Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௨௮

Qur'an Surah Yusuf Verse 28

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا رَاٰى قَمِيْصَهٗ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ اِنَّهٗ مِنْ كَيْدِكُنَّ ۗاِنَّ كَيْدَكُنَّ عَظِيْمٌ (يوسف : ١٢)

falammā raā
فَلَمَّا رَءَا
So when he saw
அவர் பார்த்தபோது
qamīṣahu
قَمِيصَهُۥ
his shirt
அவருடைய சட்டையை
qudda
قُدَّ
torn
கிழிக்கப்பட்டதாக
min duburin
مِن دُبُرٍ
from (the) back
பின் புறத்திலிருந்து
qāla
قَالَ
he said
கூறினார்
innahu
إِنَّهُۥ
"Indeed it
நிச்சயமாக இது
min
مِن
(is) of
சதியிலிருந்து
kaydikunna
كَيْدِكُنَّۖ
your plot
சதியிலிருந்து உங்கள்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
kaydakunna
كَيْدَكُنَّ
your plot
உங்கள் சதி
ʿaẓīmun
عَظِيمٌ
(is) great
மகத்தானது

Transliteration:

Falammaa ra-aa qamee sahoo qudda min duburin qaala innahoo min kaidikunna inna kaidakunna 'azeem (QS. Yūsuf:28)

English Sahih International:

So when he [i.e., her husband] saw his shirt torn from the back, he said, "Indeed, it is of your [i.e., women's] plan. Indeed, your plan is great [i.e., vehement]. (QS. Yusuf, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

(ஆகவே, அவளது கணவர்) யூஸுஃபுடைய சட்டையைக் கவனித்ததில், அது பின்புறமாகக் கிழிந்திருப்பதைக் கண்டு (தன் மனைவியை நோக்கி) "நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்களுடைய சதியே; நிச்சயமாக உங்களின் சதி மகத்தானது" என்று கூறி, (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௨௮)

Jan Trust Foundation

(யூஸுஃபுடைய) சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்ததை அவர் கண்டபோது, நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியேயாகும் - நிச்சயமாக உங்களுடைய சதி மகத்தானதே!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவருடைய சட்டை பின்புறத்திலிருந்து கிழிக்கப்பட்டதாக இருப்பதை (அவளுடைய கணவர்) பார்த்தபோது “நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியிலிருந்து உள்ளதுதான்; நிச்சயமாக உங்கள் சதி மகத்தானது”என்று கூறினார்.