குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௩௩
Qur'an Surah Yusuf Verse 33
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ رَبِّ السِّجْنُ اَحَبُّ اِلَيَّ مِمَّا يَدْعُوْنَنِيْٓ اِلَيْهِ ۚوَاِلَّا تَصْرِفْ عَنِّيْ كَيْدَهُنَّ اَصْبُ اِلَيْهِنَّ وَاَكُنْ مِّنَ الْجٰهِلِيْنَ (يوسف : ١٢)
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- rabbi
- رَبِّ
- "My Lord
- என் இறைவா
- l-sij'nu
- ٱلسِّجْنُ
- the prison
- சிறை
- aḥabbu
- أَحَبُّ
- (is) dearer
- மிக விருப்பமானது
- ilayya mimmā
- إِلَىَّ مِمَّا
- to me than what
- எனக்கு/எதை விட
- yadʿūnanī
- يَدْعُونَنِىٓ
- they invite me
- அழைக்கிறார்கள்/என்னை
- ilayhi
- إِلَيْهِۖ
- to it
- அதன் பக்கம்
- wa-illā taṣrif
- وَإِلَّا تَصْرِفْ
- And unless You turn away
- நீ திருப்பவில்லையெனில்
- ʿannī
- عَنِّى
- from me
- என்னை விட்டு
- kaydahunna
- كَيْدَهُنَّ
- their plot
- சூழ்ச்சியை/ அவர்களின்
- aṣbu
- أَصْبُ
- I might incline
- இச்சைகொள்வேன்
- ilayhinna
- إِلَيْهِنَّ
- towards them
- அவர்கள் பக்கம்
- wa-akun
- وَأَكُن
- and [I] be
- இன்னும் ஆகிவிடுவேன்
- mina l-jāhilīna
- مِّنَ ٱلْجَٰهِلِينَ
- of the ignorant"
- அறிவீனர்களில்
Transliteration:
Qaala rabbis sijnu ahabbu ilaiya mimma yad'oo naneee 'ilaihi wa illaa tasrif 'annee kaidahunna asbu ilaihinna wa akum minal jaahileen(QS. Yūsuf:33)
English Sahih International:
He said, "My Lord, prison is more to my liking than that to which they invite me. And if You do not avert from me their plan, I might incline toward them and [thus] be of the ignorant." (QS. Yusuf, Ayah ௩௩)
Abdul Hameed Baqavi:
அதற்கவர், "என் இறைவனே! அவர்கள் என்னை அழைக்கும் (இத்தீய) காரியத்தைவிட சிறைக்கூடமே எனக்கு விருப்பமானது. ஆகவே, இப்பெண்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைத் தடுத்துக் கொள்ளாவிட்டால் இப்பெண்களிடம் சிக்கி (பாவம் செய்யும்) அறிவீனர்களில் நானும் ஒருவனாக ஆகி விடுவேன்" என்று பிரார்த்தித்தார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௩௩)
Jan Trust Foundation
(அதற்கு) அவர், “என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்” என்று (பிரார்த்தித்தவராக) கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“என் இறைவா! அவர்கள் என்னை எதற்கு அழைக்கிறார்களோ அதைவிட (நான்) சிறை(யிலிடப்படுவது) எனக்கு மிக விருப்பமானது. நீ என்னை விட்டு அவர்களின் சூழ்ச்சியை திருப்பவில்லையெனில் நான் அவர்கள் பக்கம் இச்சைகொள்வேன்; அறிவீனர்களில் ஆகிவிடுவேன்”என்று கூறினார்.