Skip to content

ஸூரா ஸூரத்து யூஸுஃப் - Page: 8

Yusuf

(Yūsuf)

௭௧

قَالُوْا وَاَقْبَلُوْا عَلَيْهِمْ مَّاذَا تَفْقِدُوْنَ ٧١

qālū
قَالُوا۟
கூறினர்
wa-aqbalū
وَأَقْبَلُوا۟
இன்னும் முன்னோக்கி வந்தனர்
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் பக்கம்
mādhā tafqidūna
مَّاذَا تَفْقِدُونَ
எதை?/இழக்கிறீர்கள்
அதற்கவர்கள், இவர்களை முன்னோக்கி வந்து "நீங்கள் எதை இழந்துவிட்டீர்கள்?" என்று கேட்டார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௭௧)
Tafseer
௭௨

قَالُوْا نَفْقِدُ صُوَاعَ الْمَلِكِ وَلِمَنْ جَاۤءَ بِهٖ حِمْلُ بَعِيْرٍ وَّاَنَا۠ بِهٖ زَعِيْمٌ ٧٢

qālū
قَالُوا۟
கூறினர்
nafqidu
نَفْقِدُ
இழக்கிறோம்
ṣuwāʿa
صُوَاعَ
குவளையை
l-maliki
ٱلْمَلِكِ
அரசருடைய
waliman
وَلِمَن
எவருக்கு?
jāa
جَآءَ
வந்தார்
bihi
بِهِۦ
அதைக் கொண்டு
ḥim'lu
حِمْلُ
சுமை
baʿīrin
بَعِيرٍ
ஓர் ஒட்டகை
wa-anā
وَأَنَا۠
நான்
bihi
بِهِۦ
அதற்கு
zaʿīmun
زَعِيمٌ
பொறுப்பாளன்
அதற்கவர்கள், "அரசருடைய (அளவு) மரக்காலை நாங்கள் இழந்து விட்டோம். அதனை எவர் (தேடிக்) கொடுத்தபோதிலும் அவருக்கு ஒரு ஒட்டகைச் சுமை (தானியம் வெகுமதி) உண்டு. இதற்கு நானே பொறுப்பாளி" என்று (அவர்களில் ஒருவன்) கூறினான். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௭௨)
Tafseer
௭௩

قَالُوْا تَاللّٰهِ لَقَدْ عَلِمْتُمْ مَّا جِئْنَا لِنُفْسِدَ فِى الْاَرْضِ وَمَا كُنَّا سَارِقِيْنَ ٧٣

qālū
قَالُوا۟
கூறினர்
tal-lahi
تَٱللَّهِ
அல்லாஹ் மீது சத்தியமாக
laqad ʿalim'tum
لَقَدْ عَلِمْتُم
நீங்கள்அறிந்திருக்கிறீர்கள்
mā ji'nā
مَّا جِئْنَا
நாங்கள் வரவில்லை
linuf'sida
لِنُفْسِدَ
நாங்கள் விஷமம் செய்வதற்கு
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
இவ்வூரில்
wamā kunnā
وَمَا كُنَّا
இன்னும் நாங்கள் இருக்கவில்லை
sāriqīna
سَٰرِقِينَ
திருடர்களாக
அதற்கு இவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் இவ்வூரில் விஷமம் செய்வதற்காக வரவில்லை என்பதை நீங்களும் நன்கறிவீர்கள். அன்றி, நாங்கள் திருடுபவர்களும் அல்ல" என்று கூறினார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௭௩)
Tafseer
௭௪

قَالُوْا فَمَا جَزَاۤؤُهٗٓ اِنْ كُنْتُمْ كٰذِبِيْنَ ٧٤

qālū famā jazāuhu
قَالُوا۟ فَمَا جَزَٰٓؤُهُۥٓ
கூறினர்/என்ன?/தண்டனை/அதன்
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
kādhibīna
كَٰذِبِينَ
பொய்யர்களாக
அதற்கு அவர்கள் "நீங்கள் (இதில்) பொய்யர்களாக இருந்தால் அதற்குரிய தண்டனை என்ன?" என்று கேட்டனர். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௭௪)
Tafseer
௭௫

قَالُوْا جَزَاۤؤُهٗ مَنْ وُّجِدَ فِيْ رَحْلِهٖ فَهُوَ جَزَاۤؤُهٗ ۗ كَذٰلِكَ نَجْزِى الظّٰلِمِيْنَ ٧٥

qālū
قَالُوا۟
கூறினர்
jazāuhu
جَزَٰٓؤُهُۥ
அதன் தண்டனை
man
مَن
எவர்
wujida
وُجِدَ
காணப்பட்டது
fī raḥlihi
فِى رَحْلِهِۦ
சுமையில்/அவருடைய
fahuwa
فَهُوَ
அவரே
jazāuhu
جَزَٰٓؤُهُۥۚ
அதற்குரிய தண்டனையாவார்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
najzī
نَجْزِى
நாம் தண்டிப்போம்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களை
அதற்கவர்கள் "எவனுடைய சுமையில் அது காணப்படுகிறதோ அவனே அதற்குரிய தண்டனையாவான். (ஆகவே, அவனை அடிமையாக வைத்துக் கொள்ளலாம். திருடும்) அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே நாங்கள் தண்டனை அளிப்போம்" என்று கூறினார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௭௫)
Tafseer
௭௬

فَبَدَاَ بِاَوْعِيَتِهِمْ قَبْلَ وِعَاۤءِ اَخِيْهِ ثُمَّ اسْتَخْرَجَهَا مِنْ وِّعَاۤءِ اَخِيْهِۗ كَذٰلِكَ كِدْنَا لِيُوْسُفَۗ مَا كَانَ لِيَأْخُذَ اَخَاهُ فِيْ دِيْنِ الْمَلِكِ اِلَّآ اَنْ يَّشَاۤءَ اللّٰهُ ۗنَرْفَعُ دَرَجَاتٍ مَّنْ نَّشَاۤءُۗ وَفَوْقَ كُلِّ ذِيْ عِلْمٍ عَلِيْمٌ ٧٦

fabada-a
فَبَدَأَ
ஆரம்பித்தார்
bi-awʿiyatihim
بِأَوْعِيَتِهِمْ
மூட்டைகளில்/அவர்களின்
qabla
قَبْلَ
முன்பாக
wiʿāi
وِعَآءِ
மூட்டைக்கு
akhīhi
أَخِيهِ
தன் சகோதரனின்
thumma is'takhrajahā
ثُمَّ ٱسْتَخْرَجَهَا
பிறகு/வெளிப்படுத்தினார்/அதை
min wiʿāi
مِن وِعَآءِ
மூட்டையிலிருந்து
akhīhi
أَخِيهِۚ
தன் சகோதரனின்
kadhālika
كَذَٰلِكَ
இப்படித்தான்
kid'nā
كِدْنَا
காரணம் செய்தோம்
liyūsufa
لِيُوسُفَۖ
யூஸுஃபுக்கு
mā kāna
مَا كَانَ
அவர் இல்லை
liyakhudha
لِيَأْخُذَ
எடுப்பவராக
akhāhu
أَخَاهُ
தன் சகோதரனை
fī dīni
فِى دِينِ
சட்டப்படி
l-maliki
ٱلْمَلِكِ
அரசரின்
illā an yashāa
إِلَّآ أَن يَشَآءَ
தவிர/நாடினால்
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
narfaʿu
نَرْفَعُ
உயர்த்துகின்றோம்
darajātin
دَرَجَٰتٍ
பதவிகளால்
man
مَّن
எவரை
nashāu
نَّشَآءُۗ
விரும்புகின்றோம்
wafawqa
وَفَوْقَ
இன்னும் மேல்
kulli
كُلِّ
ஒவ்வொரு
dhī ʿil'min
ذِى عِلْمٍ
கல்வியுடையவர்
ʿalīmun
عَلِيمٌ
ஒரு கல்விமான்
பின்னர் தன் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதியி(னைச் சோதிப்பத)ற்கு முன்னதாக மற்றவர்களின் பொதிகளைச் சோதிக்க ஆரம்பித்தார். (அவற்றில் அது கிடைக்காமல் போகவே) பின்னர் தன் சகோதரனின் மூட்டையிலிருந்து அதனை வெளிப்படுத்தினார். (தன் சகோதரனை எடுத்துக் கொள்ள) யூஸுஃபுக்கு இந்த உபாயத்தை நாம் கற்பித்தோம். அல்லாஹ் நாடினாலன்றி அவர் தன் சகோதரனை எடுத்துக்கொள்ள (எகிப்து) அரசரின் சட்டப்படி முடியாதிருந்தது. நாம் விரும்பியவர்களின் பதவிகளை உயர்த்துகிறோம். ஒவ்வொரு கல்விமானுக்கும் மேலான ஒரு கல்விமான் (இருந்தே) இருக்கிறான். (ஆனால், நாமோ அனைவரையும் விட மேலான கல்விமான்.) ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௭௬)
Tafseer
௭௭

۞ قَالُوْٓا اِنْ يَّسْرِقْ فَقَدْ سَرَقَ اَخٌ لَّهٗ مِنْ قَبْلُۚ فَاَسَرَّهَا يُوْسُفُ فِيْ نَفْسِهٖ وَلَمْ يُبْدِهَا لَهُمْۚ قَالَ اَنْتُمْ شَرٌّ مَّكَانًا ۚوَاللّٰهُ اَعْلَمُ بِمَا تَصِفُوْنَ ٧٧

qālū
قَالُوٓا۟
கூறினர்
in yasriq
إِن يَسْرِقْ
அவர் திருடினால்
faqad saraqa
فَقَدْ سَرَقَ
திருடி விட்டான்
akhun
أَخٌ
ஒரு சகோதரன்
lahu
لَّهُۥ
அவருடைய
min qablu
مِن قَبْلُۚ
முன்னர்
fa-asarrahā
فَأَسَرَّهَا
மறைத்தார்/அதை
yūsufu
يُوسُفُ
யூஸுஃப்
fī nafsihi
فِى نَفْسِهِۦ
தன் உள்ளத்தில்
walam yub'dihā
وَلَمْ يُبْدِهَا
வெளியாக்கவில்லை/அதை
lahum
لَهُمْۚ
அவர்களுக்கு
qāla
قَالَ
கூறினார்
antum
أَنتُمْ
நீங்கள்
sharrun
شَرٌّ
மிகவும் கெட்டவர்கள்
makānan
مَّكَانًاۖ
தரம்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bimā taṣifūna
بِمَا تَصِفُونَ
நீங்கள் வருணிப்பதை
(புன்யாமீனின் பொதியில் அளவு பாத்திரத்தைக் கண்ட யூஸுஃபின் மற்ற சகோதரர்கள்) அவன் (அதனைத்) திருடியிருந்தால் அவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) இதற்கு முன் நிச்சயமாகத் திருடியே இருப்பான் என்று (எப்ரூ மொழியில் தங்களுக்குள்) கூறிக்கொண்டனர். (இதனைச் செவியுற்ற எப்ரூ மொழி அறிந்த) யூஸுஃப் (அதன் உண்மையை) அவர்களுக்கு வெளியாக்காது, அதைத் தன் மனத்திற்குள் வைத்துக்கொண்டு "நீங்கள் மிகப் பொல்லாதவர்கள். (அவருடைய சகோதரர் திருடியதாக) நீங்கள் கூறுகிறீர்களே. அதனை அல்லாஹ் நன்கறிவான்" என்று கூறிவிட்டார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௭௭)
Tafseer
௭௮

قَالُوْا يٰٓاَيُّهَا الْعَزِيْزُ اِنَّ لَهٗٓ اَبًا شَيْخًا كَبِيْرًا فَخُذْ اَحَدَنَا مَكَانَهٗ ۚاِنَّا نَرٰىكَ مِنَ الْمُحْسِنِيْنَ ٧٨

qālū
قَالُوا۟
கூறினர்
yāayyuhā l-ʿazīzu
يَٰٓأَيُّهَا ٱلْعَزِيزُ
ஓ அதிபரே!
inna
إِنَّ
நிச்சயமாக
lahu
لَهُۥٓ
அவருக்கு
aban
أَبًا
ஒரு தந்தை
shaykhan kabīran
شَيْخًا كَبِيرًا
முதியவர்/பெரியவர்
fakhudh
فَخُذْ
எடுப்பீராக
aḥadanā
أَحَدَنَا
எங்களில் ஒருவரை
makānahu
مَكَانَهُۥٓۖ
இவருடைய இடத்தில்
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
narāka
نَرَىٰكَ
காண்கிறோம்/உம்மை
mina l-muḥ'sinīna
مِنَ ٱلْمُحْسِنِينَ
நல்லறம்புரிபவர்களில்
அதற்கவர்கள் (யூஸுஃபை நோக்கி எகிப்தின் அதிபதியாகிய) "அஜீஸை! (அவரைப் பற்றி கவலைப்படக்கூடிய) முதிர்ந்த வயதுடைய தந்தை அவருக்கு உண்டு. (நீங்கள் அவரைப் பிடித்துக் கொண்டால் இத்துக்கத்தால் அவர் இறந்துவிடுவார்.) ஆகவே, அவருக்குப் பதிலாக எங்களில் ஒருவரை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். நிச்சயமாக நாம் உங்களைப் பெரும் உபகாரிகளில் ஒருவராகவே காண்கிறோம்" என்று கூறினார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௭௮)
Tafseer
௭௯

قَالَ مَعَاذَ اللّٰهِ اَنْ نَّأْخُذَ اِلَّا مَنْ وَّجَدْنَا مَتَاعَنَا عِنْدَهٗٓ ۙاِنَّآ اِذًا لَّظٰلِمُوْنَ ࣖ ٧٩

qāla
قَالَ
கூறினார்
maʿādha
مَعَاذَ
பாதுகாப்பானாக
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
an nakhudha
أَن نَّأْخُذَ
நாம் பிடிப்பதை
illā man
إِلَّا مَن
தவிர/எவரை
wajadnā
وَجَدْنَا
கண்டோம்
matāʿanā
مَتَٰعَنَا
நம் பொருளை
ʿindahu
عِندَهُۥٓ
அவரிடம்
innā
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
idhan
إِذًا
அப்படி செய்தால்
laẓālimūna
لَّظَٰلِمُونَ
அநியாயக்காரர்கள்தான்
அதற்கவர், எவரிடம் நம்முடைய பொருள் காணப்பட்டதோ அவரை அன்றி (மற்றெவரையும்) பிடித்துக்கொள்ளாது அல்லாஹ் என்னை காப்பானாக! (மற்றெவரையும் பிடித்துக்கொண்டால்) நிச்சயமாக நான் பெரும் அநியாயக்காரனாகி விடுவேன்" என்று கூறிவிட்டார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௭௯)
Tafseer
௮௦

فَلَمَّا اسْتَا۟يْـَٔسُوْا مِنْهُ خَلَصُوْا نَجِيًّاۗ قَالَ كَبِيْرُهُمْ اَلَمْ تَعْلَمُوْٓا اَنَّ اَبَاكُمْ قَدْ اَخَذَ عَلَيْكُمْ مَّوْثِقًا مِّنَ اللّٰهِ وَمِنْ قَبْلُ مَا فَرَّطْتُّمْ فِيْ يُوْسُفَ فَلَنْ اَبْرَحَ الْاَرْضَ حَتّٰى يَأْذَنَ لِيْٓ اَبِيْٓ اَوْ يَحْكُمَ اللّٰهُ لِيْۚ وَهُوَ خَيْرُ الْحٰكِمِيْنَ ٨٠

falammā
فَلَمَّا
போது
is'tayasū
ٱسْتَيْـَٔسُوا۟
அவர்கள் நம்பிக்கையிழந்தனர்
min'hu
مِنْهُ
அவரிடம்
khalaṣū
خَلَصُوا۟
அவர்கள் விலகினர்
najiyyan
نَجِيًّاۖ
ஆலோசித்தவர்களாக
qāla
قَالَ
கூறினார்
kabīruhum
كَبِيرُهُمْ
பெரியவர் அவர்களில்
alam taʿlamū
أَلَمْ تَعْلَمُوٓا۟
நீங்கள் அறியவில்லையா?
anna
أَنَّ
நிச்சயமாக
abākum
أَبَاكُمْ
தந்தை/உங்கள்
qad
قَدْ
திட்டமாக
akhadha
أَخَذَ
வாங்கினார்
ʿalaykum
عَلَيْكُم
உங்களிடம்
mawthiqan
مَّوْثِقًا
ஓர் உறுதிமானத்தை
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
wamin qablu
وَمِن قَبْلُ
இன்னும் முன்னர்
mā farraṭtum
مَا فَرَّطتُمْ
நீங்கள் தவறிழைத்ததை
fī yūsufa
فِى يُوسُفَۖ
யூஸுஃப் விஷயத்தில்
falan abraḥa
فَلَنْ أَبْرَحَ
ஆகவே நகர மாட்டேன்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியைவிட்டு
ḥattā
حَتَّىٰ
வரை
yadhana
يَأْذَنَ
அனுமதியளிக்கின்றார்
lī abī
لِىٓ أَبِىٓ
எனக்கு/என் தந்தை
aw
أَوْ
அல்லது
yaḥkuma
يَحْكُمَ
தீர்ப்பளிக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
لِىۖ
எனக்கு
wahuwa
وَهُوَ
அவன்
khayru
خَيْرُ
மிக மேலானவன்
l-ḥākimīna
ٱلْحَٰكِمِينَ
தீர்ப்பளிப்பவர்களில்
அவரிடம் அவர்கள் நம்பிக்கையிழந்து விடவே, அவர்கள் (தங்களுக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களில் பெரியவர் (மற்றவர்களை நோக்கி) "உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் வாங்கியிருப்பதை நீங்கள் அறியவில்லையா? இதற்கு முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் செய்த துரோகம் வேறு இருக்கிறது. ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கும் வரையில் அல்லது அல்லாஹ் எனக்கு யாதொரு தீர்ப்பளிக்கும் வரையில் இங்கிருந்து நான் அகல மாட்டேன்; தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் அவன்தான் மிக்க மேலானவன்" என்று கூறினார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௮௦)
Tafseer