குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௫௦
Qur'an Surah Yusuf Verse 50
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِيْ بِهٖ ۚفَلَمَّا جَاۤءَهُ الرَّسُوْلُ قَالَ ارْجِعْ اِلٰى رَبِّكَ فَسْـَٔلْهُ مَا بَالُ النِّسْوَةِ الّٰتِيْ قَطَّعْنَ اَيْدِيَهُنَّ ۗاِنَّ رَبِّيْ بِكَيْدِهِنَّ عَلِيْمٌ (يوسف : ١٢)
- waqāla
- وَقَالَ
- And said
- கூறினார்
- l-maliku
- ٱلْمَلِكُ
- the king
- அரசர்
- i'tūnī
- ٱئْتُونِى
- "Bring him to me"
- வாருங்கள்/என்னிடம்
- bihi
- بِهِۦۖ
- "Bring him to me"
- அவரைக் கொண்டு
- falammā
- فَلَمَّا
- But when
- வந்த போது
- jāahu
- جَآءَهُ
- came to him
- வந்த போது அவரிடம்
- l-rasūlu
- ٱلرَّسُولُ
- the messenger
- தூதர்
- qāla
- قَالَ
- he said
- கூறினார்
- ir'jiʿ
- ٱرْجِعْ
- "Return
- நீ திரும்பிச் செல்
- ilā rabbika
- إِلَىٰ رَبِّكَ
- to your lord
- உன் எஜமானனிடம்
- fasalhu
- فَسْـَٔلْهُ
- and ask him
- கேள்/அவரை
- mā bālu
- مَا بَالُ
- what (is the) case
- விஷயமென்ன?
- l-nis'wati
- ٱلنِّسْوَةِ
- (of) the women
- பெண்களின்
- allātī qaṭṭaʿna
- ٱلَّٰتِى قَطَّعْنَ
- who cut
- எவர்கள்/வெட்டினர்
- aydiyahunna
- أَيْدِيَهُنَّۚ
- their hands
- தங்கள் கைகளை
- inna rabbī
- إِنَّ رَبِّى
- Indeed my Lord
- நிச்சயமாக என் இறைவன்
- bikaydihinna
- بِكَيْدِهِنَّ
- of their plot
- சூழ்ச்சியை அவர்களின்
- ʿalīmun
- عَلِيمٌ
- (is) All-Knower"
- நன்கறிந்தவன்
Transliteration:
Wa qaalal maliku'toonee bihee falammaa jaaa'ahur rasoolu qaalar-ji ilaa rabbika fas'alhu maa baalun niswatil laatee qatta'na aydiyahunn; inna Rabbee bikaidihinna 'Aleem(QS. Yūsuf:50)
English Sahih International:
And the king said, "Bring him to me." But when the messenger came to him, [Joseph] said, "Return to your master and ask him what is the case of the women who cut their hands. Indeed, my Lord is Knowing of their plan." (QS. Yusuf, Ayah ௫௦)
Abdul Hameed Baqavi:
(யூஸுஃப் நபி கூறியவற்றை அரசரிடம் வந்து அவன் விபரமாக அறிவித்தான்.) அதற்கு அரசர் "(இவ்வியாக்கியானம் கூறிய) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்" எனக் கட்டளையிட்டார். அவருடைய தூதர் யூஸுஃபிடம் (அவரை அழைத்துச்) செல்ல (வர)வே (அவர் தூதருடன் செல்ல மறுத்து அவரை நோக்கி) "நீங்கள் உங்கள் எஜமானனிடம் திரும்பி சென்று, தங்களுடைய கை (விரல்)களை வெட்டிக்கொண்ட பெண்களின் (உண்மை) விஷயமென்ன? (எதற்காக அப்பெண்கள் தங்கள் கைகளை வெட்டிக் கொண்டனர்?) என்று அவரைக் கேளுங்கள். நிச்சயமாக அந்தப் பெண்களின் சூழ்ச்சியை என் இறைவன் நன்கறிந்தவன்" என்று கூறினார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௫௦)
Jan Trust Foundation
(“இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று அரசர் கூறினார்; (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்தபோது அவர், “நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று, “தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?” என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இவ்விளக்கத்தை அரசரிடம் அறிவிக்கவே) அரசர் “(இதைக் கூறிய) அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்” எனக் கூறினார். (அழைத்துச் செல்ல) தூதர் அவரிடம் வந்தபோது அவர் (தூதருடன் செல்ல மறுத்து) “நீ உன் எஜமானனிடம் திரும்பிச் செல். தங்கள் கை(விரல்)களை வெட்டிய பெண்களின் (உண்மை) விஷயமென்ன? என்று அவரைக் கேள். நிச்சயமாக என் இறைவன் அவர்களின் சூழ்ச்சியை நன்கறிந்தவன்”என்று கூறினார்.