Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௨௬

Qur'an Surah Yusuf Verse 26

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ هِيَ رَاوَدَتْنِيْ عَنْ نَّفْسِيْ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ اَهْلِهَاۚ اِنْ كَانَ قَمِيْصُهٗ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكٰذِبِيْنَ (يوسف : ١٢)

qāla
قَالَ
He said
கூறினார்
hiya
هِىَ
"She
அவள்தான்
rāwadatnī
رَٰوَدَتْنِى
sought to seduce me
தன் விருப்பத்திற்கு அழைத்தாள்/என்னை
ʿan nafsī
عَن نَّفْسِىۚ
about myself"
என்னைபலவந்தமாக
washahida
وَشَهِدَ
And testified
இன்னும் சாட்சி கூறினார்
shāhidun
شَاهِدٌ
a witness
ஒரு சாட்சியாளர்
min
مِّنْ
of
இருந்து
ahlihā
أَهْلِهَآ
her family
அவளுடைய குடும்பம்
in kāna
إِن كَانَ
"If [is]
இருந்தால்
qamīṣuhu
قَمِيصُهُۥ
his shirt
அவருடைய சட்டை
qudda
قُدَّ
(is) torn
கிழிக்கப்பட்டது
min qubulin
مِن قُبُلٍ
from the front
முன் புறத்திலிருந்து
faṣadaqat
فَصَدَقَتْ
then she has spoken the truth
உண்மை கூறினாள்
wahuwa
وَهُوَ
and he
அவர்
mina l-kādhibīna
مِنَ ٱلْكَٰذِبِينَ
(is) of the liars
பொய்யர்களில்

Transliteration:

Qaala hiya raawadatnee 'an nafsee wa shahida shaahidum min ahlihaa in kaana qameesuhoo qudda min qubulin fasadaqat wa huwa minal kaazibeen (QS. Yūsuf:26)

English Sahih International:

[Joseph] said, "It was she who sought to seduce me." And a witness from her family testified, "If his shirt is torn from the front, then she has told the truth, and he is of the liars. (QS. Yusuf, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

(யூஸுஃப் அதனை மறுத்து) "அவள்தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்" என்று கூறினார். (இதற்கிடையில் அங்கிருந்த) அவளுடைய குடும்பத்திலுள்ள ஒருவர் (இதற்கு) சாட்சியமாகக் கூறியதாவது: "அவருடைய சட்டை முன்புறம் கிழிந்திருந்தால் அவள் உண்மையே சொல்லுகிறாள்; அவர் பொய்யரே! (அன்றி) (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௨௬)

Jan Trust Foundation

(இதை மறுத்து யூஸுஃப்;) “இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்” என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்| “இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(யூஸுஃப் அதை மறுத்து) “அவள்தான் என்னை (பலவந்தமாக) தன் விருப்பத்திற்கு அழைத்தாள்”என்று கூறினார். அவளுடைய குடும்பத்திலிருந்து ஒரு சாட்சியாளர் சாட்சி கூறினார்: அவருடைய சட்டை முன் புறத்திலிருந்து கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறினாள்; அவர் பொய்யர்களில் உள்ளவர்!