குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௪௭
Qur'an Surah Yusuf Verse 47
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ تَزْرَعُوْنَ سَبْعَ سِنِيْنَ دَاَبًاۚ فَمَا حَصَدْتُّمْ فَذَرُوْهُ فِيْ سُنْۢبُلِهٖٓ اِلَّا قَلِيْلًا مِّمَّا تَأْكُلُوْنَ (يوسف : ١٢)
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- tazraʿūna
- تَزْرَعُونَ
- "You will sow
- விவசாயம்செய்வீர்கள்
- sabʿa sinīna
- سَبْعَ سِنِينَ
- (for) seven years
- ஏழு ஆண்டுகள்
- da-aban
- دَأَبًا
- as usual
- வழக்கமாக
- famā ḥaṣadttum
- فَمَا حَصَدتُّمْ
- and that which you reap
- எதை/அறுவடை செய்தீர்
- fadharūhu
- فَذَرُوهُ
- so leave it
- விட்டு விடுங்கள்/அதை
- fī sunbulihi
- فِى سُنۢبُلِهِۦٓ
- in its ears
- அதன் கதிரிலேயே
- illā qalīlan
- إِلَّا قَلِيلًا
- except a little
- கொஞ்சத்தை தவிர
- mimmā takulūna
- مِّمَّا تَأْكُلُونَ
- from which you (will) eat
- நீங்கள் புசிப்பதற்குத் தேவையான
Transliteration:
Qaala tazra'oona sab'a sineena da aban famaa basattum fazaroohu fee sumbu liheee illaa qaleelam mimmaa taakuloon(QS. Yūsuf:47)
English Sahih International:
[Joseph] said, "You will plant for seven years consecutively; and what you harvest leave in its spikes, except a little from which you will eat. (QS. Yusuf, Ayah ௪௭)
Abdul Hameed Baqavi:
அதற்கவர் கூறியதாவது: "தொடர்ந்து (வழக்கம் போல் நல்லவிதமாக) ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள். அதில் நீங்கள் அறுவடை செய்யும் விளைச்சல்களில் நீங்கள் புசிப்பதற்கு வேண்டிய ஒரு சொற்ப அளவைத்தவிர மற்ற அனைத்தையும் அதன் கதிர்களிலேயே விட்டு வையுங்கள். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௪௭)
Jan Trust Foundation
“நீங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு (நல்லபடியாக) விவசாயம் செய்வீர்கள்; பிறகு நீங்கள் அறுவடை செய்த - (விளைச்ச)லில், நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சிறிய அளவைத்தவிர, அதனை அதற்குரிய கதிர்களிலேயே விட்டு வையுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(யூஸுஃப்) கூறினார்: “வழக்கமாக ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள். நீங்கள் புசிப்பதற்குத் தேவையான கொஞ்சத்தைத் தவிர நீங்கள் அறுவடை செய்ததை அதன் கதிரிலேயே விட்டு விடுங்கள்.