குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௩௫
Qur'an Surah Yusuf Verse 35
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
ثُمَّ بَدَا لَهُمْ مِّنْۢ بَعْدِ مَا رَاَوُا الْاٰيٰتِ لَيَسْجُنُنَّهٗ حَتّٰى حِيْنٍ ࣖ (يوسف : ١٢)
- thumma badā lahum
- ثُمَّ بَدَا لَهُم
- Then (it) appeared to them
- பிறகு/தோன்றியது/அவர்களுக்கு
- min baʿdi
- مِّنۢ بَعْدِ
- after after
- பின்னரும்
- mā ra-awū
- مَا رَأَوُا۟
- [what] they had seen
- அவர்கள் பார்த்த
- l-āyāti
- ٱلْءَايَٰتِ
- the signs
- அத்தாட்சிகளை
- layasjununnahu
- لَيَسْجُنُنَّهُۥ
- surely they should imprison him
- நிச்சயமாக அவர்கள் சிறையில் அடைக்கவேண்டும்/ அவரை
- ḥattā ḥīnin
- حَتَّىٰ حِينٍ
- until a time
- வரை/ஒரு காலம்
Transliteration:
Summa badaa lahum mim ba'di maa ra-awul Aayaati layasjununnahoo hatta heen(QS. Yūsuf:35)
English Sahih International:
Then it appeared to them after they had seen the signs that he [i.e., al-Azeez] should surely imprison him for a time. (QS. Yusuf, Ayah ௩௫)
Abdul Hameed Baqavi:
(யூஸுஃப் நிரபராதி என்பதற்குரிய) ஆதாரங்களை அவர்கள் கண்டதன் பின்னரும் (இச்சம்பவத்தைப் பற்றி என்ன செய்யலாமென அவர்கள் ஆலோசனை செய்தனர். அவளுடைய பார்வையிலிருந்து யூஸுஃபை மறைத்து விடுவதே நலமெனக் கருதி அதற்காகச்) சிறிது காலம் அவரை சிறையிலிடுவதே தகுமென அவர்களுக்குத் தோன்றியது. (ஆகவே, அவரை சிறைக்கூடத்திற்கு அனுப்பி விட்டனர்.) (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௩௫)
Jan Trust Foundation
(யூஸுஃப் குற்றமற்றவர் என்பதற்குப் பல) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும், ஒரு காலம் வரை அவர் சிறையிலிடப்பட வேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றியது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
பிறகு, (யூஸுஃப் நிரபராதி என்பதின்) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும் அவர்கள் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நிச்சயமாக அவரை சிறையில் அடைக்கவேண்டும் என அவர்களுக்குத் தோன்றியது.