alā tarawna
أَلَا تَرَوْنَ
Do not you see
நீங்கள் கவனிக்கவில்லையா?
annī
أَنِّىٓ
that I
நிச்சயமாக நான்
ūfī
أُوفِى
[I] give full
முழுமையாக்குவேன்
l-kayla
ٱلْكَيْلَ
[the] measure
அளவையை
wa-anā khayru
وَأَنَا۠ خَيْرُ
and that I am (the) best
நான் சிறந்தவன்
l-munzilīna
ٱلْمُنزِلِينَ
(of) the hosts?
விருந்தளிப்பவர்களில்

Transliteration:

Wa lammaa jahhazahum bijahaazihim qaala' toonee bi akhil lakum min abeekum; alaa tarawna anneee oofil kaila wa ana khairul munzileen (QS. Yūsuf:59)

English Sahih International:

And when he had furnished them with their supplies, he said, "Bring me a brother of yours from your father. Do you not see that I give full measure and that I am the best of accommodators? (QS. Yusuf, Ayah ௫௯)

Abdul Hameed Baqavi:

(யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய தானியங்களை தயார்படுத்திக் கொடுத்து, (தம் சொந்த சகோதரர் புன்யாமீனின் சுகத்தை அவர்களிடம் தந்திரமாகப் பேசித் தெரிந்துகொண்டு "மறுமுறை நீங்கள் வந்தால்) தந்தை ஒன்றான உங்கள் சகோதர(ன் புன்யாமீ)னையும் அழைத்து வாருங்கள். (நீங்கள் குறைந்த கிரயம் கொடுத்தபோதிலும்) நிச்சயமாக நான் உங்களுக்கு(த் தானியங்களை) முழுமையாக அளந்து கொடுத்ததுடன், மிக்க மேலான விதத்தில் (உங்களுக்கு) விருந்து அளித்ததையும் நீங்கள் கவனிக்கவில்லையா? (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௫௯)

Jan Trust Foundation

(யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய பொருள் (தானியங்களைச்) சித்தம் செய்து கொடுத்த போது, (அவர்களை நோக்கி) “உங்கள் தந்தை வழிச் சகோதரனை (மறுமுறை நீங்கள் இங்கு வரும்போது) என்னிடம் அழைத்து வாருங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு (தானியங்களை நிரப்பமாக) அளந்து கொடுத்ததையும், விருந்துபசாரம் செய்வதில் நான் “சிறந்தவன்” என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(யூஸுஃப்) அவர்களுடைய சாமான்களை அவர்களுக்கு தயார்படுத்திய போது, (“மறுமுறை வரும் சமயம்) உங்கள் தந்தை மூலமாக உங்களுக்குள்ள ஒரு சகோதரனை என்னிடம் கொண்டு வாருங்கள். நிச்சயமாக நான் (உங்களுக்கு) அளவையை முழுமையாக்குவதையும் விருந்தளிப்பவர்களில் நான் சிறந்தவன் என்பதையும் நீங்கள் கவனிக்கவில்லையா? என்று கூறினார்.