Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௪௫

Qur'an Surah Yusuf Verse 45

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَقَالَ الَّذِيْ نَجَا مِنْهُمَا وَادَّكَرَ بَعْدَ اُمَّةٍ اَنَا۠ اُنَبِّئُكُمْ بِتَأْوِيْلِهٖ فَاَرْسِلُوْنِ (يوسف : ١٢)

waqāla
وَقَالَ
But said
கூறினான்
alladhī
ٱلَّذِى
the one who
எவன்
najā
نَجَا
was saved
தப்பித்தான்
min'humā
مِنْهُمَا
of the two
அவ்விருவரில்
wa-iddakara
وَٱدَّكَرَ
and remembered
இன்னும் நினைவு கூர்ந்தான்
baʿda ummatin
بَعْدَ أُمَّةٍ
after a period
பின்னர்/சில ஆண்டு
anā
أَنَا۠
"I
நான்
unabbi-ukum
أُنَبِّئُكُم
[I] will inform you
அறிவிப்பேன்/ உங்களுக்கு
bitawīlihi
بِتَأْوِيلِهِۦ
of its interpretation
அவருடைய விளக்கத்தை
fa-arsilūni
فَأَرْسِلُونِ
so send me forth
ஆகவே அனுப்புங்கள்/என்னை

Transliteration:

Wa qaalal lazee najaa minhumaa waddakara ba'da ummatin ana unabbi'ukum bitalweelihee fa-arsiloon (QS. Yūsuf:45)

English Sahih International:

But the one who was freed and remembered after a time said, "I will inform you of its interpretation, so send me forth." (QS. Yusuf, Ayah ௪௫)

Abdul Hameed Baqavi:

(யூஸுஃபின் சிறைத்) தோழர்கள் இருவரில் விடுதலை அடைந்தவன் பல ஆண்டுகளுக்குப் பின்னர் (அச்சமயம் அவரை) நினைத்து (அவர் தன் கனவுக்குக்கூறிய வியாக்கியானம் முற்றிலும் சரிவர நடைபெற்றதையும் எண்ணி, அரசரை நோக்கி) "அரசரது கனவின் வியாக்கியானத்தை நான் உங்களுக்கு அறிவிக்க முடியும். என்னை (சிறைக் கூடத்திலுள்ள யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்" என்று கூறினான். (அவ்வாறே அரசரும் யூஸுஃபிடம் அவனை அனுப்பி வைத்தார்.) (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௪௫)

Jan Trust Foundation

அவ்விருவரில் (சிறையிலிருந்து) விடுதலையடைந்திருந்தவர், நீண்ட காலத்திற்குப் பின்னர், (யூஸுஃபை) நினைவு கூர்ந்து “இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன், என்னை (யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்” என்று சொன்னார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவ்விருவரில் தப்பித்தவன் கூறினான்: சில ஆண்டுகளுக்குப் பின்னர் (யூஸுஃபை) அவன் நினைவு கூர்ந்தான் “நான் அவருடைய (கனவின்) விளக்கத்தை உங்களுக்கு அறிவிப்பேன். ஆகவே, என்னை (சிறையிலுள்ள யூஸுஃபிடம்) அனுப்புங்கள்.”