Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௪

Qur'an Surah Yusuf Verse 4

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰٓاَبَتِ اِنِّيْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ لِيْ سٰجِدِيْنَ (يوسف : ١٢)

idh qāla
إِذْ قَالَ
When said
சமயம்/கூறினார்
yūsufu
يُوسُفُ
Yusuf
யூஸுஃப்
li-abīhi
لِأَبِيهِ
to his father
தன் தந்தைக்கு
yāabati
يَٰٓأَبَتِ
"O my father!
என் தந்தையே
innī
إِنِّى
Indeed, I
நிச்சயமாக நான்
ra-aytu
رَأَيْتُ
I saw
கனவில் கண்டேன்
aḥada ʿashara
أَحَدَ عَشَرَ
eleven eleven
பதினொரு
kawkaban
كَوْكَبًا
star(s)
நட்சத்திரத்தை
wal-shamsa
وَٱلشَّمْسَ
and the sun
இன்னும் சூரியன்
wal-qamara
وَٱلْقَمَرَ
and the moon
இன்னும் சந்திரன்
ra-aytuhum
رَأَيْتُهُمْ
I saw them
அவற்றை நான் கனவில் கண்டேன்
لِى
to me
எனக்கு
sājidīna
سَٰجِدِينَ
prostrating"
சிரம் பணியக்கூடியவையாக

Transliteration:

Iz qaala Yoosufu li abeehi yaaa abati innee ra aytu ahada 'ashara kawkabanw wash shamsa walqamara ra aytuhum lee saajideen (QS. Yūsuf:4)

English Sahih International:

[Of these stories mention] when Joseph said to his father, "O my father, indeed I have seen [in a dream] eleven stars and the sun and the moon; I saw them prostrating to me." (QS. Yusuf, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

யூஸுஃப் (நபி, யஃகூப் நபியாகிய) தன் தந்தையை நோக்கி "என் தந்தையே! பதினொரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் எனக்குச் சிரம் பணிய மெய்யாகவே நான் (கனவு) கண்டேன்" என்று கூறிய சமயத்தில், (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௪)

Jan Trust Foundation

யூஸுஃப் தம் தந்தையாரிடம்| “என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்” என்று கூறியபொழுது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

யூஸுஃப் தன் தந்தைக்கு “என் தந்தையே! நிச்சயமாக நான் பதினொரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் கனவில் கண்டேன். எனக்குச் சிரம் பணியக்கூடியவையாக அவற்றை நான் கனவில் கண்டேன்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருவீராக.