Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௩௨

Qur'an Surah Yusuf Verse 32

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَتْ فَذٰلِكُنَّ الَّذِيْ لُمْتُنَّنِيْ فِيْهِ ۗوَلَقَدْ رَاوَدْتُّهٗ عَنْ نَّفْسِهٖ فَاسْتَعْصَمَ ۗوَلَىِٕنْ لَّمْ يَفْعَلْ مَآ اٰمُرُهٗ لَيُسْجَنَنَّ وَلَيَكُوْنًا مِّنَ الصّٰغِرِيْنَ (يوسف : ١٢)

qālat
قَالَتْ
She said
கூறினாள்
fadhālikunna
فَذَٰلِكُنَّ
"That
இவர்தான்
alladhī
ٱلَّذِى
(is) the one
எவர்
lum'tunnanī
لُمْتُنَّنِى
you blamed me
பழித்தீர்கள்/என்னை
fīhi
فِيهِۖ
about him
அவர் விஷயத்தில்
walaqad
وَلَقَدْ
And certainly
திட்டவட்டமாக
rāwadttuhu
رَٰوَدتُّهُۥ
I sought to seduce him
என் விருப்பத்திற்கு அழைத்தேன்/அவரை
ʿan nafsihi
عَن نَّفْسِهِۦ
[from] [himself]
பலவந்தமாக
fa-is'taʿṣama
فَٱسْتَعْصَمَۖ
but he saved himself
காத்துக்கொண்டார்
wala-in lam yafʿal
وَلَئِن لَّمْ يَفْعَلْ
and if not he does
அவர் செய்யவில்லையெனில்
mā āmuruhu
مَآ ءَامُرُهُۥ
what I order him
எதை/ஏவுகிறேன்/அவருக்கு
layus'jananna
لَيُسْجَنَنَّ
surely he will be imprisoned
நிச்சயமாக சிறையிலிடப்படுவார்
walayakūnan
وَلَيَكُونًا
and certainly will be
இன்னும் நிச்சயமாக ஆகுவார்
mina l-ṣāghirīna
مِّنَ ٱلصَّٰغِرِينَ
of those who are disgraced
இழிவானவர்களில்

Transliteration:

Qaalat fazaalikunnal lazee lumtunnanee feeh; wa laqad raawattuhoo 'an nafsihee fasta'sam; wa la'il lam yaf'al maaa aamuruhoo la yusjananna wa la yakoonam minas saaghireen (QS. Yūsuf:32)

English Sahih International:

She said, "That is the one about whom you blamed me. And I certainly sought to seduce him, but he firmly refused; and if he will not do what I order him, he will surely be imprisoned and will be of those debased." (QS. Yusuf, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

அதற்கவள் "நீங்கள் எவரைப் பற்றி என்னை நிந்தித்தீர்களோ அவர் இவர்தான். நிச்சயமாக நான் அவரை எனக்கு இசையும்படி வற்புறுத்தினேன்; எனினும், அவர் தப்பித்துக் கொண்டார். இனியும் அவர் நான் கூறுவதைச் செய்யாவிடில் நிச்சயமாக அவர் சிறையிலிடப்பட்டு சிறுமைப்படுத்தப்படுவார்" என்று கூறினாள். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௩௨)

Jan Trust Foundation

அதற்கவள் “நீங்கள் எவர் சம்பந்தமாக என்னை நிந்தித்தீர்களோ, அவர்தாம் இவர்; நிச்சயமாக நான் அவரை என் விருப்பத்திற்கு இணங்கும்படி வற்புறுத்தினேன் - ஆனால் அவர் (மன உறுதியுடன்) தம்மைக் காத்துக் கொண்டார். இனியும் அவர் நான் இடும் கட்டளைக்கிணங்கி நடந்து கொள்ளாவிட்டால் சிறையில் தள்ளப்படுவார்; மேலும் அவர் சிறுமை அடைந்தவர்களில் ஒருவராகவும் ஆகிவிடுவார்” என்று சொன்னாள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நீங்கள் என்னை எவர் விஷயத்தில் பழித்தீர்களோ அவர்தான் இவர். திட்டவட்டமாக நான் அவரை என் விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைத்தேன். அவர் (தன்னை) காத்துக் கொண்டார். அவருக்கு நான் ஏவுவதை அவர் செய்யவில்லையெனில் நிச்சயமாக அவர் சிறையிலிடப்படுவார், நிச்சயமாக இழிவானவர்களில் அவர் ஆகுவார்”என்று கூறினாள்.