குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௪௩
Qur'an Surah Yusuf Verse 43
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالَ الْمَلِكُ اِنِّيْٓ اَرٰى سَبْعَ بَقَرٰتٍ سِمَانٍ يَّأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعَ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ يٰبِسٰتٍۗ يٰٓاَيُّهَا الْمَلَاُ اَفْتُوْنِيْ فِيْ رُؤْيَايَ اِنْ كُنْتُمْ لِلرُّءْيَا تَعْبُرُوْنَ (يوسف : ١٢)
- waqāla
- وَقَالَ
- And said
- கூறினார்
- l-maliku
- ٱلْمَلِكُ
- the king
- அரசர்
- innī
- إِنِّىٓ
- "Indeed I
- நிச்சயமாக நான்
- arā
- أَرَىٰ
- [I] have seen
- கனவில் கண்டேன்
- sabʿa
- سَبْعَ
- seven
- ஏழு
- baqarātin
- بَقَرَٰتٍ
- cows
- பசுக்கள்
- simānin
- سِمَانٍ
- fat
- கொழுத்தவை
- yakuluhunna
- يَأْكُلُهُنَّ
- eating them
- புசிக்கின்றன/அவற்றை
- sabʿun
- سَبْعٌ
- seven
- ஏழு
- ʿijāfun
- عِجَافٌ
- lean ones
- இளைத்தவை
- wasabʿa
- وَسَبْعَ
- and seven
- இன்னும் ஏழு
- sunbulātin
- سُنۢبُلَٰتٍ
- ears (of corn)
- கதிர்களை
- khuḍ'rin
- خُضْرٍ
- green
- பசுமையானவை
- wa-ukhara
- وَأُخَرَ
- and other
- இன்னும் வேறு
- yābisātin
- يَابِسَٰتٍۖ
- dry
- காய்ந்தவை
- yāayyuhā l-mala-u
- يَٰٓأَيُّهَا ٱلْمَلَأُ
- O chiefs!
- பிரமுகர்களே
- aftūnī
- أَفْتُونِى
- Explain to me
- விளக்கம் தாருங்கள்/எனக்கு
- fī ru'yāya
- فِى رُءْيَٰىَ
- about my vision
- என் கனவில்
- in kuntum
- إِن كُنتُمْ
- if you can
- இருந்தீர்களானால்
- lilrru'yā
- لِلرُّءْيَا
- of visions
- கனவிற்கு
- taʿburūna
- تَعْبُرُونَ
- interpret"
- வியாக்கியானம் கூறுகிறீர்கள்
Transliteration:
Wa qaalal maliku inneee araa sab'a baqaraatin simaaniny yaakuluhunna sab'un 'ijaafunw wa sab'a sumbulaatinkhudrinw wa ukhara yaabisaat; yaaa ayuhal mala-u aftoonee fee nu'yaaya in kuntum lirru'yaa ta'buroon(QS. Yūsuf:43)
English Sahih International:
And [subsequently] the king said, "Indeed, I have seen [in a dream] seven fat cows being eaten by seven [that were] lean, and seven green spikes [of grain] and others [that were] dry. O eminent ones, explain to me my vision, if you should interpret visions." (QS. Yusuf, Ayah ௪௩)
Abdul Hameed Baqavi:
(ஒரு நாளன்று) எகிப்தின் அரசர் (தன் பிரதானிகளை நோக்கி) "என் பிரதானிகளே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்து உலர்ந்த (சாவியான ஏழு) வேறு கதிர்களையும் என் கனவில் கண்டேன். என் பிரதானிகளே! நீங்கள் கனவுகளுக்கு வியாக்கியானம் கூறக் கூடியவர்களாக இருந்தால் என்னுடைய இக்கனவின் பலனை அறிவியுங்கள்" என்று கூறினார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௪௩)
Jan Trust Foundation
நான் ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; ஏழு பசுமையான கதிர்களையும், வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகி விட்ட) கதிர்களையும் திடமாக நான் கனவில் கண்டேன்; பிரதானிகளே! நீங்கள் கனவு விளக்கம் கூறக் கூடியவர்களாக இருந்தால், என்னுடைய (இக்)கனவின் பலனை எனக்கு அறிவியுங்கள்” என்று (தம் பிரதானிகளையழைத்து எகிப்து நாட்டு) அரசர் கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(எகிப்தின்) அரசர் கூறினார்: “கொழுத்த ஏழு பசுக்களை, அவற்றை இளைத்த ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்த வேறு (கதிர்களையும்) நிச்சயமாக என் கனவில் கண்டேன். என் பிரமுகர்களே! நீங்கள் கனவுக்கு வியாக்கியானம் கூறுபவர்களாக இருந்தீர்களானால் என் கனவிற்கு எனக்கு விளக்கம் தாருங்கள்,”