Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௩௬

Qur'an Surah Yusuf Verse 36

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيٰنِ ۗقَالَ اَحَدُهُمَآ اِنِّيْٓ اَرٰىنِيْٓ اَعْصِرُ خَمْرًا ۚوَقَالَ الْاٰخَرُ اِنِّيْٓ اَرٰىنِيْٓ اَحْمِلُ فَوْقَ رَأْسِيْ خُبْزًا تَأْكُلُ الطَّيْرُ مِنْهُ ۗنَبِّئْنَا بِتَأْوِيْلِهٖ ۚاِنَّا نَرٰىكَ مِنَ الْمُحْسِنِيْنَ (يوسف : ١٢)

wadakhala
وَدَخَلَ
And entered
நுழைந்தார்(கள்)
maʿahu
مَعَهُ
with him
அவருடன்
l-sij'na
ٱلسِّجْنَ
(in) the prison
சிறையில்
fatayāni
فَتَيَانِۖ
two young men
இரு வாலிபர்கள்
qāla
قَالَ
Said
கூறினான்
aḥaduhumā
أَحَدُهُمَآ
one of them
அவ்விருவரில் ஒருவன்
innī
إِنِّىٓ
"Indeed I
நிச்சயமாக நான்
arānī
أَرَىٰنِىٓ
[I] see myself
கனவு கண்டேன்/என்னை
aʿṣiru khamran
أَعْصِرُ خَمْرًاۖ
pressing wine"
பிழிகிறேன்/மதுவை
waqāla
وَقَالَ
And said
இன்னும் கூறினான்
l-ākharu
ٱلْءَاخَرُ
the other
மற்றவன்
innī
إِنِّىٓ
"Indeed I
நிச்சயமாக நான்
arānī
أَرَىٰنِىٓ
[I] see myself
கனவு கண்டேன்/என்னை
aḥmilu
أَحْمِلُ
[I am] carrying
சுமக்கிறேன்
fawqa rasī
فَوْقَ رَأْسِى
over my head
மேல்/என் தலை
khub'zan
خُبْزًا
bread
ரொட்டியை
takulu
تَأْكُلُ
(were) eating
புசிப்பதாக
l-ṭayru
ٱلطَّيْرُ
the birds
பறவைகள்
min'hu
مِنْهُۖ
from it
அதிலிருந்து
nabbi'nā
نَبِّئْنَا
Inform us
அறிவிப்பீராக/எங்களுக்கு
bitawīlihi
بِتَأْوِيلِهِۦٓۖ
of its interpretation;
இதன் விளக்கத்தை
innā
إِنَّا
indeed we
நிச்சயமாக நாங்கள்
narāka
نَرَىٰكَ
[we] see you
காண்கிறோம்/உம்மை
mina l-muḥ'sinīna
مِنَ ٱلْمُحْسِنِينَ
of the good-doers"
நல்லறம்புரிபவர்களில்

Transliteration:

Wa dakhala ma'ahussijna fata yaan; qaala ahaduhumaaa inneee araaneee a'siru khamranw wa qaalal aakharu inneee khubzan taakulut tairu minh; nabbi 'naa bitaaweelihee innaa naraaka minal muhsineen (QS. Yūsuf:36)

English Sahih International:

And there entered the prison with him two young men. One of them said, "Indeed, I have seen myself [in a dream] pressing [grapes for] wine." The other said, "Indeed, I have seen myself carrying upon my head [some] bread, from which the birds were eating. Inform us of its interpretation; indeed, we see you to be of those who do good." (QS. Yusuf, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

(அவர் சிறைச்சென்ற சமயத்தில் வெவ்வேறு குற்றங்களுக்காக இன்னும்) இரு வாலிபர்களும் அவருடன் சிறைச் சென்றார்கள். அவ்விருவரில் ஒருவன் (ஒரு நாளன்று யூஸுஃபை நோக்கி) "நான் திராட்சை ரஸம் பிழிந்து கொண்டிருப்பதாக மெய்யாகவே கனவு கண்டேன்" என்று கூறினான். மற்றவன் "நான் என் தலையில் ரொட்டிகளைச் சுமந்து செல்வதாகவும், அதை பட்சிகள் (கொத்திக் கொத்திப்) புசிப்பதாகவும் மெய்யாகவே கனவு கண்டேன்" என்று கூறி (யூஸுஃபை நோக்கி,) "நிச்சயமாக நாங்கள் உங்களை மிக்க (ஞானமுடைய) நல்லோர்களில் ஒருவராகவே காண்கிறோம்; ஆதலால், இக்கனவுகளின் வியாக்கியானங்களை நீங்கள் எங்களுக்கு அறிவிப்பீராக!" (என்று கூறினான்). (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௩௬)

Jan Trust Foundation

அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், “நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன், “நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்” என்று கூறினான். (பின் இருவரும் “யூஸுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக; மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோம்” (என்று கூறினார்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இரு வாலிபர்களும் அவருடன் சிறையில் நுழைந்தனர். அவ்விருவரில் ஒருவன் “நிச்சயமாக நான் மதுவை பிழிவதாக என்னை கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன் “என் தலை மேல் நான் ரொட்டியைச் சுமக்க, அதிலிருந்து பறவைகள் புசிப்பதாக நிச்சயமாக நான் என்னை கனவு கண்டேன்”என்று கூறினான். (பிறகு இருவரும்) “இதன் விளக்கத்தை எங்களுக்கு அறிவிப்பீராக! நிச்சயமாக நாங்கள் உம்மை நல்லறம் புரிபவர்களில் காண்கிறோம்” (என்று கூறினார்கள்).