Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௪௦

Qur'an Surah Yusuf Verse 40

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِهٖٓ اِلَّآ اَسْمَاۤءً سَمَّيْتُمُوْهَآ اَنْتُمْ وَاٰبَاۤؤُكُمْ مَّآ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍۗ اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ ۗاَمَرَ اَلَّا تَعْبُدُوْٓا اِلَّآ اِيَّاهُ ۗذٰلِكَ الدِّيْنُ الْقَيِّمُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ (يوسف : ١٢)

mā taʿbudūna
مَا تَعْبُدُونَ
Not you worship
நீங்கள் வணங்குவதில்லை
min dūnihi
مِن دُونِهِۦٓ
besides Him besides Him
அவனையன்றி
illā
إِلَّآ
but
தவிர
asmāan
أَسْمَآءً
names
பெயர்களை
sammaytumūhā
سَمَّيْتُمُوهَآ
which you have named them
சூட்டினீர்கள்/ அவற்றை
antum
أَنتُمْ
you
நீங்களும்
waābāukum
وَءَابَآؤُكُم
and your forefathers
இன்னும் மூதாதைகளும் உங்கள்
mā anzala
مَّآ أَنزَلَ
not (has) sent down
இறக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
bihā
بِهَا
for it
இவற்றுக்கு
min
مِن
any
எவ்வித
sul'ṭānin
سُلْطَٰنٍۚ
authority
ஆதாரத்தை
ini l-ḥuk'mu
إِنِ ٱلْحُكْمُ
Not (is) the command
இல்லை/அதிகாரம்
illā
إِلَّا
but
தவிர
lillahi
لِلَّهِۚ
for Allah
அல்லாஹ்விற்கே
amara
أَمَرَ
He has commanded
கட்டளையிட்டான்
allā taʿbudū
أَلَّا تَعْبُدُوٓا۟
that not you worship
நிச்சயமாக வணங்காதீர்கள்
illā
إِلَّآ
but
தவிர
iyyāhu
إِيَّاهُۚ
Him Alone
அவனை
dhālika
ذَٰلِكَ
That
இது
l-dīnu
ٱلدِّينُ
(is) the religion
மார்க்கம்
l-qayimu
ٱلْقَيِّمُ
the right
நேரானது
walākinna
وَلَٰكِنَّ
but
எனினும்
akthara
أَكْثَرَ
most
அதிகமானவர்(கள்)
l-nāsi
ٱلنَّاسِ
[the] men
மக்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
(do) not know
அறியமாட்டார்கள்

Transliteration:

Maa ta'budoona min doonihee illaaa asmaaa'an sam maitumoohaaa antum wa aabaaa'ukum maaa anzalal laahu bihaa min sultan; inilhukmu illaa lillaah; amara allaa ta'budooo illaaa iyyaah; zaalikad deenul qaiyimu wa laakinna aksaran naasi laa ya'lamoon (QS. Yūsuf:40)

English Sahih International:

You worship not besides Him except [mere] names you have named them, you and your fathers, for which Allah has sent down no evidence. Legislation is not but for Allah. He has commanded that you worship not except Him. That is the correct religion, but most of the people do not know. (QS. Yusuf, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவை அனைத்தும், நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்துக்கொண்ட வெறும் (கற்பனைப்) பெயர்களைத் தவிர (உண்மையில் அவை ஒன்றுமே) இல்லை. அல்லாஹ் இதற்கு யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவுமில்லை; எல்லா அதிகாரங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே யன்றி (மற்றெவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (மற்ற எவற்றையும்) நீங்கள் வணங்கக்கூடாதென்று அவனே கட்டளை இட்டிருக்கின்றான். இதுதான் நேரான மார்க்கம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்து கொள்ளவில்லை" (என்று யூஸுஃப் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து,) (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௪௦)

Jan Trust Foundation

“அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்களும் உங்கள் மூதாதைகளும் பெயர் சூட்டிய பெயர்களைத் தவிர அவனை அன்றி (வேறு எதையும்) நீங்கள் வணங்குவதில்லை. அல்லாஹ் இவற்றுக்கு எவ்வித ஆதாரத்தையும் இறக்கவில்லை. அதிகாரம் அல்லாஹ்விற்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (மற்றவற்றை) நிச்சயமாக வணங்காதீர்கள் என்று அவன் கட்டளையிட்டான். இதுதான் நேரான மார்க்கம். எனினும், மக்களில் அதிகமானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.”