Skip to content

ஸூரா ஸூரத்து யூஸுஃப் - Page: 9

Yusuf

(Yūsuf)

௮௧

اِرْجِعُوْٓا اِلٰٓى اَبِيْكُمْ فَقُوْلُوْا يٰٓاَبَانَآ اِنَّ ابْنَكَ سَرَقَۚ وَمَا شَهِدْنَآ اِلَّا بِمَا عَلِمْنَا وَمَا كُنَّا لِلْغَيْبِ حٰفِظِيْنَ ٨١

ir'jiʿū
ٱرْجِعُوٓا۟
திரும்பிச்செல்லுங்கள்
ilā abīkum
إِلَىٰٓ أَبِيكُمْ
உங்கள் தந்தையிடம்
faqūlū
فَقُولُوا۟
இன்னும் கூறுங்கள்
yāabānā
يَٰٓأَبَانَآ
எங்கள் தந்தையே
inna
إِنَّ
நிச்சயமாக
ib'naka
ٱبْنَكَ
உம் மகன்
saraqa
سَرَقَ
திருடினான்
wamā
وَمَا
சாட்சி பகரவில்லை
shahid'nā
شَهِدْنَآ
சாட்சி பகரவில்லை நாங்கள்
illā
إِلَّا
தவிர
bimā ʿalim'nā
بِمَا عَلِمْنَا
நாங்கள் அறிந்ததைக் கொண்டு
wamā kunnā
وَمَا كُنَّا
நாங்கள் இருக்கவில்லை
lil'ghaybi
لِلْغَيْبِ
மறைவானவற்றை
ḥāfiẓīna
حَٰفِظِينَ
பாதுகாப்பவர்களாக
(மேலும் அவர்களை நோக்கி) "நீங்கள் (அனைவரும்) உங்கள் தந்தையிடம் திரும்பச் சென்று, எங்கள் தந்தையே! உங்கள் மகன் (புன்யாமீன்) மெய்யாகவே திருடிவிட்டான். உண்மையாகவே எங்களுக்குத் தெரிந்ததையே அன்றி (வேறொன்றும்) கூறவில்லை. மறைவாக நடைபெற்ற (இக்காரியத்)தில் இருந்து (அவரை) பாதுகாத்துக் கொள்ள எங்களால் முடியாமலாகி விட்டது என்றும்; ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௮௧)
Tafseer
௮௨

وَسْـَٔلِ الْقَرْيَةَ الَّتِيْ كُنَّا فِيْهَا وَالْعِيْرَ الَّتِيْٓ اَقْبَلْنَا فِيْهَاۗ وَاِنَّا لَصٰدِقُوْنَ ٨٢

wasali
وَسْـَٔلِ
நீர் கேட்பீராக
l-qaryata
ٱلْقَرْيَةَ
ஊரை
allatī
ٱلَّتِى
எது
kunnā
كُنَّا
நாங்கள் இருந்தோம்
fīhā
فِيهَا
அதில்
wal-ʿīra
وَٱلْعِيرَ
இன்னும் பயணக் கூட்டம்
allatī
ٱلَّتِىٓ
எது
aqbalnā
أَقْبَلْنَا
வந்தோம்
fīhā
فِيهَاۖ
அதில்
wa-innā
وَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
laṣādiqūna
لَصَٰدِقُونَ
உண்மையாளர்கள்தான்
(நாங்கள் சொல்வதை நீங்கள் நம்பாவிட்டால் நாங்கள் சென்றிருந்த அவ்வூராரையும் எங்களுடன் வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீங்கள் கே(ட்டறிந்து கொள்)ளுங்கள். நிச்சயமாக நாங்கள் உண்மையே கூறுகிறோம்" (என்று சொல்லும்படியாகக் கூறி அவர்களை அனுப்பிவிட்டு, தான் மட்டும் யூஸுஃபிடமே இருந்து கொண்டார்.) ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௮௨)
Tafseer
௮௩

قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ اَنْفُسُكُمْ اَمْرًاۗ فَصَبْرٌ جَمِيْلٌ ۗعَسَى اللّٰهُ اَنْ يَّأْتِيَنِيْ بِهِمْ جَمِيْعًاۗ اِنَّهٗ هُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ ٨٣

qāla
قَالَ
கூறினார்
bal
بَلْ
மாறாக
sawwalat
سَوَّلَتْ
அலங்கரித்தன
lakum
لَكُمْ
உங்களுக்கு
anfusukum
أَنفُسُكُمْ
உங்கள் ஆன்மாக்கள்
amran
أَمْرًاۖ
ஒரு காரியத்தை
faṣabrun
فَصَبْرٌ
ஆகவே பொறுமை
jamīlun
جَمِيلٌۖ
அழகியது, நல்லது
ʿasā l-lahu
عَسَى ٱللَّهُ
கூடும்/அல்லாஹ்
an yatiyanī
أَن يَأْتِيَنِى
வருவான்/என்னிடம்
bihim
بِهِمْ
அவர்களைக்கொண்டு
jamīʿan
جَمِيعًاۚ
அனைவரையும்
innahu huwa
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
(ஊர் திரும்பிய மற்ற சகோதரர்கள் இதனைத் தங்கள் தந்தை யஃகூப் நபியிடம் கூறவே, அதற்கவர் "நீங்கள் கூறுவது) சரியன்று! உங்கள் மனம், ஒரு (தவறான) விஷயத்தைச் செய்யும்படி உங்களைத் தூண்டிவிட்டது. ஆகவே, (எவரையும் குறைகூறாது) சகித்துக் கொள்வதே மிக்க நன்று. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுவான். நிச்சயமாக அவன் அனைத்தையும் அறிந்தவனும், ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்" என்று கூறிவிட்டு, ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௮௩)
Tafseer
௮௪

وَتَوَلّٰى عَنْهُمْ وَقَالَ يٰٓاَسَفٰى عَلٰى يُوْسُفَ وَابْيَضَّتْ عَيْنٰهُ مِنَ الْحُزْنِ فَهُوَ كَظِيْمٌ ٨٤

watawallā
وَتَوَلَّىٰ
இன்னும் விலகினார்
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டு
waqāla
وَقَالَ
இன்னும் கூறினார்
yāasafā
يَٰٓأَسَفَىٰ
என் துயரமே
ʿalā
عَلَىٰ
மீது
yūsufa
يُوسُفَ
யூஸுஃப்
wa-ib'yaḍḍat
وَٱبْيَضَّتْ
வெளுத்தன
ʿaynāhu
عَيْنَاهُ
அவரது இரு கண்கள்
mina l-ḥuz'ni
مِنَ ٱلْحُزْنِ
கவலையால்
fahuwa
فَهُوَ
அவர்
kaẓīmun
كَظِيمٌ
அடக்கிக் கொள்பவர்
அவர்களை விட்டு விலகிச் சென்று, "யூஸுஃபைப் பற்றி என்னுடைய துக்கமே!" என்று அவர் சப்தமிட்டார். அவரது இரு கண்களும் துக்கத்தால் (அழுதழுது) வெளுத்துப் பூத்துப்போயின. பின்னர், அவர் தன் கோபத்தை விழுங்கி அடக்கிக் கொண்டார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௮௪)
Tafseer
௮௫

قَالُوْا تَاللّٰهِ تَفْتَؤُا تَذْكُرُ يُوْسُفَ حَتّٰى تَكُوْنَ حَرَضًا اَوْ تَكُوْنَ مِنَ الْهَالِكِيْنَ ٨٥

qālū
قَالُوا۟
கூறினர்
tal-lahi
تَٱللَّهِ
அல்லாஹ் மீது சத்தியமாக
tafta-u tadhkuru
تَفْتَؤُا۟ تَذْكُرُ
நினைவு கூர்ந்து கொண்டே இருப்பீர்
yūsufa
يُوسُفَ
யூஸுஃபை
ḥattā takūna
حَتَّىٰ تَكُونَ
வரை/ஆகுவீர்
ḥaraḍan
حَرَضًا
அழிவை நெருங்கியவராக
aw
أَوْ
அல்லது
takūna
تَكُونَ
ஆகுவீர்
mina l-hālikīna
مِنَ ٱلْهَٰلِكِينَ
இறந்தவர்களில்
(இந்நிலைமையைக் கண்ட அவருடைய மக்கள் அவரை நோக்கி,) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃபை நினைத்து இளைத்து (உருகி) இறந்துவிடும் வரையில் (அவருடைய எண்ணத்தை) விடமாட்டீர்கள்" என்று கடிந்து கூறினார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௮௫)
Tafseer
௮௬

قَالَ اِنَّمَآ اَشْكُوْا بَثِّيْ وَحُزْنِيْٓ اِلَى اللّٰهِ وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ٨٦

qāla
قَالَ
கூறினார்
innamā ashkū
إِنَّمَآ أَشْكُوا۟
நான் முறையிடுவதெல்லாம்
bathī
بَثِّى
என் துக்கத்தை
waḥuz'nī
وَحُزْنِىٓ
இன்னும் என் கவலையை
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்விடம்தான்
wa-aʿlamu
وَأَعْلَمُ
இன்னும் அறிவேன்
mina l-lahi
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
mā lā taʿlamūna
مَا لَا تَعْلَمُونَ
நீங்கள் அறியாதவற்றை
அதற்கவர் "என் கவலையையும் துக்கத்தையும் அல்லாஹ்விடமே நான் முறையிடுகிறேன். நீங்கள் அறியாத வற்றையும் அல்லாஹ்வி(ன் அருளி)னால் நான் அறிந்திருக்கிறேன். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௮௬)
Tafseer
௮௭

يٰبَنِيَّ اذْهَبُوْا فَتَحَسَّسُوْا مِنْ يُّوْسُفَ وَاَخِيْهِ وَلَا تَا۟يْـَٔسُوْا مِنْ رَّوْحِ اللّٰهِ ۗاِنَّهٗ لَا يَا۟يْـَٔسُ مِنْ رَّوْحِ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْكٰفِرُوْنَ ٨٧

yābaniyya
يَٰبَنِىَّ
என் பிள்ளைகளே
idh'habū
ٱذْهَبُوا۟
செல்லுங்கள்
fataḥassasū
فَتَحَسَّسُوا۟
இன்னும் தேடுங்கள்
min yūsufa
مِن يُوسُفَ
யூஸுஃபை
wa-akhīhi
وَأَخِيهِ
இன்னும் அவரது சகோதரரை
walā tāy'asū
وَلَا تَا۟يْـَٔسُوا۟
நம்பிக்கை இழக்காதீர்கள்
min rawḥi
مِن رَّوْحِ
அருளில்
l-lahi
ٱللَّهِۖ
அல்லாஹ்வின்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக செய்தி
lā yāy'asu
لَا يَا۟يْـَٔسُ
நம்பிக்கை இழக்க மாட்டார்(கள்)
min rawḥi
مِن رَّوْحِ
அருளில்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
illā l-qawmu
إِلَّا ٱلْقَوْمُ
தவிர/மக்கள்
l-kāfirūna
ٱلْكَٰفِرُونَ
நிராகரிக்கின்றவர்கள்
என்னுடைய மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும், அவரது சகோதரரையும் தேடிப் பாருங்கள். அல்லாஹ்வின் அருளைப்பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்து விடாதீர்கள்; நிச்சயமாக (நன்றிகெட்ட) நம்பிக்கையற்றவர்களைத் தவிர (மற்றெவரும்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழந்துவிட மாட்டார்கள்" என்று(ம், பின்னும் ஒருமுறை எகிப்துக்குச் சென்று தேடும்படியும்) கூறினார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௮௭)
Tafseer
௮௮

فَلَمَّا دَخَلُوْا عَلَيْهِ قَالُوْا يٰٓاَيُّهَا الْعَزِيْزُ مَسَّنَا وَاَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبِضَاعَةٍ مُّزْجٰىةٍ فَاَوْفِ لَنَا الْكَيْلَ وَتَصَدَّقْ عَلَيْنَاۗ اِنَّ اللّٰهَ يَجْزِى الْمُتَصَدِّقِيْنَ ٨٨

falammā
فَلَمَّا
போது
dakhalū
دَخَلُوا۟
அவர்கள் நுழைந்தனர்
ʿalayhi
عَلَيْهِ
அவரிடம்
qālū
قَالُوا۟
கூறினர்
yāayyuhā l-ʿazīzu
يَٰٓأَيُّهَا ٱلْعَزِيزُ
ஓ அதிபரே!
massanā
مَسَّنَا
ஏற்பட்டது/எங்களுக்கு
wa-ahlanā
وَأَهْلَنَا
இன்னும் குடும்பத்திற்கும்/ எங்கள்
l-ḍuru
ٱلضُّرُّ
வறுமை, கொடுமை
waji'nā
وَجِئْنَا
நாங்கள் வந்தோம்
bibiḍāʿatin
بِبِضَٰعَةٍ
ஒரு பொருளைக் கொண்டு
muz'jātin
مُّزْجَىٰةٍ
அற்பமானது
fa-awfi
فَأَوْفِ
ஆகவே முழு மைப்படுத்துவீராக
lanā
لَنَا
எங்களுக்கு
l-kayla
ٱلْكَيْلَ
அளவையை
wataṣaddaq
وَتَصَدَّقْ
இன்னும் தானம் புரிவீராக
ʿalaynā
عَلَيْنَآۖ
எங்கள் மீது
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yajzī
يَجْزِى
கூலியளிப்பான்
l-mutaṣadiqīna
ٱلْمُتَصَدِّقِينَ
தர்மசாலிகளுக்கு
பிறகு, இவர்கள் (எகிப்துக்கு வந்து) யூஸுஃபிடம் சென்று அவரை நோக்கி ("மிஸ்ரின் அதிபதியாகிய) அஜீஸை! எங்களையும் எங்கள் குடும்பத்தையும் (பஞ்சத்தின்) கொடுமை பிடித்துக் கொண்டது. (எங்களிடமிருந்த) ஒரு அற்பப்பொருளையே நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். (அதனைக் கவனியாது) எங்களுக்கு வேண்டிய தானியத்தை முழுமையாக அளந்து கொடுத்து மேற்கொண்டும் எங்களுக்குத் தானமாகவும் கொடுத்தருள்வீராக! நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்குப் பிரதிபலன் அளிப்பான்" என்று கூறினார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௮௮)
Tafseer
௮௯

قَالَ هَلْ عَلِمْتُمْ مَّا فَعَلْتُمْ بِيُوْسُفَ وَاَخِيْهِ اِذْ اَنْتُمْ جَاهِلُوْنَ ٨٩

qāla
قَالَ
கூறினார்
hal ʿalim'tum
هَلْ عَلِمْتُم
நீங்கள்அறிந்தீர்களா?
mā faʿaltum
مَّا فَعَلْتُم
என்ன செய்தீர்கள்?
biyūsufa
بِيُوسُفَ
யூஸுஃபுக்கு
wa-akhīhi
وَأَخِيهِ
இன்னும் அவருடைய சகோதரருக்கு
idh antum
إِذْ أَنتُمْ
இருந்தபோது/நீங்கள்
jāhilūna
جَٰهِلُونَ
அறியாதவர்கள்
(அச்சமயம் அவர் அவர்களை நோக்கி,) "நீங்கள் அறியாமையில் ஆழ்ந்து கிடந்தபோது யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௮௯)
Tafseer
௯௦

قَالُوْٓا ءَاِنَّكَ لَاَنْتَ يُوْسُفُۗ قَالَ اَنَا۠ يُوْسُفُ وَهٰذَآ اَخِيْ قَدْ مَنَّ اللّٰهُ عَلَيْنَاۗ اِنَّهٗ مَنْ يَّتَّقِ وَيَصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ ٩٠

qālū
قَالُوٓا۟
கூறினர்
a-innaka
أَءِنَّكَ
?/நிச்சயமாக நீர்
la-anta
لَأَنتَ
நீர்தான்
yūsufu
يُوسُفُۖ
யூஸுஃப்
qāla
قَالَ
கூறினார்
anā
أَنَا۠
நான்
yūsufu
يُوسُفُ
யூஸுஃப்
wahādhā
وَهَٰذَآ
இன்னும் இவர்
akhī
أَخِىۖ
என் சகோதரர்
qad
قَدْ
திட்டமாக
manna
مَنَّ
அருள் புரிந்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalaynā
عَلَيْنَآۖ
எங்கள் மீது
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக செய்தி
man yattaqi
مَن يَتَّقِ
எவர் அஞ்சுவார்
wayaṣbir
وَيَصْبِرْ
இன்னும் பொறுப்பார்
fa-inna l-laha
فَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
lā yuḍīʿu
لَا يُضِيعُ
வீணாக்க மாட்டான்
ajra
أَجْرَ
கூலியை
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிபவர்கள்
அதற்கவர்கள் (திடுக்கிட்டு) "மெய்யாகவே நீங்கள் யூஸுஃபாக இருப்பீரோ?" என்று கேட்டார்கள். அதற்கவர் "நான்தான் யூஸுஃப்! இவர் என் சகோதரர். நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது பேரருள் புரிந்திருக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக எவர் இறை அச்சமுடையவராக இருந்து, கஷ்டங்களையும் சகித்துக் கொள்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்தவரின் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கி விடுவதில்லை" என்று கூறினார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௯௦)
Tafseer