Skip to content

ஸூரா ஸூரத்து யூஸுஃப் - Page: 7

Yusuf

(Yūsuf)

௬௧

قَالُوْا سَنُرَاوِدُ عَنْهُ اَبَاهُ وَاِنَّا لَفَاعِلُوْنَ ٦١

qālū
قَالُوا۟
கூறினார்கள்
sanurāwidu
سَنُرَٰوِدُ
தொடர்ந்து கேட்போம்
ʿanhu
عَنْهُ
அவரை
abāhu
أَبَاهُ
அவருடைய தந்தையிடம்
wa-innā
وَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
lafāʿilūna
لَفَٰعِلُونَ
செய்பவர்கள்தான்
அதற்கவர்கள் "நாங்கள் அவருடைய தந்தையிடம் கேட்டுக்கொண்டு (அவரை அழைத்துக் கொண்டு வருவதற்கு) வேண்டிய முயற்சிகளை நிச்சயமாகச் செய்வோம்" என்று கூறினார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௬௧)
Tafseer
௬௨

وَقَالَ لِفِتْيٰنِهِ اجْعَلُوْا بِضَاعَتَهُمْ فِيْ رِحَالِهِمْ لَعَلَّهُمْ يَعْرِفُوْنَهَآ اِذَا انْقَلَبُوْٓا اِلٰٓى اَهْلِهِمْ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ ٦٢

waqāla
وَقَالَ
கூறினார்
lifit'yānihi
لِفِتْيَٰنِهِ
தன் வாலிபர்களிடம்
ij'ʿalū
ٱجْعَلُوا۟
வையுங்கள்
biḍāʿatahum
بِضَٰعَتَهُمْ
அவர்களுடைய கிரயத்தை
fī riḥālihim
فِى رِحَالِهِمْ
அவர்களுடைய மூட்டைகளில்
laʿallahum yaʿrifūnahā
لَعَلَّهُمْ يَعْرِفُونَهَآ
அவர்கள் அறியவேண்டும்/அதை
idhā inqalabū
إِذَا ٱنقَلَبُوٓا۟
அவர்கள் திரும்பினால்
ilā ahlihim
إِلَىٰٓ أَهْلِهِمْ
தங்கள் குடும்பத்திடம்
laʿallahum yarjiʿūna
لَعَلَّهُمْ يَرْجِعُونَ
அவர்கள் திரும்பி வரவேண்டும்
(பின்னர் யூஸுஃப்) தன் ஆட்களை நோக்கி "அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய (பொதி) மூட்டைகளில் (மறைத்து) வைத்துவிடுங்கள். அவர்கள் தங்கள் குடும்பம் சேர்ந்து (தானிய மூட்டைகளை அவிழ்க்கும்போது) அதனை அறிந்துகொண்டு (அதனை நம்மிடம் செலுத்தத்) திரும்பி வரக்கூடும்" என்று கூறினார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௬௨)
Tafseer
௬௩

فَلَمَّا رَجَعُوْٓا اِلٰٓى اَبِيْهِمْ قَالُوْا يٰٓاَبَانَا مُنِعَ مِنَّا الْكَيْلُ فَاَرْسِلْ مَعَنَآ اَخَانَا نَكْتَلْ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ ٦٣

falammā
فَلَمَّا
போது
rajaʿū
رَجَعُوٓا۟
அவர்கள் திரும்பினர்
ilā abīhim
إِلَىٰٓ أَبِيهِمْ
தந்தையிடம்/தம்
qālū
قَالُوا۟
கூறினர்
yāabānā
يَٰٓأَبَانَا
எங்கள் தந்தையே
muniʿa
مُنِعَ
தடுக்கப்பட்டது
minnā
مِنَّا
எங்களுக்கு
l-kaylu
ٱلْكَيْلُ
அளவை
fa-arsil
فَأَرْسِلْ
ஆகவே அனுப்புவீராக
maʿanā
مَعَنَآ
எங்களுடன்
akhānā
أَخَانَا
சகோதரனை/எங்கள்
naktal
نَكْتَلْ
அளந்து (வாங்கி) வருவோம்
wa-innā
وَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
lahu
لَهُۥ
அவரை
laḥāfiẓūna
لَحَٰفِظُونَ
பாதுகாப்பவர்கள்தான்
(தானியம் வாங்கிய) அவர்கள் தம் தந்தையிடம் திரும்பி வந்தபொழுது "எங்கள் தந்தையே! (புன்யாமீனையும் நாங்கள் அழைத்துச் செல்லாவிட்டால்) எங்களுக்கு(த் தானியம்) அளப்பது தடுக்கப்பட்டுவிடும். ஆதலால், எங்கள் சகோதரனையும் எங்களுடன் அனுப்பி வையுங்கள். நாங்கள் தானியம் வாங்கிக் கொண்டு நிச்சயமாக அவரையும் பாதுகாத்து வருவோம்" என்று கூறினார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௬௩)
Tafseer
௬௪

قَالَ هَلْ اٰمَنُكُمْ عَلَيْهِ اِلَّا كَمَآ اَمِنْتُكُمْ عَلٰٓى اَخِيْهِ مِنْ قَبْلُۗ فَاللّٰهُ خَيْرٌ حٰفِظًا وَّهُوَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ ٦٤

qāla
قَالَ
கூறினார்
hal āmanukum
هَلْ ءَامَنُكُمْ
நான் நம்புவதா?/உங்களை
ʿalayhi
عَلَيْهِ
இவர் விசயத்தில்
illā kamā
إِلَّا كَمَآ
தவிர/போல்
amintukum
أَمِنتُكُمْ
நம்பினேன்/உங்களை
ʿalā akhīhi
عَلَىٰٓ أَخِيهِ
இவருடைய சகோதரர் விஷயத்தில்
min qablu
مِن قَبْلُۖ
முன்னர்
fal-lahu
فَٱللَّهُ
அல்லாஹ்
khayrun
خَيْرٌ
மிக மேலானவன்
ḥāfiẓan
حَٰفِظًاۖ
பாதுகாவலன்
wahuwa
وَهُوَ
அவன்
arḥamu
أَرْحَمُ
மகா கருணையாளன்
l-rāḥimīna
ٱلرَّٰحِمِينَ
அருள் புரிபவர்களில்
(அதற்கு யஃகூப்) "இதற்கு முன்னர் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் நான் உங்களை நம்பி (மோசம் போ)னது போல் இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (முடியாது.) பாதுகாப்பதில் அல்லாஹ் மிக்க மேலானவன்; அவனே அருள் புரிபவர்களிலெல்லாம் மிக்க அருளாளன்" என்று கூறிவிட்டார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௬௪)
Tafseer
௬௫

وَلَمَّا فَتَحُوْا مَتَاعَهُمْ وَجَدُوْا بِضَاعَتَهُمْ رُدَّتْ اِلَيْهِمْۗ قَالُوْا يٰٓاَبَانَا مَا نَبْغِيْۗ هٰذِهٖ بِضَاعَتُنَا رُدَّتْ اِلَيْنَا وَنَمِيْرُ اَهْلَنَا وَنَحْفَظُ اَخَانَا وَنَزْدَادُ كَيْلَ بَعِيْرٍۗ ذٰلِكَ كَيْلٌ يَّسِيْرٌ ٦٥

walammā
وَلَمَّا
போது
fataḥū
فَتَحُوا۟
அவர்கள் திறந்தனர்
matāʿahum
مَتَٰعَهُمْ
தங்கள் பொருளை
wajadū
وَجَدُوا۟
கண்டனர்
biḍāʿatahum
بِضَٰعَتَهُمْ
தங்கள் கிரயம்
ruddat
رُدَّتْ
திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது
ilayhim
إِلَيْهِمْۖ
தங்களிடம்
qālū
قَالُوا۟
கூறினர்
yāabānā
يَٰٓأَبَانَا
எங்கள் தந்தையே
mā nabghī
مَا نَبْغِىۖ
என்ன தேடுகிறோம்?
hādhihi
هَٰذِهِۦ
இதோ
biḍāʿatunā
بِضَٰعَتُنَا
நம் கிரயம்
ruddat
رُدَّتْ
திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது
ilaynā
إِلَيْنَاۖ
நம்மிடமே
wanamīru
وَنَمِيرُ
தானியங்களைக் கொண்டு வருவோம்
ahlanā
أَهْلَنَا
நம் குடும்பத்திற்கு
wanaḥfaẓu
وَنَحْفَظُ
இன்னும் காப்பாற்றுவோம்
akhānā
أَخَانَا
சகோதரனை/எங்கள்
wanazdādu
وَنَزْدَادُ
இன்னும் அதிகமாக்குவோம்
kayla
كَيْلَ
அளவையை
baʿīrin
بَعِيرٍۖ
ஓர் ஒட்டகத்தின்
dhālika kaylun
ذَٰلِكَ كَيْلٌ
இது/ஓர் அளவை
yasīrun
يَسِيرٌ
இலகுவானது
பின்னர், அவர்கள் தங்கள் சாமான் மூட்டைகளை அவிழ்த்தபொழுது அவர்கள் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் (அனைத்தும்) அவர்களிடமே திருப்பப்பட்டு விட்டதைக் கண்டு "எங்கள் தந்தையே! நமக்கு வேண்டியதென்ன? (பொருள்தானே!) இதோ! நாம் (கிரயமாகக்) கொடுத்த பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன. (புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தாருங்கள்.) நம் குடும்பத்திற்கு வேண்டிய தானியங்களை வாங்கி வருவோம். எங்கள் சகோதரனையும் காப்பாற்றி வருவோம். (அவருக்காகவும்) ஓர் ஒட்டக (சுமை) தானியத்தை அதிகமாகவே கொண்டு வருவோம். (கொண்டு வந்திருக்கும்) இது வெகு சொற்ப தானியம்தான்" என்று கூறினார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௬௫)
Tafseer
௬௬

قَالَ لَنْ اُرْسِلَهٗ مَعَكُمْ حَتّٰى تُؤْتُوْنِ مَوْثِقًا مِّنَ اللّٰهِ لَتَأْتُنَّنِيْ بِهٖٓ اِلَّآ اَنْ يُّحَاطَ بِكُمْۚ فَلَمَّآ اٰتَوْهُ مَوْثِقَهُمْ قَالَ اللّٰهُ عَلٰى مَا نَقُوْلُ وَكِيْلٌ ٦٦

qāla
قَالَ
கூறினார்
lan ur'silahu
لَنْ أُرْسِلَهُۥ
அனுப்பவே மாட்டேன்/அவரை
maʿakum
مَعَكُمْ
உங்களுடன்
ḥattā
حَتَّىٰ
வரை
tu'tūni
تُؤْتُونِ
கொடுப்பீர்கள்/எனக்கு
mawthiqan
مَوْثِقًا
ஓர் உறுதிமானத்தை
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின்
latatunnanī
لَتَأْتُنَّنِى
நிச்சயமாக வருவீர்கள்/என்னிடம்
bihi
بِهِۦٓ
அவரைக் கொண்டு
illā
إِلَّآ
தவிர
an yuḥāṭa
أَن يُحَاطَ
அழிவு ஏற்பட்டால்
bikum
بِكُمْۖ
உங்களுக்கு
falammā
فَلَمَّآ
போது
ātawhu
ءَاتَوْهُ
அவர்கள்கொடுத்தனர் அவருக்கு
mawthiqahum
مَوْثِقَهُمْ
தங்கள் உறுதிமானத்தை
qāla
قَالَ
கூறினார்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்வே
ʿalā mā naqūlu
عَلَىٰ مَا نَقُولُ
நாம் கூறுவதற்கு
wakīlun
وَكِيلٌ
பொறுப்பாளன்/சாட்சியாளன்
(அதற்கு அவர்களின் தந்தை) "நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன். ஆயினும், உங்கள் அனைவரையுமே (யாதொரு ஆபத்து) சூழ்ந்து கொண்டாலன்றி நிச்சயமாக அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் (அனைவரும்) எனக்குச் சத்தியம் செய்து கொடுத்தாலன்றி" என்று கூறினார். அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து கொடுக்கவே அதற்கு அவர் "நாம் செய்துகொண்ட இவ்வுடன்பாட்டிற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்" என்று (கூறி புன்யாமீனை அழைத்துச் செல்ல அனுமதியளித்தார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௬௬)
Tafseer
௬௭

وَقَالَ يٰبَنِيَّ لَا تَدْخُلُوْا مِنْۢ بَابٍ وَّاحِدٍ وَّادْخُلُوْا مِنْ اَبْوَابٍ مُّتَفَرِّقَةٍۗ وَمَآ اُغْنِيْ عَنْكُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَيْءٍۗ اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ ۗعَلَيْهِ تَوَكَّلْتُ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُوْنَ ٦٧

waqāla
وَقَالَ
இன்னும் கூறினார்
yābaniyya
يَٰبَنِىَّ
என் பிள்ளைகளே
lā tadkhulū
لَا تَدْخُلُوا۟
நுழையாதீர்கள்
min bābin
مِنۢ بَابٍ
ஒரு வாசல் வழியாக
wāḥidin
وَٰحِدٍ
ஒரே
wa-ud'khulū
وَٱدْخُلُوا۟
இன்னும் நுழையுங்கள்
min abwābin
مِنْ أَبْوَٰبٍ
வாசல்கள் வழியாக
mutafarriqatin
مُّتَفَرِّقَةٍۖ
பல்வேறு
wamā ugh'nī
وَمَآ أُغْنِى
நான் தடுக்க முடியாது
ʿankum
عَنكُم
உங்களை விட்டும்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
min shayin
مِن شَىْءٍۖ
எதையும்
ini l-ḥuk'mu
إِنِ ٱلْحُكْمُ
இல்லை/அதிகாரம்
illā
إِلَّا
தவிர
lillahi
لِلَّهِۖ
அல்லாஹ்வுக்கே
ʿalayhi
عَلَيْهِ
அவன் மீதே
tawakkaltu
تَوَكَّلْتُۖ
நான் நம்பிக்கை வைத்து விட்டேன்
waʿalayhi
وَعَلَيْهِ
அவன் மீதே
falyatawakkali
فَلْيَتَوَكَّلِ
நம்பிக்கை வைக்கவும்
l-mutawakilūna
ٱلْمُتَوَكِّلُونَ
நம்பிக்கை வைப்பவர்கள்
பின்னும் (அவர்களை நோக்கி) "என் அருமை மக்களே! (எகிப்தில் நீங்கள் அனைவரும்) ஒரே வாசலில் நுழையாதீர்கள். வெவ்வேறு வாசல்கள் வழியாக (தனித் தனியாக) நுழையுங்கள். அல்லாஹ்வின் கட்டளையில் யாதொன்றையும் நான் உங்களுக்குத் தடுத்துவிட முடியாது. ஏனென்றால், எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறெவருக்கும்) இல்லை. நான் அவனிடமே பொறுப்பை ஒப்படைத்தேன். பொறுப்பை ஒப்படைக்க விரும்பு பவர்களும் அவனிடமே பொறுப்பை ஒப்படைக்கவும்" என்றார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௬௭)
Tafseer
௬௮

وَلَمَّا دَخَلُوْا مِنْ حَيْثُ اَمَرَهُمْ اَبُوْهُمْۗ مَا كَانَ يُغْنِيْ عَنْهُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَيْءٍ اِلَّا حَاجَةً فِيْ نَفْسِ يَعْقُوْبَ قَضٰىهَاۗ وَاِنَّهٗ لَذُوْ عِلْمٍ لِّمَا عَلَّمْنٰهُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ ࣖ ٦٨

walammā
وَلَمَّا
போது
dakhalū
دَخَلُوا۟
நுழைந்தனர்
min ḥaythu
مِنْ حَيْثُ
முறையில்
amarahum
أَمَرَهُمْ
கட்டளையிட்டார் அவர்களுக்கு
abūhum
أَبُوهُم
தந்தை/தங்கள்
mā kāna yugh'nī
مَّا كَانَ يُغْنِى
தடுப்பதாக இல்லை
ʿanhum
عَنْهُم
அவர்களைவிட்டு
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
min shayin
مِن شَىْءٍ
எதையும்
illā ḥājatan
إِلَّا حَاجَةً
ஒரு தேவை/தவிர
fī nafsi
فِى نَفْسِ
மனதில்
yaʿqūba
يَعْقُوبَ
யஃகூபுடைய
qaḍāhā
قَضَىٰهَاۚ
நிறைவேற்றினார்/அதை
wa-innahu
وَإِنَّهُۥ
நிச்சயமாக அவர்
ladhū ʿil'min
لَذُو عِلْمٍ
அறிவுடையவர்
limā ʿallamnāhu
لِّمَا عَلَّمْنَٰهُ
நாம் கற்பித்த காரணத்தால்/அவருக்கு
walākinna
وَلَٰكِنَّ
எனினும்
akthara
أَكْثَرَ
அதிகமானவர்(கள்)
l-nāsi
ٱلنَّاسِ
மக்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
(எகிப்துக்குச் சென்ற) அவர்கள் தங்கள் தந்தையின் கட்டளைப்படி (வெவ்வேறு பாதைகள் வழியாக) நுழைந்ததனால் யஃகூபினுடைய மனதிலிருந்த ஒரு எண்ணத்தை, அவர்கள் நிறைவேற்றியதைத் தவிர, அல்லாஹ்வுடைய யாதொரு விஷயத்தையும் அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்க வில்லை. (ஏனென்றால், புன்யாமீனை அவர்கள் விட்டுவிட்டு வரும்படியே நேர்ந்தது.) எனினும், நிச்சயமாக நாம் அவருக்கு (யூஸுஃபும் புன்யாமீனும் உயிருடன் இருக்கின்றனர் என்ற விஷயத்தை) அறிவித்திருந்ததால், அவர் (அதனை) அறிந்த வராகவே இருந்தார். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (அதனை) அறியாதவர்களாகவே இருந்தனர். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௬௮)
Tafseer
௬௯

وَلَمَّا دَخَلُوْا عَلٰى يُوْسُفَ اٰوٰٓى اِلَيْهِ اَخَاهُ قَالَ اِنِّيْٓ اَنَا۠ اَخُوْكَ فَلَا تَبْتَىِٕسْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ ٦٩

walammā
وَلَمَّا
போது
dakhalū
دَخَلُوا۟
நுழைந்தனர்
ʿalā yūsufa
عَلَىٰ يُوسُفَ
யூஸுஃபிடம்
āwā
ءَاوَىٰٓ
ஒதுக்கிக் கொண்டார்
ilayhi
إِلَيْهِ
தன் பக்கம்
akhāhu
أَخَاهُۖ
தன் சகோதரனை
qāla
قَالَ
கூறினார்
innī anā
إِنِّىٓ أَنَا۠
நிச்சயமாக நான்தான்
akhūka
أَخُوكَ
உம் சகோதரன்
falā tabta-is
فَلَا تَبْتَئِسْ
ஆகவே வேதனைப்படாதே
bimā
بِمَا
எதன் காரணமாக
kānū
كَانُوا۟
இருந்தனர்
yaʿmalūna
يَعْمَلُونَ
அவர்கள்செய்வார்கள்
அவர்கள் அனைவரும் யூஸுஃபிடம் சென்றபொழுது, அவர் தன் சகோதரன் புன்யாமீனை(த் தனியாக அழைத்து) அமர்த்திக்கொண்டு (அவரை நோக்கி) "நிச்சயமாக நான் உங்களுடைய சகோதரன் (யூஸுஃப்)தான். எனக்கு இவர்கள் செய்தவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்" என்று (இரகசியமாகக்) கூறினார். (அன்றி, உங்களை நிறுத்திக்கொள்ள நான் ஓர் உபாயம் செய்வேன் என்றார்.) ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௬௯)
Tafseer
௭௦

فَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ جَعَلَ السِّقَايَةَ فِيْ رَحْلِ اَخِيْهِ ثُمَّ اَذَّنَ مُؤَذِّنٌ اَيَّتُهَا الْعِيْرُ اِنَّكُمْ لَسَارِقُوْنَ ٧٠

falammā jahhazahum
فَلَمَّا جَهَّزَهُم
அவர் தயார்படுத்தியபோது/அவர்களுக்கு
bijahāzihim
بِجَهَازِهِمْ
பொருள்களை/அவர்களுடைய
jaʿala
جَعَلَ
வைத்தார்
l-siqāyata
ٱلسِّقَايَةَ
குவளையை
fī raḥli
فِى رَحْلِ
சுமையில்
akhīhi
أَخِيهِ
தன் சகோதரனின்
thumma
ثُمَّ
பிறகு
adhana
أَذَّنَ
அறிவித்தார்
mu-adhinun
مُؤَذِّنٌ
ஓர் அறிவிப்பாளர்
ayyatuhā l-ʿīru
أَيَّتُهَا ٱلْعِيرُ
ஓ! பயணக் கூட்டத்தார்களே!
innakum
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
lasāriqūna
لَسَٰرِقُونَ
திருடர்கள்தான்
பின்னர், அவர்களுக்கு வேண்டிய தானியங்களைத் தயார்படுத்தியபோது தன்னுடைய சகோதர(ன் புன்யாமீ)னுடைய சுமையில் (ஒரு பொற்)குவளையை வைத்துவிட்டார். பின்னர் (அவர்கள் விடை பெற்றுச் சிறிது தூரம் செல்லவே) ஒருவன் அவர்களை (நோக்கி) "ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்களாக இருக்கிறீர்கள்" என்று சப்தமிட்டான். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௭௦)
Tafseer