குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௫
Qur'an Surah Yusuf Verse 5
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ يٰبُنَيَّ لَا تَقْصُصْ رُءْيَاكَ عَلٰٓى اِخْوَتِكَ فَيَكِيْدُوْا لَكَ كَيْدًا ۗاِنَّ الشَّيْطٰنَ لِلْاِنْسَانِ عَدُوٌّ مُّبِيْنٌ (يوسف : ١٢)
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- yābunayya
- يَٰبُنَىَّ
- "O my son!
- என்னருமை மகனே
- lā taqṣuṣ
- لَا تَقْصُصْ
- (Do) not relate
- விவரிக்காதே
- ru'yāka
- رُءْيَاكَ
- your vision
- உன் கனவை
- ʿalā ikh'watika
- عَلَىٰٓ إِخْوَتِكَ
- to your brothers
- உன் சகோதரர்களிடம்
- fayakīdū
- فَيَكِيدُوا۟
- lest they plan
- சூழ்ச்சி செய்வார்கள்
- laka
- لَكَ
- against you
- உனக்கு
- kaydan
- كَيْدًاۖ
- a plot
- ஒரு சூழ்ச்சியை
- inna l-shayṭāna
- إِنَّ ٱلشَّيْطَٰنَ
- Indeed the Shaitaan
- நிச்சயமாக ஷைத்தான்
- lil'insāni
- لِلْإِنسَٰنِ
- (is) to man
- மனிதனுக்கு
- ʿaduwwun
- عَدُوٌّ
- an enemy
- எதிரி
- mubīnun
- مُّبِينٌ
- open
- பகிரங்கமான(வன்)
Transliteration:
Qaala yaa bunaiya laa taqsus ru'yaaka 'alaaa ikhwatika fayakeedoo laka kaidaa; innash Shaitaana lil insaani 'aduwwum mubeen(QS. Yūsuf:5)
English Sahih International:
He said, "O my son, do not relate your vision to your brothers or they will contrive against you a plan. Indeed Satan, to man, is a manifest enemy. (QS. Yusuf, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
(யஃகூப் நபி யூஸுஃபை நோக்கி) "என் அருமைக் குழந்தையே! நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே. (அவ்வாறு கூறினால்,) அவர்கள் உனக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (சதி செய்யுமாறு அவர்களை அவன் தூண்டக்கூடும்)" என்று கூறினார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௫)
Jan Trust Foundation
“என் அருமை மகனே! உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு(த் தீங்கிழைக்க) சதி செய்வார்கள்; ஏனெனில் (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“என்னருமை மகனே! உன் கனவை உன் சகோதரர்களிடம் விவரிக்காதே. அவர்கள் உனக்கொரு சூழ்ச்சியை சூழ்ச்சி செய்வார்கள். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்கமான எதிரியாவான்” என்று (யஅகூப்) கூறினார்.