Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௪௬

Qur'an Surah Yusuf Verse 46

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يُوْسُفُ اَيُّهَا الصِّدِّيْقُ اَفْتِنَا فِيْ سَبْعِ بَقَرٰتٍ سِمَانٍ يَّأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعِ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ يٰبِسٰتٍۙ لَّعَلِّيْٓ اَرْجِعُ اِلَى النَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُوْنَ (يوسف : ١٢)

yūsufu
يُوسُفُ
Yusuf
யூஸுஃபே!
ayyuhā l-ṣidīqu
أَيُّهَا ٱلصِّدِّيقُ
O the truthful one!
உண்மையாளரே!
aftinā
أَفْتِنَا
Explain to us
விளக்கம் தருவீராக/எங்களுக்கு
fī sabʿi baqarātin
فِى سَبْعِ بَقَرَٰتٍ
about (the) seven cows
ஏழுபசுக்கள்பற்றியும்
simānin
سِمَانٍ
fat
கொழுத்தவை
yakuluhunna
يَأْكُلُهُنَّ
eating them
புசிக்கின்றன/அவற்றை
sabʿun
سَبْعٌ
seven
ஏழு
ʿijāfun
عِجَافٌ
lean ones
இளைத்தவை
wasabʿi
وَسَبْعِ
and seven
இன்னும் ஏழு
sunbulātin
سُنۢبُلَٰتٍ
ears (of corn)
கதிர்கள்
khuḍ'rin
خُضْرٍ
green
பசுமையானவை
wa-ukhara
وَأُخَرَ
and other
இன்னும் மற்றவை
yābisātin
يَابِسَٰتٍ
dry
காய்ந்தவை
laʿallī arjiʿu
لَّعَلِّىٓ أَرْجِعُ
that I may return
நான் திரும்பி செல்லவேண்டும்
ilā l-nāsi
إِلَى ٱلنَّاسِ
to the people
மக்களிடம்
laʿallahum yaʿlamūna
لَعَلَّهُمْ يَعْلَمُونَ
so that they may know"
அவர்கள் அறியவேண்டும்

Transliteration:

Yoosufu ayyuhas siddee qu aftinaa fee sab'i baqaraatin simaaniny yaakuluhunna sab'un 'ijaafunw wa sabi'i sumbulaatin khudrinw wa ukhara yaabisaatil la'alleee arj'u ilan naasi la'allahum ya'lamoon (QS. Yūsuf:46)

English Sahih International:

[He said], "Joseph, O man of truth, explain to us about seven fat cows eaten by seven [that were] lean, and seven green spikes [of grain] and others [that were] dry – that I may return to the people [i.e., the king and his court]; perhaps they will know [about you]." (QS. Yusuf, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

(அவன் சிறைக்கூடம் சென்று யூஸுஃபை நோக்கி "கனவுகளுக்கு) உண்மை (யான வியாக்கியானம்) கூறுங்கள். யூஸுஃபே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதைப் போலும், முதிர்ந்து விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் (சாவியாகிய) காய்ந்த மற்ற ஏழு கதிர்களையும் (கனவில் கண்டால் அதன் பலன் என்ன? அதனை) நீங்கள் எமக்கு அறிவியுங்கள் (என்னை அனுப்பிய) மக்கள் (இதனைத்) தெரிந்து கொள்வதற்காக அவர்களிடம் நான் செல்ல வேண்டியது இருக்கின்றது" என்று கூறினான். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௪௬)

Jan Trust Foundation

(சிறையில் யூஸுஃபை கண்ட) அவர், “யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; பசுமையான ஏழு கதிர்களையும் வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகிவிட்ட) கதிர்களையும் (கனவில் கண்டால் அக்கனவுக்குப் பலன் என்ன என்பதை) எனக்கு அறிவிப்பீராக; மக்கள் அறிந்து கொள்வதற்காக அவர்களிடம் திரும்பிப் போய்(ச் சொல்ல) வேண்டியிருக்கிறது” (என்று கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யூஸுஃபே! உண்மையாளரே! (அரசர் கனவில் பார்த்த) கொழுத்த ஏழு பசுக்கள் _ அவற்றை இளைத்த ஏழு பசுக்கள் புசிக்கின்றன _ (அது) பற்றியும் பசுமையான ஏழு கதிர்கள், காய்ந்த மற்ற (ஏழு) கதிர்கள் பற்றியும் எங்களுக்கு விளக்கம் தருவீராக! நான் மக்களிடம் திரும்பி செல்லவேண்டும். அவர்கள் (இதன் விளக்கத்தை) அறியவேண்டும்.