قَالُوْا يٰٓاَبَانَا مَالَكَ لَا تَأْمَنَّ۫ا عَلٰى يُوْسُفَ وَاِنَّا لَهٗ لَنَاصِحُوْنَ ١١
- qālū
- قَالُوا۟
- கூறினர்
- yāabānā
- يَٰٓأَبَانَا
- எங்கள் தந்தையே
- mā laka
- مَا لَكَ
- உனக்கென்ன நேர்ந்தது?
- lā tamannā
- لَا تَأْمَ۫نَّا
- நீங்கள் நம்புவதில்லை/ எங்களை
- ʿalā yūsufa
- عَلَىٰ يُوسُفَ
- யூஸுஃப் விஷயத்தில்
- wa-innā
- وَإِنَّا
- நிச்சயமாக நாங்கள்
- lahu
- لَهُۥ
- அவருக்கு
- lanāṣiḥūna
- لَنَٰصِحُونَ
- நன்மையை நாடுபவர்கள்தான்
(பின்னர் அவர்கள் தங்கள் தந்தையிடம் வந்து,) "எங்கள் தந்தையே! என்ன காரணத்தால் யூஸுஃபைப் பற்றி நீங்கள் எங்களை நம்புவதில்லை? நாங்களோ, மெய்யாகவே அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கிறோம்" என்றும், ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௧)Tafseer
اَرْسِلْهُ مَعَنَا غَدًا يَّرْتَعْ وَيَلْعَبْ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ ١٢
- arsil'hu
- أَرْسِلْهُ
- அவரைஅனுப்புவீராக
- maʿanā
- مَعَنَا
- எங்களுடன்
- ghadan
- غَدًا
- நாளை
- yartaʿ
- يَرْتَعْ
- மகிழ்ச்சியாகஇருப்பார்
- wayalʿab
- وَيَلْعَبْ
- இன்னும் விளையாடுவார்
- wa-innā
- وَإِنَّا
- நிச்சயமாக நாங்கள்
- lahu
- لَهُۥ
- அவரை
- laḥāfiẓūna
- لَحَٰفِظُونَ
- பாதுகாப்பவர்கள்தான்
"நாளைய தினம் அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். அவர் (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருப்பார். நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்" என்றும் கூறினார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௨)Tafseer
قَالَ اِنِّيْ لَيَحْزُنُنِيْٓ اَنْ تَذْهَبُوْا بِهٖ وَاَخَافُ اَنْ يَّأْكُلَهُ الذِّئْبُ وَاَنْتُمْ عَنْهُ غٰفِلُوْنَ ١٣
- qāla
- قَالَ
- கூறினார்
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- layaḥzununī
- لَيَحْزُنُنِىٓ
- கவலையளிக்கும்/ எனக்கு
- an tadhhabū bihi
- أَن تَذْهَبُوا۟ بِهِۦ
- நீங்கள்அவரை அழைத்துச் செல்வது
- wa-akhāfu
- وَأَخَافُ
- இன்னும் பயப்படுகின்றேன்
- an yakulahu
- أَن يَأْكُلَهُ
- தின்றுவிடுவதை/அவரை
- l-dhi'bu
- ٱلذِّئْبُ
- ஓநாய்
- wa-antum
- وَأَنتُمْ
- நீங்கள்
- ʿanhu
- عَنْهُ
- அவரை விட்டு
- ghāfilūna
- غَٰفِلُونَ
- கவனமற்றவர்கள்
(அதற்கவர்) "நீங்கள் அவரை அழைத்துச் செல்வது எனக்குத் துக்கத்தை உண்டு பண்ணிவிடும். அன்றி, நீங்கள் (விளையாடிக் கொண்டு) அவரை மறந்து பராமுகமாய் இருக்கும் சமயத்தில் ஓநாய் அவரை (அடித்துத்) தின்றுவிடும் என்றும் நான் பயப்படுகின்றேன்" என்று கூறினார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௩)Tafseer
قَالُوْا لَىِٕنْ اَكَلَهُ الذِّئْبُ وَنَحْنُ عُصْبَةٌ اِنَّآ اِذًا لَّخٰسِرُوْنَ ١٤
- qālū
- قَالُوا۟
- கூறினர்
- la-in akalahu
- لَئِنْ أَكَلَهُ
- தின்றால்/அவரை
- l-dhi'bu
- ٱلذِّئْبُ
- ஓநாய்
- wanaḥnu
- وَنَحْنُ
- நாங்கள் இருக்க
- ʿuṣ'batun
- عُصْبَةٌ
- ஒரு கூட்டமாக
- innā
- إِنَّآ
- நிச்சயமாக நாங்கள்
- idhan
- إِذًا
- அப்போது
- lakhāsirūna
- لَّخَٰسِرُونَ
- நஷ்டவாளிகள்தான்
அதற்கவர்கள், "பலசாலிகளான நாங்கள் இருந்தும் அவரை ஒரு ஓநாய் தின்பதென்றால் நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள் ஆகிவிடுவோம்" என்று கூறி (சம்மதிக்கச் செய்து), ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௪)Tafseer
فَلَمَّا ذَهَبُوْا بِهٖ وَاَجْمَعُوْٓا اَنْ يَّجْعَلُوْهُ فِيْ غَيٰبَتِ الْجُبِّۚ وَاَوْحَيْنَآ اِلَيْهِ لَتُنَبِّئَنَّهُمْ بِاَمْرِهِمْ هٰذَا وَهُمْ لَا يَشْعُرُوْنَ ١٥
- falammā dhahabū
- فَلَمَّا ذَهَبُوا۟
- அவர்கள் சென்றனர்/போது
- bihi
- بِهِۦ
- அவரைக் கொண்டு
- wa-ajmaʿū
- وَأَجْمَعُوٓا۟
- ஒன்று சேர்ந்து முடிவு செய்தனர்
- an yajʿalūhu
- أَن يَجْعَلُوهُ
- அவர்கள் ஆக்கிவிட/அவரை
- fī ghayābati
- فِى غَيَٰبَتِ
- ஆழத்தில்
- l-jubi
- ٱلْجُبِّۚ
- கிணற்றின்
- wa-awḥaynā
- وَأَوْحَيْنَآ
- இன்னும் வஹீ அறிவித்தோம்
- ilayhi
- إِلَيْهِ
- அவருக்கு
- latunabbi-annahum
- لَتُنَبِّئَنَّهُم
- நிச்சயமாக அறிவிப்பீர்/அவர்களுக்கு
- bi-amrihim
- بِأَمْرِهِمْ
- காரியத்தை அவர்களுடைய
- hādhā
- هَٰذَا
- இந்த
- wahum
- وَهُمْ
- அவர்கள்
- lā yashʿurūna
- لَا يَشْعُرُونَ
- உணரமாட்டார்கள்
(யூஸுஃபை) அழைத்துச் சென்று, அவரை ஆழமான ஒரு பாழ்கிணற்றில் எறிந்துவிட வேண்டுமென்றே அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவு கட்டி (எறிந்தும் விட்ட)னர். "அவர்களுடைய இச்செயலைப் பற்றி (ஒரு காலத்தில்) நீங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துவீர்கள். அப்பொழுது அவர்கள் (உங்களை) அறிந்து கொள்ளவும் மாட்டார்கள்" என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௫)Tafseer
وَجَاۤءُوْٓ اَبَاهُمْ عِشَاۤءً يَّبْكُوْنَۗ ١٦
- wajāū
- وَجَآءُوٓ
- வந்தனர்
- abāhum
- أَبَاهُمْ
- தம் தந்தையிடம்
- ʿishāan
- عِشَآءً
- மாலை சாய்ந்த பின்
- yabkūna
- يَبْكُونَ
- அழுதவர்களாக
அன்று பொழுதடைந்தபின், அவர்கள் தங்கள் தந்தையிடம் அழுதுகொண்டே வந்து, ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௬)Tafseer
قَالُوْا يٰٓاَبَانَآ اِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا يُوْسُفَ عِنْدَ مَتَاعِنَا فَاَكَلَهُ الذِّئْبُۚ وَمَآ اَنْتَ بِمُؤْمِنٍ لَّنَا وَلَوْ كُنَّا صٰدِقِيْنَ ١٧
- qālū
- قَالُوا۟
- கூறினர்
- yāabānā
- يَٰٓأَبَانَآ
- எங்கள் தந்தையே
- innā
- إِنَّا
- நிச்சயமாக நாங்கள்
- dhahabnā
- ذَهَبْنَا
- நாங்கள் சென்றோம்
- nastabiqu
- نَسْتَبِقُ
- அம்பெறிகிறோம்
- wataraknā
- وَتَرَكْنَا
- இன்னும் விட்டுவிட்டோம்
- yūsufa
- يُوسُفَ
- யூஸுஃபை
- ʿinda matāʿinā
- عِندَ مَتَٰعِنَا
- எங்கள் பொருளிடம்
- fa-akalahu
- فَأَكَلَهُ
- தின்றது/அவரை
- l-dhi'bu
- ٱلذِّئْبُۖ
- ஓநாய்
- wamā
- وَمَآ
- இல்லை
- anta
- أَنتَ
- நீர்
- bimu'minin
- بِمُؤْمِنٍ
- நம்புபவராக
- lanā
- لَّنَا
- எங்களை
- walaw kunnā
- وَلَوْ كُنَّا
- நாங்கள் இருந்தாலும்
- ṣādiqīna
- صَٰدِقِينَ
- உண்மையாளர்களாக
"எங்கள் தந்தையே! நிச்சயமாக யூஸுஃபை எங்கள் சாமான்களிடம் விட்டுவிட்டு ஓடி (விளையாடிக் கொண்டே வெகுதூரம் சென்று) விட்டோம். அச்சமயம் அவரை ஓநாய் (அடித்துத்) தின்றுவிட்டது. நாங்கள் (எவ்வளவு) உண்மை சொன்ன போதிலும் (அதனை) நீங்கள் நம்பவே மாட்டீர்கள்" என்று கூறினார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௭)Tafseer
وَجَاۤءُوْ عَلٰى قَمِيْصِهٖ بِدَمٍ كَذِبٍۗ قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ اَنْفُسُكُمْ اَمْرًاۗ فَصَبْرٌ جَمِيْلٌ ۗوَاللّٰهُ الْمُسْتَعَانُ عَلٰى مَا تَصِفُوْنَ ١٨
- wajāū
- وَجَآءُو
- இன்னும் வந்தனர்
- ʿalā qamīṣihi
- عَلَىٰ قَمِيصِهِۦ
- அவருடைய சட்டையில்
- bidamin
- بِدَمٍ
- இரத்தத்தைக்கொண்டு
- kadhibin
- كَذِبٍۚ
- பொய்யான(து)
- qāla
- قَالَ
- கூறினார்
- bal
- بَلْ
- மாறாக
- sawwalat
- سَوَّلَتْ
- அலங்கரித்தன
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- anfusukum
- أَنفُسُكُمْ
- உங்கள் மனங்கள்
- amran
- أَمْرًاۖ
- ஒரு காரியத்தை
- faṣabrun
- فَصَبْرٌ
- ஆகவே பொறுமை
- jamīlun wal-lahu l-mus'taʿānu
- جَمِيلٌۖ وَٱللَّهُ ٱلْمُسْتَعَانُ
- அழகியது/அல்லாஹ்/உதவி தேடப்படுபவன்
- ʿalā mā taṣifūna
- عَلَىٰ مَا تَصِفُونَ
- மீது/எவை/வருணிக்கிறீர்கள்
அன்றி, (தங்கள் தந்தைக்குக் காண்பிப்பதற்காக) அவருடைய சட்டையில் (ஆட்டின்) பொய்யான இரத்தத்தைத் தோய்த்துக் கொண்டு வந்(து காண்பித்)தார்கள். (இரத்தம் தோய்ந்த அச்சட்டைக் கிழியாதிருப்பதைக் கண்டு "ஓநாய் அடித்துத் தின்ன) இல்லை" உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டது. (அவ்வாறு செய்து விட்டீர்கள்.) ஆகவே, (அத்துக்கத்தைச்) சகித்துக் கொள்வதுதான் நன்று. நீங்கள் கூறியவற்றில் (இருந்து யூஸுஃபை பாதுகாக்குமாறு) அல்லாஹ் விடம் உதவி தேடுகிறேன்" என்று கூறினார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௮)Tafseer
وَجَاۤءَتْ سَيَّارَةٌ فَاَرْسَلُوْا وَارِدَهُمْ فَاَدْلٰى دَلْوَهٗ ۗقَالَ يٰبُشْرٰى هٰذَا غُلٰمٌ ۗوَاَسَرُّوْهُ بِضَاعَةً ۗوَاللّٰهُ عَلِيْمٌ ۢبِمَا يَعْمَلُوْنَ ١٩
- wajāat
- وَجَآءَتْ
- வந்தது
- sayyāratun
- سَيَّارَةٌ
- ஒரு பயணக் கூட்டம்
- fa-arsalū
- فَأَرْسَلُوا۟
- அனுப்பினார்கள்
- wāridahum
- وَارِدَهُمْ
- தங்களில் நீர் கொண்டு வருபவரை
- fa-adlā
- فَأَدْلَىٰ
- இறக்கினார்
- dalwahu
- دَلْوَهُۥۖ
- அவர் வாளியை
- qāla
- قَالَ
- கூறினார்
- yābush'rā
- يَٰبُشْرَىٰ
- ஆ... நற்செய்தி!
- hādhā
- هَٰذَا
- இதோ
- ghulāmun
- غُلَٰمٌۚ
- ஒரு சிறுவர்
- wa-asarrūhu
- وَأَسَرُّوهُ
- மறைத்தார்கள்/அவரை
- biḍāʿatan
- بِضَٰعَةًۚ
- வர்த்தகப் பொருளாக
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ʿalīmun
- عَلِيمٌۢ
- நன்கறிபவன்
- bimā yaʿmalūna
- بِمَا يَعْمَلُونَ
- அவர்கள் செய்வதை
பின்னர் (கிணற்றின் சமீபமாக) ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தங்களின் ஆளை (தண்ணீர் கொண்டு வர) அனுப்பி னார்கள். அவன் தன் வாளியைக் (கிணற்றில்) விட்டான். (அதில் யூஸுஃப் உட்கார்ந்து கொண்டார். அதில் யூஸுஃப் இருப்பதைக் கண்டு "உங்களுக்கு) நற்செய்தி! இதோ ஒரு (அழகிய) சிறுவன்! என்று (யூஸுஃபைச் சுட்டிக் காட்டிக்) கூறினான். (அவரைக் கண்ணுற்ற அவர்கள்) தங்கள் வர்த்தகப்பொருளாக (ஆக்கிக் கொள்ளக் கருதி) அவரை மறைத்துக் கொண்டார்கள். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௯)Tafseer
وَشَرَوْهُ بِثَمَنٍۢ بَخْسٍ دَرَاهِمَ مَعْدُوْدَةٍ ۚوَكَانُوْا فِيْهِ مِنَ الزَّاهِدِيْنَ ࣖ ٢٠
- washarawhu
- وَشَرَوْهُ
- விற்றார்கள்அவரை
- bithamanin
- بِثَمَنٍۭ
- ஒரு தொகைக்குப்பகரமாக
- bakhsin
- بَخْسٍ
- குறைவான(து)
- darāhima
- دَرَٰهِمَ
- திர்ஹம்களுக்கு
- maʿdūdatin
- مَعْدُودَةٍ
- எண்ணப்பட்ட
- wakānū
- وَكَانُوا۟
- இன்னும் இருந்தனர்
- fīhi
- فِيهِ
- அவர் விஷயத்தில்
- mina l-zāhidīna
- مِنَ ٱلزَّٰهِدِينَ
- ஆசையற்றவர்களில்
(இதற்குள் அவருடைய சகோதரர்கள் அங்கு வந்து "இவன் தப்பி ஓடி வந்துவிட்ட எங்கள் அடிமை" எனக் கூறி அவர்களிடமே) ஒரு சொற்ப தொகையான பணத்திற்கு விற்றுவிட்டார்கள். (ஏனென்றால், அவருடைய சகோதரர்கள்) அவரை மிக்க வெறுத்த வர்களாகவே இருந்தனர். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௨௦)Tafseer