Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௧௦௦

Qur'an Surah Yusuf Verse 100

ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௧௦௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَرَفَعَ اَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوْا لَهٗ سُجَّدًاۚ وَقَالَ يٰٓاَبَتِ هٰذَا تَأْوِيْلُ رُءْيَايَ مِنْ قَبْلُ ۖقَدْ جَعَلَهَا رَبِّيْ حَقًّاۗ وَقَدْ اَحْسَنَ بِيْٓ اِذْ اَخْرَجَنِيْ مِنَ السِّجْنِ وَجَاۤءَ بِكُمْ مِّنَ الْبَدْوِ مِنْۢ بَعْدِ اَنْ نَّزَغَ الشَّيْطٰنُ بَيْنِيْ وَبَيْنَ اِخْوَتِيْۗ اِنَّ رَبِّيْ لَطِيْفٌ لِّمَا يَشَاۤءُ ۗاِنَّهٗ هُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ (يوسف : ١٢)

warafaʿa
وَرَفَعَ
And he raised
இன்னும் உயர்த்தினார்
abawayhi
أَبَوَيْهِ
his parents
தன் பெற்றோரை
ʿalā
عَلَى
upon
மேல்
l-ʿarshi
ٱلْعَرْشِ
the throne
(அரச) கட்டில்
wakharrū
وَخَرُّوا۟
and they fell down
இன்னும் விழுந்தனர்
lahu
لَهُۥ
to him
அவருக்கு
sujjadan
سُجَّدًاۖ
prostrate
சிரம் பணிந்தவர்களாக
waqāla
وَقَالَ
And he said
இன்னும் கூறினார்
yāabati
يَٰٓأَبَتِ
"O my father!
என் தந்தையே
hādhā
هَٰذَا
This
இது
tawīlu
تَأْوِيلُ
(is the) interpretation
விளக்கம்
ru'yāya
رُءْيَٰىَ
(of) my dream
என் கனவின்
min qablu
مِن قَبْلُ
(of) before (of) before
முன்னர்
qad jaʿalahā
قَدْ جَعَلَهَا
Verily has made it
ஆக்கி விட்டான்/அதை
rabbī
رَبِّى
my Lord
என் இறைவன்
ḥaqqan
حَقًّاۖ
true
உண்மையாக
waqad aḥsana
وَقَدْ أَحْسَنَ
And indeed He was good
நன்மை புரிந்திருக்கிறான்
بِىٓ
to me
எனக்கு
idh
إِذْ
when
போது
akhrajanī
أَخْرَجَنِى
He took me out
அவன் வெளியேற்றினான்/என்னை
mina
مِنَ
of
இருந்து
l-sij'ni
ٱلسِّجْنِ
the prison
சிறை
wajāa
وَجَآءَ
and brought
இன்னும் வந்தான்
bikum
بِكُم
you
உங்களைக் கொண்டு
mina
مِّنَ
from
இருந்து
l-badwi
ٱلْبَدْوِ
the bedouin life
கிராமம்
min baʿdi
مِنۢ بَعْدِ
after after
பின்னர்
an nazagha
أَن نَّزَغَ
[that] had caused discord
பிரிவினையை உண்டு பண்ணினான்
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
the Shaitaan
ஷைத்தான்
baynī
بَيْنِى
between me
எனக்கிடையில்
wabayna
وَبَيْنَ
and between
இன்னும் இடையில்
ikh'watī
إِخْوَتِىٓۚ
my brothers
என் சகோதரர்கள்
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
rabbī
رَبِّى
my Lord
என் இறைவன்
laṭīfun
لَطِيفٌ
(is) Most Subtle
மகா நுட்பமானவன்
limā yashāu
لِّمَا يَشَآءُۚ
to what He wills
தான் நாடியதற்கு
innahu huwa
إِنَّهُۥ هُوَ
Indeed, He He
நிச்சயமாக அவன்தான்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
(is) the All-Knower
நன்கறிந்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
the All-Wise
மகா ஞானவான்

Transliteration:

Wa raf'a abawaihi 'alal 'arshi wa kharroo lahoo sujjadaa; wa qaala yaaa abati haaza taaweelu ru'yaaya min qablu qad ja'alahaa Rabbee haqqaa; wa qad ahsana beee iz akhrajanee minas sijni wa jaaa'a bikum minal badwi mim ba'di an nazaghash Shaitaanu bainee wa baina ikhwatee; inna Rabbee lateeful limaa yashaaa'; innahoo Huwal 'Aleemul Hakeem (QS. Yūsuf:100)

English Sahih International:

And he raised his parents upon the throne, and they bowed to him in prostration. And he said, "O my father, this is the explanation of my vision of before. My Lord has made it reality. And He was certainly good to me when He took me out of prison and brought you [here] from bedouin life after Satan had induced [estrangement] between me and my brothers. Indeed, my Lord is Subtle in what He wills. Indeed, it is He who is the Knowing, the Wise. (QS. Yusuf, Ayah ௧௦௦)

Abdul Hameed Baqavi:

பின்னர் அவர் தன் தாயையும், தந்தையையும் சிம்மாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார். (எகிப்தின் அதிபதியாக இருந்த) அவருக்கு (அக்காலத்திய முறைப்படி) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்து மரியாதைச் செலுத்தினார்கள். அச்சமயம் யூஸுஃப் (தன் தந்தையை நோக்கி) "என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவின் வியாக்கியானம் இதுதான். என் இறைவன் அதனை உண்மையாக்கி விட்டான். (எவருடைய சிபாரிசுமின்றியே) சிறைக்கூடத்திலிருந்து என்னை அவன் வெளியேற்றியதுடன் எனக்கும், என் சகோதரருக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டுபண்ணிய பின்னரும் உங்கள் அனைவரையும் பாலைவனத்திலிருந்து என்னிடம் கொண்டு வந்து ஒன்று சேர்த்ததன் மூலம் (என் இறைவன்) நிச்சயமாக என்மீது பேருபகாரம் புரிந்திருக்கிறான். நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்கள் மீது உள்ளன்புடையவனாக இருக்கிறான். நிச்சயமாக அவன் அனைத்தையும் நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்" என்றார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௧௦௦)

Jan Trust Foundation

இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), “என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்; மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்” என்று கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர் தன் பெற்றோரை அரச கட்டில் மேல் உயர்த்தினார். அவருக்கு (முன்) அவர்கள் சிரம் பணிந்தவர்களாக விழுந்தனர். (யூஸுஃப்) “என் தந்தையே! முன்னர் (நான் கண்ட) என் கனவின் விளக்கம் இது. என் இறைவன் அதை உண்மையாக ஆக்கி விட்டான். சிறையிலிருந்து என்னை அவன் வெளியேற்றியபோதும், எனக்கும், என் சகோதரர்களுக்கு இடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணிய பின்னர், உங்களை கிராமத்திலிருந்து (என்னிடம்) கொண்டு வந்தபோதும் அவன் எனக்கு நன்மை புரிந்திருக் கிறான். நிச்சயமாக என் இறைவன், தான் நாடியதை செய்வதற்கு மகா நுட்பமானவன். நிச்சயமாக அவன்தான் நன்கறிந்தவன், மகா ஞானவான்.”