Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௧௯

Qur'an Surah Yusuf Verse 19

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَاۤءَتْ سَيَّارَةٌ فَاَرْسَلُوْا وَارِدَهُمْ فَاَدْلٰى دَلْوَهٗ ۗقَالَ يٰبُشْرٰى هٰذَا غُلٰمٌ ۗوَاَسَرُّوْهُ بِضَاعَةً ۗوَاللّٰهُ عَلِيْمٌ ۢبِمَا يَعْمَلُوْنَ (يوسف : ١٢)

wajāat
وَجَآءَتْ
And there came
வந்தது
sayyāratun
سَيَّارَةٌ
a caravan
ஒரு பயணக் கூட்டம்
fa-arsalū
فَأَرْسَلُوا۟
and they sent
அனுப்பினார்கள்
wāridahum
وَارِدَهُمْ
their water drawer
தங்களில் நீர் கொண்டு வருபவரை
fa-adlā
فَأَدْلَىٰ
then he let down
இறக்கினார்
dalwahu
دَلْوَهُۥۖ
his bucket
அவர் வாளியை
qāla
قَالَ
He said
கூறினார்
yābush'rā
يَٰبُشْرَىٰ
"O good news!
ஆ... நற்செய்தி!
hādhā
هَٰذَا
This
இதோ
ghulāmun
غُلَٰمٌۚ
(is) a boy"
ஒரு சிறுவர்
wa-asarrūhu
وَأَسَرُّوهُ
And they hid him
மறைத்தார்கள்/அவரை
biḍāʿatan
بِضَٰعَةًۚ
(as) a merchandise
வர்த்தகப் பொருளாக
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
(is) All- Knower
நன்கறிபவன்
bimā yaʿmalūna
بِمَا يَعْمَلُونَ
of what they do
அவர்கள் செய்வதை

Transliteration:

Wa jaaa'at saiyaaratun fa-arsaloo waaridahum fa adlaa dalwah; qaala yaa bushraa haaza ghulaam; wa asarroohu bi-daa'ah; wallaahu 'aleemum bimaa ya'maloon (QS. Yūsuf:19)

English Sahih International:

And there came a company of travelers; then they sent their water drawer, and he let down his bucket. He said, "Good news! Here is a boy." And they concealed him, [taking him] as merchandise; and Allah was Knowing of what they did. (QS. Yusuf, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

பின்னர் (கிணற்றின் சமீபமாக) ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தங்களின் ஆளை (தண்ணீர் கொண்டு வர) அனுப்பி னார்கள். அவன் தன் வாளியைக் (கிணற்றில்) விட்டான். (அதில் யூஸுஃப் உட்கார்ந்து கொண்டார். அதில் யூஸுஃப் இருப்பதைக் கண்டு "உங்களுக்கு) நற்செய்தி! இதோ ஒரு (அழகிய) சிறுவன்! என்று (யூஸுஃபைச் சுட்டிக் காட்டிக்) கூறினான். (அவரைக் கண்ணுற்ற அவர்கள்) தங்கள் வர்த்தகப்பொருளாக (ஆக்கிக் கொள்ளக் கருதி) அவரை மறைத்துக் கொண்டார்கள். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௧௯)

Jan Trust Foundation

பின்னர் (அக்கிணற்றருகே) ஒரு பயணக்கூட்டம் வந்தது; அவர்களில் தண்ணீர் கொண்டு வருபவரை(த் தண்ணீருக்காக அக்கூட்டத்தினர்) அனுப்பினார்கள். அவர் தம் வாளியை(க் கிணற்றில்) விட்டார். “நற்செய்தி! இதோ ஓர் (அழகிய) சிறுவன்!” என்று கூறினார் - (யூஸுஃபை தூக்கியெடுத்து) அவரை ஒரு வியாபாரப் பொருளாக(க் கருதி) மறைத்து வைத்துக் கொண்டார்கள்; அவர்கள் செய்ததை எல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தங்களில் நீர் கொண்டு வருபவரை அனுப்பினார்கள். அவர் (தன்) வாளியை(க் கிணற்றில்) இறக்கினார். (அதைப் பிடித்து யூஸுஃப் மேலே வரவே,) “ஆ... நற்செய்தி! இதோ ஒரு (அழகிய) சிறுவர்! என்று கூறினார். (அவரை தங்கள்) வர்த்தகப் பொருளாக (ஆக்கிக் கொள்ளக் கருதி) அவரை மறைத்தார்கள். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.