Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௫௬

Qur'an Surah Yusuf Verse 56

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَذٰلِكَ مَكَّنَّا لِيُوْسُفَ فِى الْاَرْضِ يَتَبَوَّاُ مِنْهَا حَيْثُ يَشَاۤءُۗ نُصِيْبُ بِرَحْمَتِنَا مَنْ نَّشَاۤءُ وَلَا نُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ (يوسف : ١٢)

wakadhālika
وَكَذَٰلِكَ
And thus
இவ்வாறே
makkannā
مَكَّنَّا
We established
வசதியளித்தோம்
liyūsufa
لِيُوسُفَ
[to] Yusuf
யூஸுஃபுக்கு
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the land
அந்நாட்டில்
yatabawwa-u
يَتَبَوَّأُ
to settle
தங்கிக்கொள்வார்
min'hā
مِنْهَا
therein
அதில்
ḥaythu
حَيْثُ
where ever
இடம்
yashāu
يَشَآءُۚ
he willed
நாடுகின்றார்
nuṣību
نُصِيبُ
We bestow
நாம் தருகிறோம்
biraḥmatinā man
بِرَحْمَتِنَا مَن
Our Mercy (on) whom
நம் அருளை/எவர்
nashāu
نَّشَآءُۖ
We will
நாடுகின்றோம்
walā nuḍīʿu
وَلَا نُضِيعُ
And not We let go waste
வீணாக்க மாட்டோம்
ajra
أَجْرَ
(the) reward
கூலியை
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
(of) the good-doers
நல்லறம் புரிபவர்களின்

Transliteration:

Wa kazaalika makkannaa li Yoosufa fil ardi yatabawwa'u minhaa haisu yashaaaa'; nuseebu birahmatinaa man nashaaa'u wa laa nudee'u ajral muhsineen (QS. Yūsuf:56)

English Sahih International:

And thus We established Joseph in the land to settle therein wherever he willed. We touch with Our mercy whom We will, and We do not allow to be lost the reward of those who do good. (QS. Yusuf, Ayah ௫௬)

Abdul Hameed Baqavi:

யூஸுஃப், அந்நாட்டில் தான் விரும்பிய இடமெல்லாம் சென்று, விரும்பும் காரியங்களை செய்துவர இவ்வாறு நாம் அவருக்கு வசதியளித்தோம். நாம் விரும்பியவர்களுக்கு (இவ்வாறே) அருள்புரிகிறோம். நன்மை செய்தவர்களின் கூலியை நாம் வீணாக்குவதில்லை. (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௫௬)

Jan Trust Foundation

யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில் காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்; இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவ்வாறே யூஸுஃபுக்கு அந்நாட்டில் வசதியளித்தோம் அவர் தான் நாடிய இடத்தில் தங்கிக்கொள்வார். நாம் நாடுகின்றவர்களுக்கு நம் அருளைத் தருகின்றோம். நல்லறம் புரிபவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.