Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௪௧

Qur'an Surah Yusuf Verse 41

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰصَاحِبَيِ السِّجْنِ اَمَّآ اَحَدُكُمَا فَيَسْقِيْ رَبَّهٗ خَمْرًا ۗوَاَمَّا الْاٰخَرُ فَيُصْلَبُ فَتَأْكُلُ الطَّيْرُ مِنْ رَّأْسِهٖ ۗ قُضِيَ الْاَمْرُ الَّذِيْ فِيْهِ تَسْتَفْتِيٰنِۗ (يوسف : ١٢)

yāṣāḥibayi
يَٰصَىٰحِبَىِ
O my two companions
என் இரு தோழர்களே
l-sij'ni
ٱلسِّجْنِ
(of) the prison!
சிறை
ammā
أَمَّآ
As for
ஆக
aḥadukumā
أَحَدُكُمَا
one of you
உங்களிருவரில் ஒருவன்
fayasqī
فَيَسْقِى
he will give drink
புகட்டுவான்
rabbahu
رَبَّهُۥ
(to) his master
தன் எஜமானனுக்கு
khamran
خَمْرًاۖ
wine
மது
wa-ammā
وَأَمَّا
and as for
ஆக
l-ākharu
ٱلْءَاخَرُ
the other
மற்றவன்
fayuṣ'labu
فَيُصْلَبُ
he will be crucified
கழுமரத்தில் அறையப்படுவான்
fatakulu
فَتَأْكُلُ
and will eat
தின்னும்
l-ṭayru
ٱلطَّيْرُ
the birds
பறவைகள்
min rasihi
مِن رَّأْسِهِۦۚ
from his head
அவனுடையதலையில்
quḍiya
قُضِىَ
Has been decreed
விதிக்கப்பட்டது
l-amru
ٱلْأَمْرُ
the matter
காரியம்
alladhī
ٱلَّذِى
about which
எது
fīhi
فِيهِ
about which
அதில்
tastaftiyāni
تَسْتَفْتِيَانِ
you both inquire"
விளக்கம் கேட்கிறீர்கள்

Transliteration:

Yaa saahibayis sijni ammaaa ahadukumaa fa yasqee rabbahoo khamranw wa ammal aakharu fa yuslabu fataakulut tairu mir raasih; qudiyal amrul lazee feehi tastaftiyaan (QS. Yūsuf:41)

English Sahih International:

O two companions of prison, as for one of you, he will give drink to his master of wine; but as for the other, he will be crucified, and the birds will eat from his head. The matter has been decreed about which you both inquire." (QS. Yusuf, Ayah ௪௧)

Abdul Hameed Baqavi:

(பின்னும் அவர்களை நோக்கி) "சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) "உங்களில் ஒருவன் (விடுதலையடைந்து அவன் முன் செய்து கொண்டிருந்த வேலையையும் ஒப்புக்கொண்டு, முன் போலவே) தன் எஜமானனுக்குத் திராட்சை ரஸம் புகட்டிக் கொண்டிருப்பான். மற்றவனோ தூக்கிலிடப்பட்டு அவன் தலையை (காகம், கழுகு போன்ற) பறவைகள் (கொத்திக் கொத்தித்) தின்னும். நீங்கள் வியாக்கியானங்கோரிய (கனவுகளின்) பலன் விதிக்கப்பட்டு விட்டது. (அவ்வாறு நடந்தே தீரும்" என்று கூறினார்.) (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௪௧)

Jan Trust Foundation

“சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன|) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது” (என்று யூஸுஃப் கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“என் இரு சிறைத் தோழர்களே! “ஆக, உங்களில் ஒருவன் தன் எஜமானனுக்கு மதுவை புகட்டுவான். ஆக, மற்றவன் கழுமரத்தில் அறையப்படுவான். அவனுடைய தலையில் பறவைகள் (கொத்தித்) தின்னும். நீங்கள் விளக்கம் கேட்டது விதிக்கப்பட்(டு விட்)டது.