Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௩௧

Qur'an Surah Yusuf Verse 31

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ اَرْسَلَتْ اِلَيْهِنَّ وَاَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَاً وَّاٰتَتْ كُلَّ وَاحِدَةٍ مِّنْهُنَّ سِكِّيْنًا وَّقَالَتِ اخْرُجْ عَلَيْهِنَّ ۚ فَلَمَّا رَاَيْنَهٗٓ اَكْبَرْنَهٗ وَقَطَّعْنَ اَيْدِيَهُنَّۖ وَقُلْنَ حَاشَ لِلّٰهِ مَا هٰذَا بَشَرًاۗ اِنْ هٰذَآ اِلَّا مَلَكٌ كَرِيْمٌ (يوسف : ١٢)

falammā samiʿat
فَلَمَّا سَمِعَتْ
So when she heard
அவள் செவியுற்றபோது
bimakrihinna
بِمَكْرِهِنَّ
of their scheming
அவர்களின் சூழ்ச்சியை
arsalat
أَرْسَلَتْ
she sent
அனுப்பினாள்
ilayhinna
إِلَيْهِنَّ
for them
அவர்களிடம்
wa-aʿtadat
وَأَعْتَدَتْ
and she prepared
இன்னும் ஏற்பாடுசெய்தாள்
lahunna
لَهُنَّ
for them
அவர்களுக்கு
muttaka-an
مُتَّكَـًٔا
a banquet
ஒரு விருந்தை
waātat
وَءَاتَتْ
and she gave
இன்னும் கொடுத்தாள்
kulla wāḥidatin
كُلَّ وَٰحِدَةٍ
each one
ஒவ்வொருவருக்கும்
min'hunna
مِّنْهُنَّ
of them
அவர்களில்
sikkīnan
سِكِّينًا
a knife
ஒரு கத்தியை
waqālati
وَقَالَتِ
and she said
இன்னும் கூறினாள்
ukh'ruj
ٱخْرُجْ
"Come out
வெளியேறுவீராக
ʿalayhinna
عَلَيْهِنَّۖ
before them"
அவர்கள் முன்
falammā
فَلَمَّا
Then when
போது
ra-aynahu
رَأَيْنَهُۥٓ
they saw him
பார்த்தனர்/அவரை
akbarnahu
أَكْبَرْنَهُۥ
they greatly admired him
மிக உயர்வாக எண்ணினர்/அவரை
waqaṭṭaʿna
وَقَطَّعْنَ
and cut
இன்னும் அறுத்தனர்
aydiyahunna
أَيْدِيَهُنَّ
their hands
தங்கள் கைகளை
waqul'na
وَقُلْنَ
they said
இன்னும் கூறினர்
ḥāsha
حَٰشَ
"Forbid
பாதுகாப்பானாக
lillahi
لِلَّهِ
Allah
அல்லாஹ்
mā hādhā basharan
مَا هَٰذَا بَشَرًا
not (is) this a man
இல்லை /இவர்/மனிதராக
in hādhā
إِنْ هَٰذَآ
not (is) this
இல்லை/இவர்
illā
إِلَّا
but
தவிர
malakun
مَلَكٌ
an angel
ஒரு வானவரே
karīmun
كَرِيمٌ
noble"
கண்ணியமான

Transliteration:

Falammaa sami'at bimak rihinna arsalat ilaihinna wa a'tadat lahunna muttaka anw wa aatat kulla waahidatim min hunna sikkeenanw wa qaala tikh ruj 'alaihinna falammaa ra aynahooo akbarnahoo wa qatta'na aydiyahunna wa qulna haasha lillaahi maa haaza basharaa; in haazaaa illaa malakun kareem (QS. Yūsuf:31)

English Sahih International:

So when she heard of their scheming, she sent for them and prepared for them a banquet and gave each one of them a knife and said [to Joseph], "Come out before them." And when they saw him, they greatly admired him and cut their hands and said, "Perfect is Allah! This is not a man; this is none but a noble angel." (QS. Yusuf, Ayah ௩௧)

Abdul Hameed Baqavi:

(அந்தப்) பெண்களின் (இந்த) இழிமொழிகளை அவள் செவியுறவே, அப்பெண்களுக்காக ஒரு விருந்து சபையைக் கூட்டி, அதற்கு அவர்களை அழைத்து அங்கு வந்த ஒவ்வொருத்திக்கும் ஒரு கனியும் (அதை அறுத்துப் புசிக்க) ஒரு கத்தி(யும்) கொடுத்து அவரை (அலங்கரித்து) அவர்கள் முன் வரும்படிக் கூறினாள். அவரை அப்பெண்கள் காணவே (அவருடைய அழகைக் கண்டு) அவரை மிக்க உயர்வானவராக எண்ணி (மெய்மறந்து, கனியை அறுப்பதற்குப் பதிலாக) தங்கள் கை (விரல்)களையே அறுத்துக் கொண்டு "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் மனிதரல்ல! இவர் (அனைவரின் மனதையும் கவரக்கூடிய) அழகு வாய்ந்த ஒரு வானவரே அன்றி வேறில்லை" என்று கூறினார்கள். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௩௧)

Jan Trust Foundation

அப் பெண்களின் பேச்சுக்களை (அஜீஸின் மனைவி) கேட்டபோது (விருந்திற்காகச்) சாய்மானங்கள் சித்தம் செய்து அப் பெண்களுக்கு அழைப்பனுப்பினாள்; (விருந்திற்கு வந்த) அப் பெண்களில் ஒவ்வொருத்திக்கும் (பழங்களை நறுக்கித் தின்பதற்காக) ஒரு கத்தியும் கொடுத்தாள். “இப் பெண்கள் எதிரே செல்லும்” என்று (யூஸுஃபிடம்) கூறினாள்; அப் பெண்கள் அவரைப் பார்த்ததும் (அவரழகில் மயங்கி) அவரை மிக மேன்மையாகக் கண்டார்கள். (அவர் அழகில் மெய் மறந்து) தம் கைகளையும் வெட்டிக்கொண்டனர்| “அல்லாஹ்வே பெரியவன்; இவர் மனிதரே அல்லர்! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களின் சூழ்ச்சியை அவள் செவியுற்றபோது, (அப்பெண்களை அழைத்து வர) அவர்களிடம் (ஓர் அழைப்பாளரை) அனுப்பினாள். அவர்களுக்கு ஒரு விருந்தை ஏற்பாடு செய்தாள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் (பழம் இன்னும்) ஒரு கத்தியைக் கொடுத்து, (யூஸுஃபே!) அவர்கள் முன் வெளியேருவீராக! எனக் கூறினாள். அவரை (அவர்கள்) பார்த்தபோது அவரை மிக உயர்வாக எண்ணினர். (பழத்தை விட்டுவிட்டு) தங்கள் கை(விரல்)களை அறுத்தனர். “அல்லாஹ் பாதுகாப்பானாக! இவர் மனிதராக இல்லை! இவர் (அழகான) கண்ணியமான ஒரு வானவரே தவிர வேறில்லை”என்று கூறினர்.