يٰصَاحِبَيِ السِّجْنِ اَمَّآ اَحَدُكُمَا فَيَسْقِيْ رَبَّهٗ خَمْرًا ۗوَاَمَّا الْاٰخَرُ فَيُصْلَبُ فَتَأْكُلُ الطَّيْرُ مِنْ رَّأْسِهٖ ۗ قُضِيَ الْاَمْرُ الَّذِيْ فِيْهِ تَسْتَفْتِيٰنِۗ ٤١
- yāṣāḥibayi
- يَٰصَىٰحِبَىِ
- என் இரு தோழர்களே
- l-sij'ni
- ٱلسِّجْنِ
- சிறை
- ammā
- أَمَّآ
- ஆக
- aḥadukumā
- أَحَدُكُمَا
- உங்களிருவரில் ஒருவன்
- fayasqī
- فَيَسْقِى
- புகட்டுவான்
- rabbahu
- رَبَّهُۥ
- தன் எஜமானனுக்கு
- khamran
- خَمْرًاۖ
- மது
- wa-ammā
- وَأَمَّا
- ஆக
- l-ākharu
- ٱلْءَاخَرُ
- மற்றவன்
- fayuṣ'labu
- فَيُصْلَبُ
- கழுமரத்தில் அறையப்படுவான்
- fatakulu
- فَتَأْكُلُ
- தின்னும்
- l-ṭayru
- ٱلطَّيْرُ
- பறவைகள்
- min rasihi
- مِن رَّأْسِهِۦۚ
- அவனுடையதலையில்
- quḍiya
- قُضِىَ
- விதிக்கப்பட்டது
- l-amru
- ٱلْأَمْرُ
- காரியம்
- alladhī
- ٱلَّذِى
- எது
- fīhi
- فِيهِ
- அதில்
- tastaftiyāni
- تَسْتَفْتِيَانِ
- விளக்கம் கேட்கிறீர்கள்
(பின்னும் அவர்களை நோக்கி) "சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) "உங்களில் ஒருவன் (விடுதலையடைந்து அவன் முன் செய்து கொண்டிருந்த வேலையையும் ஒப்புக்கொண்டு, முன் போலவே) தன் எஜமானனுக்குத் திராட்சை ரஸம் புகட்டிக் கொண்டிருப்பான். மற்றவனோ தூக்கிலிடப்பட்டு அவன் தலையை (காகம், கழுகு போன்ற) பறவைகள் (கொத்திக் கொத்தித்) தின்னும். நீங்கள் வியாக்கியானங்கோரிய (கனவுகளின்) பலன் விதிக்கப்பட்டு விட்டது. (அவ்வாறு நடந்தே தீரும்" என்று கூறினார்.) ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௪௧)Tafseer
وَقَالَ لِلَّذِيْ ظَنَّ اَنَّهٗ نَاجٍ مِّنْهُمَا اذْكُرْنِيْ عِنْدَ رَبِّكَۖ فَاَنْسٰىهُ الشَّيْطٰنُ ذِكْرَ رَبِّهٖ فَلَبِثَ فِى السِّجْنِ بِضْعَ سِنِيْنَ ࣖ ٤٢
- waqāla
- وَقَالَ
- இன்னும் கூறினார்
- lilladhī
- لِلَّذِى
- எவருக்கு
- ẓanna
- ظَنَّ
- எண்ணினார்
- annahu
- أَنَّهُۥ
- நிச்சயமாக எவர்
- nājin
- نَاجٍ
- தப்பிப்பவர்
- min'humā
- مِّنْهُمَا
- அவ்விருவரில்
- udh'kur'nī
- ٱذْكُرْنِى
- நினைவுகூரு/என்னை
- ʿinda
- عِندَ
- இடம்
- rabbika
- رَبِّكَ
- உன் எஜமான்
- fa-ansāhu
- فَأَنسَىٰهُ
- அவருக்கு மறக்கடித்தான்
- l-shayṭānu
- ٱلشَّيْطَٰنُ
- ஷைத்தான்
- dhik'ra
- ذِكْرَ
- நினைவு கூருவதை
- rabbihi
- رَبِّهِۦ
- தன் இறைவனை
- falabitha
- فَلَبِثَ
- ஆகவே தங்கினார்
- fī l-sij'ni
- فِى ٱلسِّجْنِ
- சிறையில்
- biḍ'ʿa sinīna
- بِضْعَ سِنِينَ
- சில ஆண்டுகள்
அன்றி, அவ்விருவரில் எவன் விடுதலை அடைவானென அவர் எண்ணினாரோ (அவனை நோக்கி) நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றி (அநியாயமாக சிறையிடப்பட்டிருக்கிறேன் என்று) கூறுவாயாக! என்றும் சொன்னார். எனினும் (சிறைக்கூடத்திலிருந்து விடுதலையாகி வெளியேறிய) அவன் தன் எஜமானனிடம் கூற இருந்த (எண்ணத்)தை ஷைத்தான் மறக்கடித்து விட்டான். ஆதலால், அவர் சிறைக்கூடத்தில் (பின்னும்) பல ஆண்டுகள் தங்கிவிட்டார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௪௨)Tafseer
وَقَالَ الْمَلِكُ اِنِّيْٓ اَرٰى سَبْعَ بَقَرٰتٍ سِمَانٍ يَّأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعَ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ يٰبِسٰتٍۗ يٰٓاَيُّهَا الْمَلَاُ اَفْتُوْنِيْ فِيْ رُؤْيَايَ اِنْ كُنْتُمْ لِلرُّءْيَا تَعْبُرُوْنَ ٤٣
- waqāla
- وَقَالَ
- கூறினார்
- l-maliku
- ٱلْمَلِكُ
- அரசர்
- innī
- إِنِّىٓ
- நிச்சயமாக நான்
- arā
- أَرَىٰ
- கனவில் கண்டேன்
- sabʿa
- سَبْعَ
- ஏழு
- baqarātin
- بَقَرَٰتٍ
- பசுக்கள்
- simānin
- سِمَانٍ
- கொழுத்தவை
- yakuluhunna
- يَأْكُلُهُنَّ
- புசிக்கின்றன/அவற்றை
- sabʿun
- سَبْعٌ
- ஏழு
- ʿijāfun
- عِجَافٌ
- இளைத்தவை
- wasabʿa
- وَسَبْعَ
- இன்னும் ஏழு
- sunbulātin
- سُنۢبُلَٰتٍ
- கதிர்களை
- khuḍ'rin
- خُضْرٍ
- பசுமையானவை
- wa-ukhara
- وَأُخَرَ
- இன்னும் வேறு
- yābisātin
- يَابِسَٰتٍۖ
- காய்ந்தவை
- yāayyuhā l-mala-u
- يَٰٓأَيُّهَا ٱلْمَلَأُ
- பிரமுகர்களே
- aftūnī
- أَفْتُونِى
- விளக்கம் தாருங்கள்/எனக்கு
- fī ru'yāya
- فِى رُءْيَٰىَ
- என் கனவில்
- in kuntum
- إِن كُنتُمْ
- இருந்தீர்களானால்
- lilrru'yā
- لِلرُّءْيَا
- கனவிற்கு
- taʿburūna
- تَعْبُرُونَ
- வியாக்கியானம் கூறுகிறீர்கள்
(ஒரு நாளன்று) எகிப்தின் அரசர் (தன் பிரதானிகளை நோக்கி) "என் பிரதானிகளே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், நன்கு விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்து உலர்ந்த (சாவியான ஏழு) வேறு கதிர்களையும் என் கனவில் கண்டேன். என் பிரதானிகளே! நீங்கள் கனவுகளுக்கு வியாக்கியானம் கூறக் கூடியவர்களாக இருந்தால் என்னுடைய இக்கனவின் பலனை அறிவியுங்கள்" என்று கூறினார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௪௩)Tafseer
قَالُوْٓا اَضْغَاثُ اَحْلَامٍ ۚوَمَا نَحْنُ بِتَأْوِيْلِ الْاَحْلَامِ بِعٰلِمِيْنَ ٤٤
- qālū
- قَالُوٓا۟
- கூறினார்கள்
- aḍghāthu
- أَضْغَٰثُ
- பொய்யானவை
- aḥlāmin
- أَحْلَٰمٍۖ
- கனவுகள்
- wamā
- وَمَا
- இல்லை
- naḥnu
- نَحْنُ
- நாங்கள்
- bitawīli
- بِتَأْوِيلِ
- விளக்கத்தை
- l-aḥlāmi
- ٱلْأَحْلَٰمِ
- கனவுகளுக்குரிய
- biʿālimīna
- بِعَٰلِمِينَ
- அறிந்தவர்களாக
அதற்கவர்கள், "இது (அஜீரணத்தாலும்) சிதறிய சிந்தனையாலும் ஏற்பட்ட (வீணான) கனவுதான். (இத்தகைய வீண்) கனவுகளுக்குரிய விளக்கங்களை நாங்கள் அறிந்தவர்களல்ல" என்று கூறினார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௪௪)Tafseer
وَقَالَ الَّذِيْ نَجَا مِنْهُمَا وَادَّكَرَ بَعْدَ اُمَّةٍ اَنَا۠ اُنَبِّئُكُمْ بِتَأْوِيْلِهٖ فَاَرْسِلُوْنِ ٤٥
- waqāla
- وَقَالَ
- கூறினான்
- alladhī
- ٱلَّذِى
- எவன்
- najā
- نَجَا
- தப்பித்தான்
- min'humā
- مِنْهُمَا
- அவ்விருவரில்
- wa-iddakara
- وَٱدَّكَرَ
- இன்னும் நினைவு கூர்ந்தான்
- baʿda ummatin
- بَعْدَ أُمَّةٍ
- பின்னர்/சில ஆண்டு
- anā
- أَنَا۠
- நான்
- unabbi-ukum
- أُنَبِّئُكُم
- அறிவிப்பேன்/ உங்களுக்கு
- bitawīlihi
- بِتَأْوِيلِهِۦ
- அவருடைய விளக்கத்தை
- fa-arsilūni
- فَأَرْسِلُونِ
- ஆகவே அனுப்புங்கள்/என்னை
(யூஸுஃபின் சிறைத்) தோழர்கள் இருவரில் விடுதலை அடைந்தவன் பல ஆண்டுகளுக்குப் பின்னர் (அச்சமயம் அவரை) நினைத்து (அவர் தன் கனவுக்குக்கூறிய வியாக்கியானம் முற்றிலும் சரிவர நடைபெற்றதையும் எண்ணி, அரசரை நோக்கி) "அரசரது கனவின் வியாக்கியானத்தை நான் உங்களுக்கு அறிவிக்க முடியும். என்னை (சிறைக் கூடத்திலுள்ள யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்" என்று கூறினான். (அவ்வாறே அரசரும் யூஸுஃபிடம் அவனை அனுப்பி வைத்தார்.) ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௪௫)Tafseer
يُوْسُفُ اَيُّهَا الصِّدِّيْقُ اَفْتِنَا فِيْ سَبْعِ بَقَرٰتٍ سِمَانٍ يَّأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعِ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ يٰبِسٰتٍۙ لَّعَلِّيْٓ اَرْجِعُ اِلَى النَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُوْنَ ٤٦
- yūsufu
- يُوسُفُ
- யூஸுஃபே!
- ayyuhā l-ṣidīqu
- أَيُّهَا ٱلصِّدِّيقُ
- உண்மையாளரே!
- aftinā
- أَفْتِنَا
- விளக்கம் தருவீராக/எங்களுக்கு
- fī sabʿi baqarātin
- فِى سَبْعِ بَقَرَٰتٍ
- ஏழுபசுக்கள்பற்றியும்
- simānin
- سِمَانٍ
- கொழுத்தவை
- yakuluhunna
- يَأْكُلُهُنَّ
- புசிக்கின்றன/அவற்றை
- sabʿun
- سَبْعٌ
- ஏழு
- ʿijāfun
- عِجَافٌ
- இளைத்தவை
- wasabʿi
- وَسَبْعِ
- இன்னும் ஏழு
- sunbulātin
- سُنۢبُلَٰتٍ
- கதிர்கள்
- khuḍ'rin
- خُضْرٍ
- பசுமையானவை
- wa-ukhara
- وَأُخَرَ
- இன்னும் மற்றவை
- yābisātin
- يَابِسَٰتٍ
- காய்ந்தவை
- laʿallī arjiʿu
- لَّعَلِّىٓ أَرْجِعُ
- நான் திரும்பி செல்லவேண்டும்
- ilā l-nāsi
- إِلَى ٱلنَّاسِ
- மக்களிடம்
- laʿallahum yaʿlamūna
- لَعَلَّهُمْ يَعْلَمُونَ
- அவர்கள் அறியவேண்டும்
(அவன் சிறைக்கூடம் சென்று யூஸுஃபை நோக்கி "கனவுகளுக்கு) உண்மை (யான வியாக்கியானம்) கூறுங்கள். யூஸுஃபே! கொழுத்துப் பருத்த ஏழு பசுக்களை, இளைத்து வற்றிய ஏழு பசுக்கள் புசிப்பதைப் போலும், முதிர்ந்து விளைந்த பசுமையான ஏழு கதிர்களையும் (சாவியாகிய) காய்ந்த மற்ற ஏழு கதிர்களையும் (கனவில் கண்டால் அதன் பலன் என்ன? அதனை) நீங்கள் எமக்கு அறிவியுங்கள் (என்னை அனுப்பிய) மக்கள் (இதனைத்) தெரிந்து கொள்வதற்காக அவர்களிடம் நான் செல்ல வேண்டியது இருக்கின்றது" என்று கூறினான். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௪௬)Tafseer
قَالَ تَزْرَعُوْنَ سَبْعَ سِنِيْنَ دَاَبًاۚ فَمَا حَصَدْتُّمْ فَذَرُوْهُ فِيْ سُنْۢبُلِهٖٓ اِلَّا قَلِيْلًا مِّمَّا تَأْكُلُوْنَ ٤٧
- qāla
- قَالَ
- கூறினார்
- tazraʿūna
- تَزْرَعُونَ
- விவசாயம்செய்வீர்கள்
- sabʿa sinīna
- سَبْعَ سِنِينَ
- ஏழு ஆண்டுகள்
- da-aban
- دَأَبًا
- வழக்கமாக
- famā ḥaṣadttum
- فَمَا حَصَدتُّمْ
- எதை/அறுவடை செய்தீர்
- fadharūhu
- فَذَرُوهُ
- விட்டு விடுங்கள்/அதை
- fī sunbulihi
- فِى سُنۢبُلِهِۦٓ
- அதன் கதிரிலேயே
- illā qalīlan
- إِلَّا قَلِيلًا
- கொஞ்சத்தை தவிர
- mimmā takulūna
- مِّمَّا تَأْكُلُونَ
- நீங்கள் புசிப்பதற்குத் தேவையான
அதற்கவர் கூறியதாவது: "தொடர்ந்து (வழக்கம் போல் நல்லவிதமாக) ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள். அதில் நீங்கள் அறுவடை செய்யும் விளைச்சல்களில் நீங்கள் புசிப்பதற்கு வேண்டிய ஒரு சொற்ப அளவைத்தவிர மற்ற அனைத்தையும் அதன் கதிர்களிலேயே விட்டு வையுங்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௪௭)Tafseer
ثُمَّ يَأْتِيْ مِنْۢ بَعْدِ ذٰلِكَ سَبْعٌ شِدَادٌ يَّأْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ اِلَّا قَلِيْلًا مِّمَّا تُحْصِنُوْنَ ٤٨
- thumma
- ثُمَّ
- பிறகு
- yatī
- يَأْتِى
- வரும்
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- dhālika sabʿun
- ذَٰلِكَ سَبْعٌ
- அதற்கு/ஏழு
- shidādun
- شِدَادٌ
- கடினமானவை
- yakul'na
- يَأْكُلْنَ
- அவை தின்னும்
- mā
- مَا
- எவற்றை
- qaddamtum
- قَدَّمْتُمْ
- முற்படுத்தினீர்கள்
- lahunna
- لَهُنَّ
- அவற்றுக்காக
- illā qalīlan
- إِلَّا قَلِيلًا
- கொஞ்சத்தை தவிர
- mimmā tuḥ'ṣinūna
- مِّمَّا تُحْصِنُونَ
- நீங்கள் பத்திரப்படுத்தியதிலிருந்து
அதற்குப் பின்னர், கடினமான (பஞ்சத்தையுடைய) ஏழு ஆண்டுகள் வரும். நீங்கள் கதிர்களில் பத்திரப்படுத்தி வைத்திருந்த வைகளில் (விதைப்புக்கு வேண்டிய) சொற்ப அளவைத் தவிர, (நீங்கள் சேகரித்திருந்த) அனைத்தையும் (அப்பஞ்சம்) தின்றுவிடும். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௪௮)Tafseer
ثُمَّ يَأْتِيْ مِنْۢ بَعْدِ ذٰلِكَ عَامٌ فِيْهِ يُغَاثُ النَّاسُ وَفِيْهِ يَعْصِرُوْنَ ࣖ ٤٩
- thumma
- ثُمَّ
- பிறகு
- yatī
- يَأْتِى
- வரும்
- min baʿdi
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- dhālika
- ذَٰلِكَ
- அதற்கு
- ʿāmun
- عَامٌ
- ஓர் ஆண்டு
- fīhi
- فِيهِ
- அதில்
- yughāthu
- يُغَاثُ
- மழை பொழியப்படுவார்(கள்)
- l-nāsu
- ٱلنَّاسُ
- மக்கள்
- wafīhi
- وَفِيهِ
- இன்னும் அதில்
- yaʿṣirūna
- يَعْصِرُونَ
- பிழிவார்கள்
அதற்குப் பின்னர் ஒரு ஆண்டு வரும்; அதில் ஏராளமாக மழை பெய்து (ஒலிவம், திராட்சை ஆகியவை நன்கு வளர்ந்து, திராட்சை ஆகியவற்றின்) ரஸத்தை மனிதர்கள் பிழிந்துகொண்டு (சுகமாக) இருப்பார்கள்" (என்றும் கூறினார்). ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௪௯)Tafseer
وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِيْ بِهٖ ۚفَلَمَّا جَاۤءَهُ الرَّسُوْلُ قَالَ ارْجِعْ اِلٰى رَبِّكَ فَسْـَٔلْهُ مَا بَالُ النِّسْوَةِ الّٰتِيْ قَطَّعْنَ اَيْدِيَهُنَّ ۗاِنَّ رَبِّيْ بِكَيْدِهِنَّ عَلِيْمٌ ٥٠
- waqāla
- وَقَالَ
- கூறினார்
- l-maliku
- ٱلْمَلِكُ
- அரசர்
- i'tūnī
- ٱئْتُونِى
- வாருங்கள்/என்னிடம்
- bihi
- بِهِۦۖ
- அவரைக் கொண்டு
- falammā
- فَلَمَّا
- வந்த போது
- jāahu
- جَآءَهُ
- வந்த போது அவரிடம்
- l-rasūlu
- ٱلرَّسُولُ
- தூதர்
- qāla
- قَالَ
- கூறினார்
- ir'jiʿ
- ٱرْجِعْ
- நீ திரும்பிச் செல்
- ilā rabbika
- إِلَىٰ رَبِّكَ
- உன் எஜமானனிடம்
- fasalhu
- فَسْـَٔلْهُ
- கேள்/அவரை
- mā bālu
- مَا بَالُ
- விஷயமென்ன?
- l-nis'wati
- ٱلنِّسْوَةِ
- பெண்களின்
- allātī qaṭṭaʿna
- ٱلَّٰتِى قَطَّعْنَ
- எவர்கள்/வெட்டினர்
- aydiyahunna
- أَيْدِيَهُنَّۚ
- தங்கள் கைகளை
- inna rabbī
- إِنَّ رَبِّى
- நிச்சயமாக என் இறைவன்
- bikaydihinna
- بِكَيْدِهِنَّ
- சூழ்ச்சியை அவர்களின்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
(யூஸுஃப் நபி கூறியவற்றை அரசரிடம் வந்து அவன் விபரமாக அறிவித்தான்.) அதற்கு அரசர் "(இவ்வியாக்கியானம் கூறிய) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்" எனக் கட்டளையிட்டார். அவருடைய தூதர் யூஸுஃபிடம் (அவரை அழைத்துச்) செல்ல (வர)வே (அவர் தூதருடன் செல்ல மறுத்து அவரை நோக்கி) "நீங்கள் உங்கள் எஜமானனிடம் திரும்பி சென்று, தங்களுடைய கை (விரல்)களை வெட்டிக்கொண்ட பெண்களின் (உண்மை) விஷயமென்ன? (எதற்காக அப்பெண்கள் தங்கள் கைகளை வெட்டிக் கொண்டனர்?) என்று அவரைக் கேளுங்கள். நிச்சயமாக அந்தப் பெண்களின் சூழ்ச்சியை என் இறைவன் நன்கறிந்தவன்" என்று கூறினார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௫௦)Tafseer