குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௩௭
Qur'an Surah Yusuf Verse 37
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ لَا يَأْتِيْكُمَا طَعَامٌ تُرْزَقٰنِهٖٓ اِلَّا نَبَّأْتُكُمَا بِتَأْوِيْلِهٖ قَبْلَ اَنْ يَّأْتِيَكُمَا ۗذٰلِكُمَا مِمَّا عَلَّمَنِيْ رَبِّيْۗ اِنِّيْ تَرَكْتُ مِلَّةَ قَوْمٍ لَّا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَۙ (يوسف : ١٢)
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- lā yatīkumā
- لَا يَأْتِيكُمَا
- "Not (will) come to both of you
- வராது/உங்களிடம்
- ṭaʿāmun
- طَعَامٌ
- food
- ஓர் உணவு
- tur'zaqānihi
- تُرْزَقَانِهِۦٓ
- you are provided with
- உணவளிக் கப்படுகிறீர்கள்/அதை
- illā nabbatukumā
- إِلَّا نَبَّأْتُكُمَا
- but I will inform both of you
- தவிர/அறிவித்தேன்/உங்கள் இருவருக்கும்
- bitawīlihi
- بِتَأْوِيلِهِۦ
- of its interpretation
- அதன் விளக்கத்தை
- qabla
- قَبْلَ
- before
- முன்னர்
- an yatiyakumā
- أَن يَأْتِيَكُمَاۚ
- [that] [it] comes to both of you
- அது வருவதற்கு/உங்கள் இருவருக்கும்
- dhālikumā
- ذَٰلِكُمَا
- That
- இது
- mimmā
- مِمَّا
- (is) of what
- இருந்து/எவை
- ʿallamanī
- عَلَّمَنِى
- has taught me
- கற்பித்தான்/எனக்கு
- rabbī
- رَبِّىٓۚ
- my Lord
- என் இறைவன்
- innī
- إِنِّى
- Indeed I
- நிச்சயமாக நான்
- taraktu
- تَرَكْتُ
- [I] abandon
- விட்டுவிட்டேன்
- millata
- مِلَّةَ
- (the) religion
- மார்க்கத்தை
- qawmin
- قَوْمٍ
- (of) a people
- மக்களுடைய
- lā yu'minūna
- لَّا يُؤْمِنُونَ
- not they believe
- நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
- bil-lahi
- بِٱللَّهِ
- in Allah
- அல்லாஹ்வை
- wahum
- وَهُم
- and they
- இன்னும் அவர்கள்
- bil-ākhirati
- بِٱلْءَاخِرَةِ
- in the Hereafter
- மறுமையை
- hum kāfirūna
- هُمْ كَٰفِرُونَ
- [they] (are) disbelievers
- அவர்கள் நிராகரிக்கின்றார்கள்
Transliteration:
Qaala laa yaateekumaa ta'aamun turzaqaaniheee illaa nabbaatukumaa bitaaweelihee qabla any yaatiyakumaa; zaali kumaa mimmaa 'allamanee rabbee; innee taraktu millata qawmil laa yu'minoona billaahi wahum bil aakhirati hum kaafiroon(QS. Yūsuf:37)
English Sahih International:
He said, "You will not receive food that is provided to you except that I will inform you of its interpretation before it comes to you. That is from what my Lord has taught me. Indeed, I have left the religion of a people who do not believe in Allah, and they, in the Hereafter, are disbelievers. (QS. Yusuf, Ayah ௩௭)
Abdul Hameed Baqavi:
(அதற்கு யூஸுஃப் அவர்களை நோக்கி,) "நீங்கள் புசிக்கக் கூடிய உணவு (வெளியிலிருந்து) உங்களிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவும் (இக்கனவுகளின் பலன்) உங்களிருவருக்கும் நிறைவேறுவதற்கு முன்னதாகவும் (அக்கனவுகளின்) பலனை நீங்கள் அடைவதற்கு முன்னதாகவும் (அதனை) நான் உங்களுக்கு அறிவித்து விடுவேன்; (கனவுகளுக்கு வியாக்கியானம் கூறும்) இதனை என் இறைவனே எனக்கு அறிவித்து இருக்கிறான். ஏனென்றால், அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்ளாது மறுமை யையும் நிராகரிக்கும் மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௩௭)
Jan Trust Foundation
அதற்கு அவர் கூறினார்| “உங்களிருவருக்கும் அளிக்கக்கூடிய உணவு உங்களிடம் வ(ந்து சே)ருவதற்கு முன்னரும் - (இக்கனவுகளின்) பலனை நீங்களிருவரும் அடைவதற்கு முன்னரும் - இவற்றின் விளக்கத்தை உங்களிலிருவருக்கும் கூறிவிடுகிறேன். இது என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்தும் உள்ளவை; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும், மறுமையை நிராகரிப்பவர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை நான் நிச்சயமாக விட்டு விட்டேன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“நீங்கள் (இருவரும்) உணவளிக்கப்படுகிற உணவு உங்களிடம் வராது, அது உங்களிடம் வருவதற்கு முன்னர் அதன் விளக்கத்தை நான் உங்கள் இருவருக்கும் அறிவித்தே தவிர. இது என் இறைவன் எனக்கு கற்பித்ததிலிருந்து (நான் கூறுவதாகும்). அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாத மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டு விட்டேன். அவர்கள் மறுமையையும் நிராகரிக்கின்றார்கள்.