Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௩௦

Qur'an Surah Yusuf Verse 30

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ وَقَالَ نِسْوَةٌ فِى الْمَدِيْنَةِ امْرَاَتُ الْعَزِيْزِ تُرَاوِدُ فَتٰىهَا عَنْ نَّفْسِهٖۚ قَدْ شَغَفَهَا حُبًّاۗ اِنَّا لَنَرٰىهَا فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ (يوسف : ١٢)

waqāla
وَقَالَ
And said
கூறினர்
nis'watun
نِسْوَةٌ
women
பெண்கள்
fī l-madīnati
فِى ٱلْمَدِينَةِ
in the city
நகரத்தில்
im'ra-atu
ٱمْرَأَتُ
"The wife of
மனைவி
l-ʿazīzi
ٱلْعَزِيزِ
Aziz
அதிபரின்
turāwidu
تُرَٰوِدُ
(is) seeking to seduce
தன் விருப்பத்திற்கு அழைக்கிறாள்
fatāhā
فَتَىٰهَا
her slave boy
தன் வாலிபனை
ʿan nafsihi
عَن نَّفْسِهِۦۖ
about himself;
பலவந்தமாக
qad shaghafahā
قَدْ شَغَفَهَا
indeed he has impassioned her
திட்டமாக ஈர்த்து விட்டார்/அவளை
ḥubban
حُبًّاۖ
(with) love
அன்பால்
innā
إِنَّا
Indeed we
நிச்சயமாக நாம்
lanarāhā
لَنَرَىٰهَا
[we] surely see her
காண்கிறோம்/அவளை
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
in an error
வழிகேட்டில்
mubīnin
مُّبِينٍ
clear"
தெளிவான(து)

Transliteration:

Wa qaala niswatun filma deenatim ra atul'Azeezi turaawidu fataahaa 'an nafsihee qad shaghafahaa bubbaa; innaa lana raahaa fee dalaalim mubeen (QS. Yūsuf:30)

English Sahih International:

And women in the city said, "The wife of al-Azeez is seeking to seduce her slave boy; he has impassioned her with love. Indeed, we see her [to be] in clear error." (QS. Yusuf, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

(இவ்விஷயம் வெளியில் பரவவே) அப்பட்டினத்திலுள்ள பெண்கள் பலரும் (இதனை இழிவாகக் கருதி) "அதிபதியின் மனைவி தன்னிடமுள்ள (கேவலம்) ஒரு (அடிமை) வாலிபனைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்துகிறாள். காதல் அவளை மயக்கி விட்டது! நிச்சயமாக அவள் மிகத் தவறான வழியில் இருப்பதையே நாங்கள் காண்கிறோம்" என்று (இழிவாகப்) பேசலானார்கள். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௩௦)

Jan Trust Foundation

அப்பட்டிணத்தில் சில பெண்கள்; “அஜீஸின் மனைவி தன்னிடமுள்ள ஓர் இளைஞரைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கிறாள்; (அவர் மேலுள்ள) ஆசை அவளை மயக்கி விட்டது - நிச்சயமாக நாம் அவளை பகிரங்கமான வழிகேட்டில் தான் காண்கிறோம்” என்று பேசிக் கொண்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நகரத்திலுள்ள பெண்கள் “அதிபரின் மனைவி தன் (அடிமையான) வாலிபனைத் தன் விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைக்கிறாள். அவர் அவளை அன்பால் ஈர்த்து விட்டார்! நிச்சயமாக நாம் அவளை தெளிவானதொரு வழிகேட்டில் காண்கிறோம்”என்று கூறினர்.