குர்ஆன் ஸூரா ஸூரத்து யூஸுஃப் வசனம் ௧௦
Qur'an Surah Yusuf Verse 10
ஸூரத்து யூஸுஃப் [௧௨]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ قَاۤئِلٌ مِّنْهُمْ لَا تَقْتُلُوْا يُوْسُفَ وَاَلْقُوْهُ فِيْ غَيٰبَتِ الْجُبِّ يَلْتَقِطْهُ بَعْضُ السَّيَّارَةِ اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَ (يوسف : ١٢)
- qāla
- قَالَ
- Said
- கூறினார்
- qāilun
- قَآئِلٌ
- a speaker
- கூறுபவர்
- min'hum
- مِّنْهُمْ
- among them
- அவர்களில்
- lā taqtulū
- لَا تَقْتُلُوا۟
- "(Do) not kill
- கொல்லாதீர்கள்
- yūsufa
- يُوسُفَ
- Yusuf
- யூஸுஃபை
- wa-alqūhu
- وَأَلْقُوهُ
- but throw him
- போடுங்கள் அவரை
- fī ghayābati
- فِى غَيَٰبَتِ
- in the bottom
- ஆழத்தில்
- l-jubi
- ٱلْجُبِّ
- (of) the well
- கிணற்றின்
- yaltaqiṭ'hu
- يَلْتَقِطْهُ
- will pick him
- எடுத்துக் கொள்வார்(கள்)/அவரை
- baʿḍu
- بَعْضُ
- some
- சிலர்
- l-sayārati
- ٱلسَّيَّارَةِ
- [the] caravan
- வழிப்போக்கர்களில்
- in kuntum fāʿilīna
- إِن كُنتُمْ فَٰعِلِينَ
- if you are doing"
- நீங்கள் செய்பவர்களாக இருந்தால்
Transliteration:
Qaalaa qaaa'ilum minhum laa taqtuloo Yoosufa wa alqoohu fee ghayaabatil jubbi yaltaqithu badus sai yaarati in kuntum faa 'ileen(QS. Yūsuf:10)
English Sahih International:
Said a speaker among them, "Do not kill Joseph but throw him into the bottom of the well; some travelers will pick him up – if you would do [something]." (QS. Yusuf, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
(அதற்கு) அவர்களில் ஒருவர், "யூஸுஃபை நீங்கள் கொலை செய்யாதீர்கள். நீங்கள் அவருக்கு ஏதும் (கெடுதல்) செய்தே தீர வேண்டுமென்று கருதினால், ஆழமான ஒரு பாழ்கிணற்றில் அவரை எறிந்துவிடுங்கள். வழிப்போக்கரில் எவரேனும் அவரை (கிணற்றில் இருந்து) எடுத்துக் கொள்ளக்கூடும்" என்று கூறினார். (ஸூரத்து யூஸுஃப், வசனம் ௧௦)
Jan Trust Foundation
அவர்களில் ஒருவர்| “நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் - அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களில் கூறுபவர் ஒருவர், “யூஸுஃபை கொல்லாதீர்கள். நீங்கள் (அவருக்கு கெடுதல்) செய்பவர்களாக இருந்தால் கிணற்றின் ஆழத்தில் அவரைப் போ(ட்டு வி)டுங்கள். வழிப்போக்கர்களில் சிலர் அவரை எடுத்துக் கொள்வார்கள்”என்று கூறினார்.