قَالَ مَا خَطْبُكُنَّ اِذْ رَاوَدْتُّنَّ يُوْسُفَ عَنْ نَّفْسِهٖۗ قُلْنَ حَاشَ لِلّٰهِ مَا عَلِمْنَا عَلَيْهِ مِنْ سُوْۤءٍ ۗقَالَتِ امْرَاَتُ الْعَزِيْزِ الْـٰٔنَ حَصْحَصَ الْحَقُّۖ اَنَا۠ رَاوَدْتُّهٗ عَنْ نَّفْسِهٖ وَاِنَّهٗ لَمِنَ الصّٰدِقِيْنَ ٥١
- qāla
- قَالَ
- கேட்டார்
- mā khaṭbukunna
- مَا خَطْبُكُنَّ
- உங்கள்நிலைஎன்ன?
- idh rāwadttunna
- إِذْ رَٰوَدتُّنَّ
- போது/ஆசைக்கு அழைத்தீர்கள்
- yūsufa
- يُوسُفَ
- யூஸுஃபை
- ʿan nafsihi
- عَن نَّفْسِهِۦۚ
- பலவந்தமாக
- qul'na
- قُلْنَ
- கூறினர்
- ḥāsha
- حَٰشَ
- பாதுகாப்பானாக
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்
- mā ʿalim'nā
- مَا عَلِمْنَا
- நாங்கள் அறியவில்லை
- ʿalayhi
- عَلَيْهِ
- அவரிடத்தில்
- min sūin
- مِن سُوٓءٍۚ
- ஒரு தீங்கை
- qālati
- قَالَتِ
- கூறினாள்
- im'ra-atu
- ٱمْرَأَتُ
- மனைவி
- l-ʿazīzi
- ٱلْعَزِيزِ
- அதிபரின்
- l-āna
- ٱلْـَٰٔنَ
- இப்போது
- ḥaṣḥaṣa
- حَصْحَصَ
- வெளிப்பட்டு விட்டது
- l-ḥaqu
- ٱلْحَقُّ
- உண்மை
- anā
- أَنَا۠
- நான்தான்
- rāwadttuhu
- رَٰوَدتُّهُۥ
- என் விருப்பத்திற்கு அழைத்தேன்/அவரை
- ʿan nafsihi
- عَن نَّفْسِهِۦ
- நிர்பந்தமாக
- wa-innahu
- وَإِنَّهُۥ
- நிச்சயமாக அவர்
- lamina l-ṣādiqīna
- لَمِنَ ٱلصَّٰدِقِينَ
- உண்மையாளர்களில்
(இதைக் கேள்வியுற்ற அரசர் அப்பெண்களை அழைத்து) "நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கிணங்குமாறு அழைத்த போது உங்களுக்கு ஏற்பட்டதென்ன?" என்று கேட்டார். அதற்கு அப்பெண்கள் "அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்; நாங்கள் அவரிடத்தில் யாதொரு தீங்கையும் அறியவில்லை" என்று கூறி விட்டார்கள். அதிபதியின் மனைவியோ இச்சமயம் உண்மை வெளிப்பட்டு விட்டது; நான்தான் அவரை விரும்பி அழைத்தேன். (இதனை மறுத்து அவர் கூறியதில்) நிச்சயமாக அவர் உண்மையே சொன்னார்" என்று கூறினாள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௫௧)Tafseer
ذٰلِكَ لِيَعْلَمَ اَنِّيْ لَمْ اَخُنْهُ بِالْغَيْبِ وَاَنَّ اللّٰهَ لَا يَهْدِيْ كَيْدَ الْخَاۤىِٕنِيْنَ ۔ ٥٢
- dhālika
- ذَٰلِكَ
- அது
- liyaʿlama
- لِيَعْلَمَ
- அவர் அறிவதற்காக
- annī lam akhun'hu
- أَنِّى لَمْ أَخُنْهُ
- நிச்சயமாகநான்/அவருக்கு துரோகம் செய்யவில்லை
- bil-ghaybi
- بِٱلْغَيْبِ
- மறைவில்
- wa-anna
- وَأَنَّ
- இன்னும் நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- lā yahdī
- لَا يَهْدِى
- நல்வழி படுத்த மாட்டான்
- kayda
- كَيْدَ
- சூழ்ச்சியை
- l-khāinīna
- ٱلْخَآئِنِينَ
- துரோகிகளின்
(இதனைக் கேள்வியுற்ற யூஸுஃப் "முன்னர் சென்றுபோன விஷயங்களை இவ்வாறு விசாரணைச் செய்யும்படி நான் கூறிய) இதன் காரணம்; நிச்சயமாக நான் (என் எஜமானாகிய) அவர் மறைவாயிருந்த சமயத்தில் அவருக்கு நான் துரோகம் செய்ய வில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சூழ்ச்சியை நடைபெற விடுவதில்லை என் (பதை அறிவிப்)பதற்காகவுமே" (என்று கூறினார்). ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௫௨)Tafseer
۞ وَمَآ اُبَرِّئُ نَفْسِيْۚ اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌ ۢ بِالسُّوْۤءِ اِلَّا مَا رَحِمَ رَبِّيْۗ اِنَّ رَبِّيْ غَفُوْرٌ رَّحِيْمٌ ٥٣
- wamā ubarri-u
- وَمَآ أُبَرِّئُ
- நான் தூய்மைப்படுத்த மாட்டேன்
- nafsī
- نَفْسِىٓۚ
- என் ஆன்மாவை
- inna l-nafsa
- إِنَّ ٱلنَّفْسَ
- நிச்சயமாக ஆன்மா
- la-ammāratun
- لَأَمَّارَةٌۢ
- அதிகம் தூண்டக்கூடியதே
- bil-sūi illā
- بِٱلسُّوٓءِ إِلَّا
- பாவத்திற்கு/தவிர
- mā raḥima
- مَا رَحِمَ
- எது/அருள்புரிந்தான்
- rabbī
- رَبِّىٓۚ
- என் இறைவன்
- inna rabbī
- إِنَّ رَبِّى
- நிச்சயமாக என் இறைவன்
- ghafūrun
- غَفُورٌ
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- பெரும் கருணையாளன்
அன்றி, "நான் (தவறுகளிலிருந்து) தூய்மையானவன்" என்று என்னை பரிசுத்தம் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால், என் இறைவன் அருள் புரிந்தாலன்றி மனிதனின் சரீர இச்சை, பாவம் செய்யும்படித் தூண்டக்கூடியதாகவே இருக்கின்றது. நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்" (என்றார்.) ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௫௩)Tafseer
وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِيْ بِهٖٓ اَسْتَخْلِصْهُ لِنَفْسِيْۚ فَلَمَّا كَلَّمَهٗ قَالَ اِنَّكَ الْيَوْمَ لَدَيْنَا مَكِيْنٌ اَمِيْنٌ ٥٤
- waqāla
- وَقَالَ
- கூறினார்
- l-maliku
- ٱلْمَلِكُ
- அரசர்
- i'tūnī
- ٱئْتُونِى
- வாருங்கள்/என்னிடம்
- bihi
- بِهِۦٓ
- அவரைக் கொண்டு
- astakhliṣ'hu
- أَسْتَخْلِصْهُ
- பிரத்தியேகமாக நான் ஆக்கிக்கொள்வேன்/அவரை
- linafsī
- لِنَفْسِىۖ
- எனக்கென மட்டும்
- falammā
- فَلَمَّا
- போது
- kallamahu
- كَلَّمَهُۥ
- பேசினார்/அவருடன்
- qāla
- قَالَ
- கூறினார்
- innaka
- إِنَّكَ
- நிச்சயமாக நீர்
- l-yawma
- ٱلْيَوْمَ
- இன்று
- ladaynā
- لَدَيْنَا
- நம்மிடம்
- makīnun
- مَكِينٌ
- தகுதியுடையவர்
- amīnun
- أَمِينٌ
- நம்பிக்கையாளர்
(யூஸுஃபின் ஞானத்தை அறிந்த அரசர்) "அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்! என் சொந்த வேலைக்கு அவரை அமர்த்திக் கொள்வேன்" என்று (அழைத்து வரச் செய்து) அவருடன் பேசவே (அவரது தொலைநோக்கு சிந்தனையைக் கண்டு) "நிச்சயமாக நீங்கள் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் பெற்று விட்டீர்கள்" என்றார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௫௪)Tafseer
قَالَ اجْعَلْنِيْ عَلٰى خَزَاۤىِٕنِ الْاَرْضِۚ اِنِّيْ حَفِيْظٌ عَلِيْمٌ ٥٥
- qāla
- قَالَ
- கூறினார்
- ij'ʿalnī
- ٱجْعَلْنِى
- ஆக்குவீராக/என்னை
- ʿalā
- عَلَىٰ
- மீது
- khazāini
- خَزَآئِنِ
- கஜானாக்கள்
- l-arḍi
- ٱلْأَرْضِۖ
- நாட்டின்
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- ḥafīẓun
- حَفِيظٌ
- பாதுகாப்பவன்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
(அதற்கவர்) "தேசியக் களஞ்சியங்களின் நிர்வாகியாக என்னை ஆக்கி விடுங்கள். நிச்சயமாக நான் அவற்றைப் பாதுகாக்க நன்கறிந்தவன்" என்று சொன்னார். (அவ்வாறே அரசர் ஆக்கினார்.) ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௫௫)Tafseer
وَكَذٰلِكَ مَكَّنَّا لِيُوْسُفَ فِى الْاَرْضِ يَتَبَوَّاُ مِنْهَا حَيْثُ يَشَاۤءُۗ نُصِيْبُ بِرَحْمَتِنَا مَنْ نَّشَاۤءُ وَلَا نُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ ٥٦
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- இவ்வாறே
- makkannā
- مَكَّنَّا
- வசதியளித்தோம்
- liyūsufa
- لِيُوسُفَ
- யூஸுஃபுக்கு
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- அந்நாட்டில்
- yatabawwa-u
- يَتَبَوَّأُ
- தங்கிக்கொள்வார்
- min'hā
- مِنْهَا
- அதில்
- ḥaythu
- حَيْثُ
- இடம்
- yashāu
- يَشَآءُۚ
- நாடுகின்றார்
- nuṣību
- نُصِيبُ
- நாம் தருகிறோம்
- biraḥmatinā man
- بِرَحْمَتِنَا مَن
- நம் அருளை/எவர்
- nashāu
- نَّشَآءُۖ
- நாடுகின்றோம்
- walā nuḍīʿu
- وَلَا نُضِيعُ
- வீணாக்க மாட்டோம்
- ajra
- أَجْرَ
- கூலியை
- l-muḥ'sinīna
- ٱلْمُحْسِنِينَ
- நல்லறம் புரிபவர்களின்
யூஸுஃப், அந்நாட்டில் தான் விரும்பிய இடமெல்லாம் சென்று, விரும்பும் காரியங்களை செய்துவர இவ்வாறு நாம் அவருக்கு வசதியளித்தோம். நாம் விரும்பியவர்களுக்கு (இவ்வாறே) அருள்புரிகிறோம். நன்மை செய்தவர்களின் கூலியை நாம் வீணாக்குவதில்லை. ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௫௬)Tafseer
وَلَاَجْرُ الْاٰخِرَةِ خَيْرٌ لِّلَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ ࣖ ٥٧
- wala-ajru
- وَلَأَجْرُ
- திட்டமாக கூலி
- l-ākhirati
- ٱلْءَاخِرَةِ
- மறுமையின்
- khayrun
- خَيْرٌ
- மேலானது
- lilladhīna
- لِّلَّذِينَ
- எவர்களுக்கு
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- wakānū
- وَكَانُوا۟
- இன்னும் இருந்தனர்
- yattaqūna
- يَتَّقُونَ
- அஞ்சுகின்றவர்களாக
எனினும், (நமக்குப்) பயந்து நடக்கும் நம்பிக்கை யாளர்களுக்கு மறுமை(யில் நாம் கொடுக்கும்) கூலியோ (இதைவிட) மிக மேலானதாகும். (யூஸுஃப் கூறியவாறு தானியங்கள் பத்திரப் படுத்தப்பட்டு வந்தன. பஞ்சமும் ஏற்பட்டு, கன்ஆனிலிருந்த இவருடைய சகோதரர்கள் தானியத்திற்காக யூஸுஃபிடம் வந்தனர்.) ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௫௭)Tafseer
وَجَاۤءَ اِخْوَةُ يُوْسُفَ فَدَخَلُوْا عَلَيْهِ فَعَرَفَهُمْ وَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ ٥٨
- wajāa
- وَجَآءَ
- வந்தார்(கள்)
- ikh'watu
- إِخْوَةُ
- சகோதரர்கள்
- yūsufa
- يُوسُفَ
- யூஸுஃபுடைய
- fadakhalū
- فَدَخَلُوا۟
- இன்னும் நுழைந்தார்கள்
- ʿalayhi
- عَلَيْهِ
- அவரிடம்
- faʿarafahum
- فَعَرَفَهُمْ
- அறிந்தார்/அவர்களை
- wahum lahu
- وَهُمْ لَهُۥ
- அவர்கள்/அவரை
- munkirūna
- مُنكِرُونَ
- அறியாதவர்களாக
ஆகவே, யூஸுஃபினுடைய சகோதரர்கள் அவரிடம் வந்தபொழுது, அவர்களை அவர் (தன் சகோதரர்கள்தாம் என) அறிந்துகொண்டார். ஆனால், அவர்களோ அவரை அறிந்து கொள்ளவில்லை. ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௫௮)Tafseer
وَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ قَالَ ائْتُوْنِيْ بِاَخٍ لَّكُمْ مِّنْ اَبِيْكُمْ ۚ اَلَا تَرَوْنَ اَنِّيْٓ اُوْفِى الْكَيْلَ وَاَنَا۠ خَيْرُ الْمُنْزِلِيْنَ ٥٩
- walammā
- وَلَمَّا
- போது
- jahhazahum
- جَهَّزَهُم
- தயார்படுத்தினார் அவர்களுக்கு
- bijahāzihim
- بِجَهَازِهِمْ
- சாமான்களை அவர்களுடைய
- qāla
- قَالَ
- கூறினார்
- i'tūnī
- ٱئْتُونِى
- வாருங்கள் என்னிடம்
- bi-akhin
- بِأَخٍ
- ஒரு சகோதரனைக் கொண்டு
- lakum
- لَّكُم
- உங்களுக்குள்ள
- min
- مِّنْ
- மூலமாக
- abīkum
- أَبِيكُمْۚ
- உங்கள் தந்தை
- alā tarawna
- أَلَا تَرَوْنَ
- நீங்கள் கவனிக்கவில்லையா?
- annī
- أَنِّىٓ
- நிச்சயமாக நான்
- ūfī
- أُوفِى
- முழுமையாக்குவேன்
- l-kayla
- ٱلْكَيْلَ
- அளவையை
- wa-anā khayru
- وَأَنَا۠ خَيْرُ
- நான் சிறந்தவன்
- l-munzilīna
- ٱلْمُنزِلِينَ
- விருந்தளிப்பவர்களில்
(யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய தானியங்களை தயார்படுத்திக் கொடுத்து, (தம் சொந்த சகோதரர் புன்யாமீனின் சுகத்தை அவர்களிடம் தந்திரமாகப் பேசித் தெரிந்துகொண்டு "மறுமுறை நீங்கள் வந்தால்) தந்தை ஒன்றான உங்கள் சகோதர(ன் புன்யாமீ)னையும் அழைத்து வாருங்கள். (நீங்கள் குறைந்த கிரயம் கொடுத்தபோதிலும்) நிச்சயமாக நான் உங்களுக்கு(த் தானியங்களை) முழுமையாக அளந்து கொடுத்ததுடன், மிக்க மேலான விதத்தில் (உங்களுக்கு) விருந்து அளித்ததையும் நீங்கள் கவனிக்கவில்லையா? ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௫௯)Tafseer
فَاِنْ لَّمْ تَأْتُوْنِيْ بِهٖ فَلَا كَيْلَ لَكُمْ عِنْدِيْ وَلَا تَقْرَبُوْنِ ٦٠
- fa-in lam tatūnī
- فَإِن لَّمْ تَأْتُونِى
- நீங்கள் வரவில்லையெனில்/என்னிடம்
- bihi
- بِهِۦ
- அவரைக் கொண்டு
- falā kayla
- فَلَا كَيْلَ
- அறவேஇல்லை/ அளவை
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- ʿindī
- عِندِى
- என்னிடம்
- walā taqrabūni
- وَلَا تَقْرَبُونِ
- இன்னும் நெருங்காதீர்கள்/என்னை
நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வராவிடில் (என்னிடமுள்ள தானியத்தை) உங்களுக்கு அளந்து கொடுக்க முடியாது. நீங்கள் என்னை நெருங்கவும் முடியாது" என்று கூறினார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௬௦)Tafseer