குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௨௯
Qur'an Surah Yusuf Verse 29
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يُوْسُفُ اَعْرِضْ عَنْ هٰذَا وَاسْتَغْفِرِيْ لِذَنْۢبِكِۖ اِنَّكِ كُنْتِ مِنَ الْخٰطِـِٕيْنَ ࣖ (يوسف : ١٢)
- yūsufu
- يُوسُفُ
- Yusuf
- யூஸுஃபே
- aʿriḍ
- أَعْرِضْ
- turn away
- புறக்கணிப்பீராக
- ʿan hādhā
- عَنْ هَٰذَاۚ
- from this
- இதை விட்டு
- wa-is'taghfirī
- وَٱسْتَغْفِرِى
- And ask forgiveness
- இன்னும் மன்னிப்புத் தேடு
- lidhanbiki
- لِذَنۢبِكِۖ
- for your sin
- நீ உன் பாவத்திற்கு
- innaki
- إِنَّكِ
- Indeed you
- நிச்சயமாக நீ
- kunti
- كُنتِ
- are
- இருக்கிறாய்
- mina l-khāṭiīna
- مِنَ ٱلْخَاطِـِٔينَ
- of the sinful"
- தவறிழைத்தவர்களில்
Transliteration:
Yoosofu a'rid 'an haaza wastaghfiree lizambiki innaki kunti minal khaati'een(QS. Yūsuf:29)
English Sahih International:
Joseph, ignore this. And, [my wife], ask forgiveness for your sin. Indeed, you were of the sinful." (QS. Yusuf, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
(யூஸுஃபை நோக்கி) "யூஸுஃபே! நீங்கள் இதனை இம்மட்டில் விட்டுவிடுங்கள். (இதைப்பற்றி எவரிடமும் கூற வேண்டாம்" என்று கூறி மீண்டும் அவளை நோக்கி) "நீ உன் பாவத்திற்கு மன்னிப்பைத் தேடிக்கொள். நிச்சயமாக நீதான் குற்றம் செய்திருக்கிறாய்" என்று கூறினார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௨௯)
Jan Trust Foundation
(என்றும்) “யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்” என்றும் கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“யூஸுஃபே! நீர் இதை விட்டுப் புறக்கணிப்பீராக! (பிறகு தன் மனைவியை நோக்கி) “நீ உன் பாவத்திற்கு மன்னிப்புத் தேடு, நிச்சயமாக நீ தவறிழைத்தவர்களில் இருக்கிறாய்”என்று கூறினார்.