Skip to content

ஸூரா ஸூரத்து யூஸுஃப் - Page: 4

Yusuf

(Yūsuf)

௩௧

فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ اَرْسَلَتْ اِلَيْهِنَّ وَاَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَاً وَّاٰتَتْ كُلَّ وَاحِدَةٍ مِّنْهُنَّ سِكِّيْنًا وَّقَالَتِ اخْرُجْ عَلَيْهِنَّ ۚ فَلَمَّا رَاَيْنَهٗٓ اَكْبَرْنَهٗ وَقَطَّعْنَ اَيْدِيَهُنَّۖ وَقُلْنَ حَاشَ لِلّٰهِ مَا هٰذَا بَشَرًاۗ اِنْ هٰذَآ اِلَّا مَلَكٌ كَرِيْمٌ ٣١

falammā samiʿat
فَلَمَّا سَمِعَتْ
அவள் செவியுற்றபோது
bimakrihinna
بِمَكْرِهِنَّ
அவர்களின் சூழ்ச்சியை
arsalat
أَرْسَلَتْ
அனுப்பினாள்
ilayhinna
إِلَيْهِنَّ
அவர்களிடம்
wa-aʿtadat
وَأَعْتَدَتْ
இன்னும் ஏற்பாடுசெய்தாள்
lahunna
لَهُنَّ
அவர்களுக்கு
muttaka-an
مُتَّكَـًٔا
ஒரு விருந்தை
waātat
وَءَاتَتْ
இன்னும் கொடுத்தாள்
kulla wāḥidatin
كُلَّ وَٰحِدَةٍ
ஒவ்வொருவருக்கும்
min'hunna
مِّنْهُنَّ
அவர்களில்
sikkīnan
سِكِّينًا
ஒரு கத்தியை
waqālati
وَقَالَتِ
இன்னும் கூறினாள்
ukh'ruj
ٱخْرُجْ
வெளியேறுவீராக
ʿalayhinna
عَلَيْهِنَّۖ
அவர்கள் முன்
falammā
فَلَمَّا
போது
ra-aynahu
رَأَيْنَهُۥٓ
பார்த்தனர்/அவரை
akbarnahu
أَكْبَرْنَهُۥ
மிக உயர்வாக எண்ணினர்/அவரை
waqaṭṭaʿna
وَقَطَّعْنَ
இன்னும் அறுத்தனர்
aydiyahunna
أَيْدِيَهُنَّ
தங்கள் கைகளை
waqul'na
وَقُلْنَ
இன்னும் கூறினர்
ḥāsha
حَٰشَ
பாதுகாப்பானாக
lillahi
لِلَّهِ
அல்லாஹ்
mā hādhā basharan
مَا هَٰذَا بَشَرًا
இல்லை /இவர்/மனிதராக
in hādhā
إِنْ هَٰذَآ
இல்லை/இவர்
illā
إِلَّا
தவிர
malakun
مَلَكٌ
ஒரு வானவரே
karīmun
كَرِيمٌ
கண்ணியமான
(அந்தப்) பெண்களின் (இந்த) இழிமொழிகளை அவள் செவியுறவே, அப்பெண்களுக்காக ஒரு விருந்து சபையைக் கூட்டி, அதற்கு அவர்களை அழைத்து அங்கு வந்த ஒவ்வொருத்திக்கும் ஒரு கனியும் (அதை அறுத்துப் புசிக்க) ஒரு கத்தி(யும்) கொடுத்து அவரை (அலங்கரித்து) அவர்கள் முன் வரும்படிக் கூறினாள். அவரை அப்பெண்கள் காணவே (அவருடைய அழகைக் கண்டு) அவரை மிக்க உயர்வானவராக எண்ணி (மெய்மறந்து, கனியை அறுப்பதற்குப் பதிலாக) தங்கள் கை (விரல்)களையே அறுத்துக் கொண்டு "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் மனிதரல்ல! இவர் (அனைவரின் மனதையும் கவரக்கூடிய) அழகு வாய்ந்த ஒரு வானவரே அன்றி வேறில்லை" என்று கூறினார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௩௧)
Tafseer
௩௨

قَالَتْ فَذٰلِكُنَّ الَّذِيْ لُمْتُنَّنِيْ فِيْهِ ۗوَلَقَدْ رَاوَدْتُّهٗ عَنْ نَّفْسِهٖ فَاسْتَعْصَمَ ۗوَلَىِٕنْ لَّمْ يَفْعَلْ مَآ اٰمُرُهٗ لَيُسْجَنَنَّ وَلَيَكُوْنًا مِّنَ الصّٰغِرِيْنَ ٣٢

qālat
قَالَتْ
கூறினாள்
fadhālikunna
فَذَٰلِكُنَّ
இவர்தான்
alladhī
ٱلَّذِى
எவர்
lum'tunnanī
لُمْتُنَّنِى
பழித்தீர்கள்/என்னை
fīhi
فِيهِۖ
அவர் விஷயத்தில்
walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
rāwadttuhu
رَٰوَدتُّهُۥ
என் விருப்பத்திற்கு அழைத்தேன்/அவரை
ʿan nafsihi
عَن نَّفْسِهِۦ
பலவந்தமாக
fa-is'taʿṣama
فَٱسْتَعْصَمَۖ
காத்துக்கொண்டார்
wala-in lam yafʿal
وَلَئِن لَّمْ يَفْعَلْ
அவர் செய்யவில்லையெனில்
mā āmuruhu
مَآ ءَامُرُهُۥ
எதை/ஏவுகிறேன்/அவருக்கு
layus'jananna
لَيُسْجَنَنَّ
நிச்சயமாக சிறையிலிடப்படுவார்
walayakūnan
وَلَيَكُونًا
இன்னும் நிச்சயமாக ஆகுவார்
mina l-ṣāghirīna
مِّنَ ٱلصَّٰغِرِينَ
இழிவானவர்களில்
அதற்கவள் "நீங்கள் எவரைப் பற்றி என்னை நிந்தித்தீர்களோ அவர் இவர்தான். நிச்சயமாக நான் அவரை எனக்கு இசையும்படி வற்புறுத்தினேன்; எனினும், அவர் தப்பித்துக் கொண்டார். இனியும் அவர் நான் கூறுவதைச் செய்யாவிடில் நிச்சயமாக அவர் சிறையிலிடப்பட்டு சிறுமைப்படுத்தப்படுவார்" என்று கூறினாள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௩௨)
Tafseer
௩௩

قَالَ رَبِّ السِّجْنُ اَحَبُّ اِلَيَّ مِمَّا يَدْعُوْنَنِيْٓ اِلَيْهِ ۚوَاِلَّا تَصْرِفْ عَنِّيْ كَيْدَهُنَّ اَصْبُ اِلَيْهِنَّ وَاَكُنْ مِّنَ الْجٰهِلِيْنَ ٣٣

qāla
قَالَ
கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா
l-sij'nu
ٱلسِّجْنُ
சிறை
aḥabbu
أَحَبُّ
மிக விருப்பமானது
ilayya mimmā
إِلَىَّ مِمَّا
எனக்கு/எதை விட
yadʿūnanī
يَدْعُونَنِىٓ
அழைக்கிறார்கள்/என்னை
ilayhi
إِلَيْهِۖ
அதன் பக்கம்
wa-illā taṣrif
وَإِلَّا تَصْرِفْ
நீ திருப்பவில்லையெனில்
ʿannī
عَنِّى
என்னை விட்டு
kaydahunna
كَيْدَهُنَّ
சூழ்ச்சியை/ அவர்களின்
aṣbu
أَصْبُ
இச்சைகொள்வேன்
ilayhinna
إِلَيْهِنَّ
அவர்கள் பக்கம்
wa-akun
وَأَكُن
இன்னும் ஆகிவிடுவேன்
mina l-jāhilīna
مِّنَ ٱلْجَٰهِلِينَ
அறிவீனர்களில்
அதற்கவர், "என் இறைவனே! அவர்கள் என்னை அழைக்கும் (இத்தீய) காரியத்தைவிட சிறைக்கூடமே எனக்கு விருப்பமானது. ஆகவே, இப்பெண்களின் சூழ்ச்சியிலிருந்து நீ என்னைத் தடுத்துக் கொள்ளாவிட்டால் இப்பெண்களிடம் சிக்கி (பாவம் செய்யும்) அறிவீனர்களில் நானும் ஒருவனாக ஆகி விடுவேன்" என்று பிரார்த்தித்தார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௩௩)
Tafseer
௩௪

فَاسْتَجَابَ لَهٗ رَبُّهٗ فَصَرَفَ عَنْهُ كَيْدَهُنَّ ۗاِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ ٣٤

fa-is'tajāba
فَٱسْتَجَابَ
பதிலளித்தான்
lahu
لَهُۥ
அவருக்கு
rabbuhu
رَبُّهُۥ
அவருடைய இறைவன்
faṣarafa
فَصَرَفَ
ஆகவேதிருப்பினான்
ʿanhu
عَنْهُ
அவரை விட்டு
kaydahunna
كَيْدَهُنَّۚ
சூழ்ச்சியை அவர்களின்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
huwa
هُوَ
அவன்
l-samīʿu
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
(அவரது பிரார்த்தனையை) அவருடைய இறைவன் அங்கீகரித்துக் கொண்டு, பெண்களின் சூழ்ச்சியை அவரைவிட்டுத் திருப்பிவிட்டான். நிச்சயமாக அவன் அனைத்தையும் செவியுறுபவனாகவும், நன்கறிந்தவனாகவும் இருக்கிறான். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௩௪)
Tafseer
௩௫

ثُمَّ بَدَا لَهُمْ مِّنْۢ بَعْدِ مَا رَاَوُا الْاٰيٰتِ لَيَسْجُنُنَّهٗ حَتّٰى حِيْنٍ ࣖ ٣٥

thumma badā lahum
ثُمَّ بَدَا لَهُم
பிறகு/தோன்றியது/அவர்களுக்கு
min baʿdi
مِّنۢ بَعْدِ
பின்னரும்
mā ra-awū
مَا رَأَوُا۟
அவர்கள் பார்த்த
l-āyāti
ٱلْءَايَٰتِ
அத்தாட்சிகளை
layasjununnahu
لَيَسْجُنُنَّهُۥ
நிச்சயமாக அவர்கள் சிறையில் அடைக்கவேண்டும்/ அவரை
ḥattā ḥīnin
حَتَّىٰ حِينٍ
வரை/ஒரு காலம்
(யூஸுஃப் நிரபராதி என்பதற்குரிய) ஆதாரங்களை அவர்கள் கண்டதன் பின்னரும் (இச்சம்பவத்தைப் பற்றி என்ன செய்யலாமென அவர்கள் ஆலோசனை செய்தனர். அவளுடைய பார்வையிலிருந்து யூஸுஃபை மறைத்து விடுவதே நலமெனக் கருதி அதற்காகச்) சிறிது காலம் அவரை சிறையிலிடுவதே தகுமென அவர்களுக்குத் தோன்றியது. (ஆகவே, அவரை சிறைக்கூடத்திற்கு அனுப்பி விட்டனர்.) ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௩௫)
Tafseer
௩௬

وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيٰنِ ۗقَالَ اَحَدُهُمَآ اِنِّيْٓ اَرٰىنِيْٓ اَعْصِرُ خَمْرًا ۚوَقَالَ الْاٰخَرُ اِنِّيْٓ اَرٰىنِيْٓ اَحْمِلُ فَوْقَ رَأْسِيْ خُبْزًا تَأْكُلُ الطَّيْرُ مِنْهُ ۗنَبِّئْنَا بِتَأْوِيْلِهٖ ۚاِنَّا نَرٰىكَ مِنَ الْمُحْسِنِيْنَ ٣٦

wadakhala
وَدَخَلَ
நுழைந்தார்(கள்)
maʿahu
مَعَهُ
அவருடன்
l-sij'na
ٱلسِّجْنَ
சிறையில்
fatayāni
فَتَيَانِۖ
இரு வாலிபர்கள்
qāla
قَالَ
கூறினான்
aḥaduhumā
أَحَدُهُمَآ
அவ்விருவரில் ஒருவன்
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
arānī
أَرَىٰنِىٓ
கனவு கண்டேன்/என்னை
aʿṣiru khamran
أَعْصِرُ خَمْرًاۖ
பிழிகிறேன்/மதுவை
waqāla
وَقَالَ
இன்னும் கூறினான்
l-ākharu
ٱلْءَاخَرُ
மற்றவன்
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
arānī
أَرَىٰنِىٓ
கனவு கண்டேன்/என்னை
aḥmilu
أَحْمِلُ
சுமக்கிறேன்
fawqa rasī
فَوْقَ رَأْسِى
மேல்/என் தலை
khub'zan
خُبْزًا
ரொட்டியை
takulu
تَأْكُلُ
புசிப்பதாக
l-ṭayru
ٱلطَّيْرُ
பறவைகள்
min'hu
مِنْهُۖ
அதிலிருந்து
nabbi'nā
نَبِّئْنَا
அறிவிப்பீராக/எங்களுக்கு
bitawīlihi
بِتَأْوِيلِهِۦٓۖ
இதன் விளக்கத்தை
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
narāka
نَرَىٰكَ
காண்கிறோம்/உம்மை
mina l-muḥ'sinīna
مِنَ ٱلْمُحْسِنِينَ
நல்லறம்புரிபவர்களில்
(அவர் சிறைச்சென்ற சமயத்தில் வெவ்வேறு குற்றங்களுக்காக இன்னும்) இரு வாலிபர்களும் அவருடன் சிறைச் சென்றார்கள். அவ்விருவரில் ஒருவன் (ஒரு நாளன்று யூஸுஃபை நோக்கி) "நான் திராட்சை ரஸம் பிழிந்து கொண்டிருப்பதாக மெய்யாகவே கனவு கண்டேன்" என்று கூறினான். மற்றவன் "நான் என் தலையில் ரொட்டிகளைச் சுமந்து செல்வதாகவும், அதை பட்சிகள் (கொத்திக் கொத்திப்) புசிப்பதாகவும் மெய்யாகவே கனவு கண்டேன்" என்று கூறி (யூஸுஃபை நோக்கி,) "நிச்சயமாக நாங்கள் உங்களை மிக்க (ஞானமுடைய) நல்லோர்களில் ஒருவராகவே காண்கிறோம்; ஆதலால், இக்கனவுகளின் வியாக்கியானங்களை நீங்கள் எங்களுக்கு அறிவிப்பீராக!" (என்று கூறினான்). ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௩௬)
Tafseer
௩௭

قَالَ لَا يَأْتِيْكُمَا طَعَامٌ تُرْزَقٰنِهٖٓ اِلَّا نَبَّأْتُكُمَا بِتَأْوِيْلِهٖ قَبْلَ اَنْ يَّأْتِيَكُمَا ۗذٰلِكُمَا مِمَّا عَلَّمَنِيْ رَبِّيْۗ اِنِّيْ تَرَكْتُ مِلَّةَ قَوْمٍ لَّا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَۙ ٣٧

qāla
قَالَ
கூறினார்
lā yatīkumā
لَا يَأْتِيكُمَا
வராது/உங்களிடம்
ṭaʿāmun
طَعَامٌ
ஓர் உணவு
tur'zaqānihi
تُرْزَقَانِهِۦٓ
உணவளிக் கப்படுகிறீர்கள்/அதை
illā nabbatukumā
إِلَّا نَبَّأْتُكُمَا
தவிர/அறிவித்தேன்/உங்கள் இருவருக்கும்
bitawīlihi
بِتَأْوِيلِهِۦ
அதன் விளக்கத்தை
qabla
قَبْلَ
முன்னர்
an yatiyakumā
أَن يَأْتِيَكُمَاۚ
அது வருவதற்கு/உங்கள் இருவருக்கும்
dhālikumā
ذَٰلِكُمَا
இது
mimmā
مِمَّا
இருந்து/எவை
ʿallamanī
عَلَّمَنِى
கற்பித்தான்/எனக்கு
rabbī
رَبِّىٓۚ
என் இறைவன்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
taraktu
تَرَكْتُ
விட்டுவிட்டேன்
millata
مِلَّةَ
மார்க்கத்தை
qawmin
قَوْمٍ
மக்களுடைய
lā yu'minūna
لَّا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wahum
وَهُم
இன்னும் அவர்கள்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
hum kāfirūna
هُمْ كَٰفِرُونَ
அவர்கள் நிராகரிக்கின்றார்கள்
(அதற்கு யூஸுஃப் அவர்களை நோக்கி,) "நீங்கள் புசிக்கக் கூடிய உணவு (வெளியிலிருந்து) உங்களிடம் வந்து சேருவதற்கு முன்னதாகவும் (இக்கனவுகளின் பலன்) உங்களிருவருக்கும் நிறைவேறுவதற்கு முன்னதாகவும் (அக்கனவுகளின்) பலனை நீங்கள் அடைவதற்கு முன்னதாகவும் (அதனை) நான் உங்களுக்கு அறிவித்து விடுவேன்; (கனவுகளுக்கு வியாக்கியானம் கூறும்) இதனை என் இறைவனே எனக்கு அறிவித்து இருக்கிறான். ஏனென்றால், அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்ளாது மறுமை யையும் நிராகரிக்கும் மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௩௭)
Tafseer
௩௮

وَاتَّبَعْتُ مِلَّةَ اٰبَاۤءِيْٓ اِبْرٰهِيْمَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَۗ مَا كَانَ لَنَآ اَنْ نُّشْرِكَ بِاللّٰهِ مِنْ شَيْءٍۗ ذٰلِكَ مِنْ فَضْلِ اللّٰهِ عَلَيْنَا وَعَلَى النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُوْنَ ٣٨

wa-ittabaʿtu
وَٱتَّبَعْتُ
இன்னும் பின்பற்றினேன்
millata
مِلَّةَ
மார்க்கத்தை
ābāī
ءَابَآءِىٓ
என் மூதாதைகளாகிய
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்றாஹீம்
wa-is'ḥāqa
وَإِسْحَٰقَ
இன்னும் இஸ்ஹாக்
wayaʿqūba
وَيَعْقُوبَۚ
யஃகூப்
mā kāna
مَا كَانَ
தகுமானதல்ல
lanā
لَنَآ
எங்களுக்கு
an nush'rika
أَن نُّشْرِكَ
நாங்கள் இணைவைப்பது
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வின்
min shayin
مِن شَىْءٍۚ
எதையும்
dhālika
ذَٰلِكَ
இது
min
مِن
இருந்து
faḍli
فَضْلِ
அருள்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
ʿalaynā
عَلَيْنَا
எங்கள் மீது
waʿalā
وَعَلَى
இன்னும் மீது
l-nāsi
ٱلنَّاسِ
மக்கள்
walākinna
وَلَٰكِنَّ
எனினும்
akthara
أَكْثَرَ
அதிகமானவர்(கள்)
l-nāsi
ٱلنَّاسِ
மக்களில்
lā yashkurūna
لَا يَشْكُرُونَ
நன்றி செலுத்த மாட்டார்கள்
அன்றி, என்னுடைய மூதாதைகளாகிய இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகிய இவர்களின் மார்க்கத்தையே நான் பின்பற்றியிருக்கிறேன். ஆதலால், அல்லாஹ்வுக்கு யாதொன்றையும் நாங்கள் இணையாக்குவது எங்களுக்குத் தகுமானதல்ல. இக்கொள்கை மீது இருப்பது எங்கள் மீதும் மற்ற மனிதர்கள் மீதும் அல்லாஹ் புரிந்த ஓர் அருளாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள், (அல்லாஹ்வின் அருளுக்கு) நன்றி செலுத்துவதில்லை. ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௩௮)
Tafseer
௩௯

يٰصَاحِبَيِ السِّجْنِ ءَاَرْبَابٌ مُتَفَرِّقُوْنَ خَيْرٌ اَمِ اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُۗ ٣٩

yāṣāḥibayi
يَٰصَىٰحِبَىِ
என் (இரு) தோழர்களே
l-sij'ni
ٱلسِّجْنِ
சிறை
a-arbābun
ءَأَرْبَابٌ
?/தெய்வங்கள்
mutafarriqūna
مُّتَفَرِّقُونَ
பிரிந்துள்ளவர்கள்
khayrun
خَيْرٌ
மேலானவர்(கள்)
ami
أَمِ
அல்லது
l-lahu l-wāḥidu
ٱللَّهُ ٱلْوَٰحِدُ
அல்லாஹ்/ஒருவன்
l-qahāru
ٱلْقَهَّارُ
அடக்கி ஆளுபவன்
சிறைக்கூடத்தில் இருக்கும் என்னிரு தோழர்களே! (யாதொருசக்தியுமற்ற) வெவ்வேறு தெய்வங்கள் நன்றா? அல்லது அனைவரையும் அடக்கி ஆளுகின்ற ஒரே இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே நன்றா? ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௩௯)
Tafseer
௪௦

مَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِهٖٓ اِلَّآ اَسْمَاۤءً سَمَّيْتُمُوْهَآ اَنْتُمْ وَاٰبَاۤؤُكُمْ مَّآ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍۗ اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ ۗاَمَرَ اَلَّا تَعْبُدُوْٓا اِلَّآ اِيَّاهُ ۗذٰلِكَ الدِّيْنُ الْقَيِّمُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ ٤٠

mā taʿbudūna
مَا تَعْبُدُونَ
நீங்கள் வணங்குவதில்லை
min dūnihi
مِن دُونِهِۦٓ
அவனையன்றி
illā
إِلَّآ
தவிர
asmāan
أَسْمَآءً
பெயர்களை
sammaytumūhā
سَمَّيْتُمُوهَآ
சூட்டினீர்கள்/ அவற்றை
antum
أَنتُمْ
நீங்களும்
waābāukum
وَءَابَآؤُكُم
இன்னும் மூதாதைகளும் உங்கள்
mā anzala
مَّآ أَنزَلَ
இறக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bihā
بِهَا
இவற்றுக்கு
min
مِن
எவ்வித
sul'ṭānin
سُلْطَٰنٍۚ
ஆதாரத்தை
ini l-ḥuk'mu
إِنِ ٱلْحُكْمُ
இல்லை/அதிகாரம்
illā
إِلَّا
தவிர
lillahi
لِلَّهِۚ
அல்லாஹ்விற்கே
amara
أَمَرَ
கட்டளையிட்டான்
allā taʿbudū
أَلَّا تَعْبُدُوٓا۟
நிச்சயமாக வணங்காதீர்கள்
illā
إِلَّآ
தவிர
iyyāhu
إِيَّاهُۚ
அவனை
dhālika
ذَٰلِكَ
இது
l-dīnu
ٱلدِّينُ
மார்க்கம்
l-qayimu
ٱلْقَيِّمُ
நேரானது
walākinna
وَلَٰكِنَّ
எனினும்
akthara
أَكْثَرَ
அதிகமானவர்(கள்)
l-nāsi
ٱلنَّاسِ
மக்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவை அனைத்தும், நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்துக்கொண்ட வெறும் (கற்பனைப்) பெயர்களைத் தவிர (உண்மையில் அவை ஒன்றுமே) இல்லை. அல்லாஹ் இதற்கு யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவுமில்லை; எல்லா அதிகாரங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே யன்றி (மற்றெவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (மற்ற எவற்றையும்) நீங்கள் வணங்கக்கூடாதென்று அவனே கட்டளை இட்டிருக்கின்றான். இதுதான் நேரான மார்க்கம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்து கொள்ளவில்லை" (என்று யூஸுஃப் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து,) ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௪௦)
Tafseer