குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௩
Qur'an Surah Yusuf Verse 3
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
نَحْنُ نَقُصُّ عَلَيْكَ اَحْسَنَ الْقَصَصِ بِمَآ اَوْحَيْنَآ اِلَيْكَ هٰذَا الْقُرْاٰنَۖ وَاِنْ كُنْتَ مِنْ قَبْلِهٖ لَمِنَ الْغٰفِلِيْنَ (يوسف : ١٢)
- naḥnu
- نَحْنُ
- We
- நாம்
- naquṣṣu
- نَقُصُّ
- relate
- விவரிக்கிறோம்
- ʿalayka
- عَلَيْكَ
- to you
- உமக்கு
- aḥsana
- أَحْسَنَ
- the best
- மிக அழகானதை
- l-qaṣaṣi
- ٱلْقَصَصِ
- of the narrations
- சரித்திரங்களில்
- bimā awḥaynā
- بِمَآ أَوْحَيْنَآ
- in what We have revealed
- வஹீ அறிவித்ததன் மூலம்
- ilayka
- إِلَيْكَ
- to you
- உமக்கு
- hādhā l-qur'āna
- هَٰذَا ٱلْقُرْءَانَ
- (of) this the Quran
- இந்த குர்ஆனை
- wa-in kunta
- وَإِن كُنتَ
- although you were
- நிச்சயமாக இருந்தீர்
- min qablihi
- مِن قَبْلِهِۦ
- before it before it
- இதற்கு முன்னர்
- lamina l-ghāfilīna
- لَمِنَ ٱلْغَٰفِلِينَ
- surely among the unaware
- அறியாதவர்களில்
Transliteration:
Nahnu naqussu 'alaika ahsanal qasasi bimaaa awhainaaa ilaika haazal quraana wa in kunta min qablihee laminal ghaafileen(QS. Yūsuf:3)
English Sahih International:
We relate to you, [O Muhammad], the best of stories in what We have revealed to you of this Quran although you were, before it, among the unaware. (QS. Yusuf, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
(நபியே!) வஹீ மூலம் நாம் உங்களுக்கு அறிவிக்கும் இந்தக் குர்ஆனின் மூலம் சரித்திரங்களில் மிக்க அழகானதொன்றை உங்களுக்கு நாம் விவரிக்கின்றோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீங்கள் இதனை அறியாதவராகவே இருந்தீர்கள். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௩)
Jan Trust Foundation
(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதும் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) இந்த குர்ஆனை உமக்கு நாம் வஹ்யி அறிவித்ததன் மூலம் சரித்திரங்களில் மிக அழகானதை உமக்கு விவரிக்கிறோம். நிச்சயமாக இதற்கு முன்னர் நீர் அறியாதவர்களில் இருந்தீர்.