Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௧௦௧

Qur'an Surah Yusuf Verse 101

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௧௦௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ رَبِّ قَدْ اٰتَيْتَنِيْ مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِيْ مِنْ تَأْوِيْلِ الْاَحَادِيْثِۚ فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ اَنْتَ وَلِيّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِۚ تَوَفَّنِيْ مُسْلِمًا وَّاَلْحِقْنِيْ بِالصّٰلِحِيْنَ (يوسف : ١٢)

rabbi
رَبِّ
My Lord
என் இறைவா
qad ātaytanī
قَدْ ءَاتَيْتَنِى
indeed you have given me
திட்டமாக/எனக்கு தந்தாய்
mina l-mul'ki
مِنَ ٱلْمُلْكِ
of the sovereignty
ஆட்சியை
waʿallamtanī
وَعَلَّمْتَنِى
and taught me
இன்னும் கற்பித்தாய்/எனக்கு
min tawīli
مِن تَأْوِيلِ
of the interpretation
விளக்கத்தை
l-aḥādīthi
ٱلْأَحَادِيثِۚ
of the events
பேச்சுகளின்
fāṭira
فَاطِرَ
Creator
படைத்தவனே
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(of) the heavens
வானங்களை(யும்)
wal-arḍi
وَٱلْأَرْضِ
and the earth
இன்னும் பூமியை(யும்)
anta waliyyī
أَنتَ وَلِىِّۦ
You (are) my Protector
நீ என் பாதுகாவலன்
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
in the world
இம்மையில்
wal-ākhirati
وَٱلْءَاخِرَةِۖ
and the Hereafter
இன்னும் மறுமை
tawaffanī
تَوَفَّنِى
Cause me to die
உயிர் கைப்பற்றிக் கொள்/என்னை
mus'liman
مُسْلِمًا
(as) a Muslim
முஸ்லிமாக
wa-alḥiq'nī
وَأَلْحِقْنِى
and join me
இன்னும் சேர்த்து விடு/என்னை
bil-ṣāliḥīna
بِٱلصَّٰلِحِينَ
with the righteous"
நல்லவர்களுடன்

Transliteration:

Rabbi qad aataitanee minal mulki wa 'allamtanee min taaweelil ahaadees; faati ras samaawaati wal ardi Anta waliyyee fid dunyaa wal Aakhirati tawaffanee muslimanw wa alhiqnee bissaaliheen (QS. Yūsuf:101)

English Sahih International:

My Lord, You have given me [something] of sovereignty and taught me of the interpretation of dreams. Creator of the heavens and earth, You are my protector in this world and the Hereafter. Cause me to die a Muslim and join me with the righteous." (QS. Yusuf, Ayah ௧௦௧)

Abdul Hameed Baqavi:

(அன்றி) "என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு ஓர் ஆட்சியையும் தந்தருள்புரிந்து, கனவுகளின் வியாக்கியானங் களையும் எனக்குக் கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் நீதான் படைத்தாய். இம்மையிலும், மறுமையிலும் என்னை பாதுகாப்பவனும் நீதான். முற்றிலும் (உனக்கு) வழிப்பட்டவனாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்திலும் என்னை நீ சேர்த்து விடுவாயாக!" (என்று பிரார்த்தித்தார்.) (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௧௦௧)

Jan Trust Foundation

“என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” (என்று அவர் பிரார்த்தித்தார்.)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“என் இறைவா! திட்டமாக நீ எனக்கு ஆட்சியை தந்தாய். (கனவு சம்பந்தமான) பேச்சுகளின் விளக்கத்தை எனக்கு கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தவனே. நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். என்னை முஸ்லிமாக உயிர் கைப்பற்றிக்கொள்! நல்லவர்களுடன் என்னை சேர்த்து விடு!”