Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௧௦௭

Qur'an Surah Yusuf Verse 107

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௧௦௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَفَاَمِنُوْٓا اَنْ تَأْتِيَهُمْ غَاشِيَةٌ مِّنْ عَذَابِ اللّٰهِ اَوْ تَأْتِيَهُمُ السَّاعَةُ بَغْتَةً وَّهُمْ لَا يَشْعُرُوْنَ (يوسف : ١٢)

afa-aminū
أَفَأَمِنُوٓا۟
Do they then feel secure
அச்சமற்றுவிட்டனரா?
an tatiyahum
أَن تَأْتِيَهُمْ
(against) that comes to them
வருவதை/அவர்களுக்கு
ghāshiyatun
غَٰشِيَةٌ
an overwhelming
சூழக்கூடியது
min ʿadhābi
مِّنْ عَذَابِ
[of] punishment
வேதனையிலிருந்து
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
aw tatiyahumu
أَوْ تَأْتِيَهُمُ
or comes to them
அவர்கள்/வருவதை/அவர்களுக்கு
l-sāʿatu
ٱلسَّاعَةُ
the Hour
(முடிவு) காலம்
baghtatan
بَغْتَةً
suddenly
திடீரென
wahum
وَهُمْ
while they
அவர்கள்
lā yashʿurūna
لَا يَشْعُرُونَ
(do) not perceive?
அறியமாட்டார்கள்

Transliteration:

Afa aminooo an taatiya hum ghaashiyatum min 'azaabil laahi aw taatiyahumus Saa'atu baghtatanw wa hum laa yash'uroon (QS. Yūsuf:107)

English Sahih International:

Then do they feel secure that there will not come to them an overwhelming [aspect] of the punishment of Allah or that the Hour will not come upon them suddenly while they do not perceive? (QS. Yusuf, Ayah ௧௦௭)

Abdul Hameed Baqavi:

(அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வராதென்றோ அல்லது அவர்கள் அறியாத நிலைமையில் திடுகூறாய் (அவர்களுடைய) முடிவு காலம் அவர்களுக்கு வராதென்றோ அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா? (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௧௦௭)

Jan Trust Foundation

(அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வந்துவிடுவதைப் பற்றியும் அல்லது அவர்கள் அறியாதிருக்கும் போது திடீரென முடிவு காலம் வந்து விடுவதைப்பற்றியும் அவர்கள் அச்சமற்று இருக்கின்றார்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வின் வேதனையிலிருந்து சூழக்கூடியது அவர்களுக்கு வருவதை அல்லது அவர்கள் அறியாமல் இருக்க திடீரென முடிவு காலம் அவர்களுக்கு வருவதை அவர்கள் அச்சமற்று விட்டனரா? (சூழக்கூடியது: அனைத்தையும் அழிக்கக் கூடியது)