۞ رَبِّ قَدْ اٰتَيْتَنِيْ مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِيْ مِنْ تَأْوِيْلِ الْاَحَادِيْثِۚ فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ اَنْتَ وَلِيّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِۚ تَوَفَّنِيْ مُسْلِمًا وَّاَلْحِقْنِيْ بِالصّٰلِحِيْنَ ١٠١
- rabbi
- رَبِّ
- என் இறைவா
- qad ātaytanī
- قَدْ ءَاتَيْتَنِى
- திட்டமாக/எனக்கு தந்தாய்
- mina l-mul'ki
- مِنَ ٱلْمُلْكِ
- ஆட்சியை
- waʿallamtanī
- وَعَلَّمْتَنِى
- இன்னும் கற்பித்தாய்/எனக்கு
- min tawīli
- مِن تَأْوِيلِ
- விளக்கத்தை
- l-aḥādīthi
- ٱلْأَحَادِيثِۚ
- பேச்சுகளின்
- fāṭira
- فَاطِرَ
- படைத்தவனே
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களை(யும்)
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- இன்னும் பூமியை(யும்)
- anta waliyyī
- أَنتَ وَلِىِّۦ
- நீ என் பாதுகாவலன்
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- இம்மையில்
- wal-ākhirati
- وَٱلْءَاخِرَةِۖ
- இன்னும் மறுமை
- tawaffanī
- تَوَفَّنِى
- உயிர் கைப்பற்றிக் கொள்/என்னை
- mus'liman
- مُسْلِمًا
- முஸ்லிமாக
- wa-alḥiq'nī
- وَأَلْحِقْنِى
- இன்னும் சேர்த்து விடு/என்னை
- bil-ṣāliḥīna
- بِٱلصَّٰلِحِينَ
- நல்லவர்களுடன்
(அன்றி) "என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு ஓர் ஆட்சியையும் தந்தருள்புரிந்து, கனவுகளின் வியாக்கியானங் களையும் எனக்குக் கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் நீதான் படைத்தாய். இம்மையிலும், மறுமையிலும் என்னை பாதுகாப்பவனும் நீதான். முற்றிலும் (உனக்கு) வழிப்பட்டவனாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்திலும் என்னை நீ சேர்த்து விடுவாயாக!" (என்று பிரார்த்தித்தார்.) ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௦௧)Tafseer
ذٰلِكَ مِنْ اَنْۢبَاۤءِ الْغَيْبِ نُوْحِيْهِ اِلَيْكَۚ وَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ اَجْمَعُوْٓا اَمْرَهُمْ وَهُمْ يَمْكُرُوْنَ ١٠٢
- dhālika min anbāi
- ذَٰلِكَ مِنْ أَنۢبَآءِ
- இவை/விஷயங்களில்
- l-ghaybi
- ٱلْغَيْبِ
- மறைவான
- nūḥīhi
- نُوحِيهِ
- வஹீ அறிவிக்கிறோம்/இவற்றை
- ilayka
- إِلَيْكَۖ
- உமக்கு
- wamā kunta
- وَمَا كُنتَ
- நீர் இருக்கவில்லை
- ladayhim
- لَدَيْهِمْ
- அவர்களிடம்
- idh
- إِذْ
- போது
- ajmaʿū
- أَجْمَعُوٓا۟
- ஒருமித்து முடிவெடுத்தனர்
- amrahum wahum
- أَمْرَهُمْ وَهُمْ
- தங்கள்காரியத்தில்/அவர்கள்
- yamkurūna
- يَمْكُرُونَ
- சூழ்ச்சி செய்கின்றனர்
(நபியே) இது (நீங்கள் அறியாத) மறைவான விஷயங்களில் உள்ளதாகும். அவர்கள் சூழ்ச்சி செய்து (யூஸுஃபைக் கிணற்றில் தள்ள வேண்டுமென்ற) தங்கள் திட்டத்தை வகுத்தபொழுது நீங்கள் அவர்களுடன் இருக்கவில்லை. (எனினும்) இவைகளை நாம் உங்களுக்கு வஹீ மூலமே அறிவித்தோம். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௦௨)Tafseer
وَمَآ اَكْثَرُ النَّاسِ وَلَوْ حَرَصْتَ بِمُؤْمِنِيْنَ ١٠٣
- wamā
- وَمَآ
- இல்லை
- aktharu
- أَكْثَرُ
- அதிகமானவர்(கள்)
- l-nāsi
- ٱلنَّاسِ
- மக்களில்
- walaw ḥaraṣta
- وَلَوْ حَرَصْتَ
- நீர் பேராசைப்பட்டாலும்
- bimu'minīna
- بِمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களாக
நீங்கள் எவ்வளவுதான் விரும்பியபோதிலும் (அம்)மனிதரில் பெரும்பாலானவர்கள் (உங்களை நபி என்று) நம்பவே மாட்டார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௦௩)Tafseer
وَمَا تَسْـَٔلُهُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍۗ اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِيْنَ ࣖ ١٠٤
- wamā tasaluhum
- وَمَا تَسْـَٔلُهُمْ
- நீர் கேட்பதில்லை/அவர்களிடம்
- ʿalayhi
- عَلَيْهِ
- இதற்காக
- min ajrin
- مِنْ أَجْرٍۚ
- ஒரு கூலியையும்
- in huwa
- إِنْ هُوَ
- இல்லை/இது
- illā
- إِلَّا
- தவிர
- dhik'run
- ذِكْرٌ
- அறிவுரை
- lil'ʿālamīna
- لِّلْعَٰلَمِينَ
- அகிலகத்தார்களுக்கு
இதற்காக (நீங்கள் அவர்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்பது இல்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்ல படிப்பினையே அன்றி வேறில்லை. ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௦௪)Tafseer
وَكَاَيِّنْ مِّنْ اٰيَةٍ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ يَمُرُّوْنَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُوْنَ ١٠٥
- waka-ayyin
- وَكَأَيِّن
- எத்தனையோ
- min āyatin
- مِّنْ ءَايَةٍ
- அத்தாட்சிகள்
- fī l-samāwāti wal-arḍi
- فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
- வானங்களில்/இன்னும் பூமி
- yamurrūna
- يَمُرُّونَ
- செல்கின்றனர்
- ʿalayhā
- عَلَيْهَا
- அவற்றின் அருகே
- wahum
- وَهُمْ
- அவர்களோ
- ʿanhā
- عَنْهَا
- அவற்றை
- muʿ'riḍūna
- مُعْرِضُونَ
- புறக்கணிப்பவர்களாக
(இவ்வாறே) வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன. அவற்றின் முன் அவர்கள் (அனு தினமும்) செல்கின்றனர். எனினும், அவர்கள் அவற்றை (சிந்திக்காது) புறக்கணித்தே விடுகின்றனர். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௦௫)Tafseer
وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ ١٠٦
- wamā yu'minu
- وَمَا يُؤْمِنُ
- நம்பிக்கை கொள்ள மாட்டார்(கள்)
- aktharuhum
- أَكْثَرُهُم
- அதிகமானவர்(கள்) அவர்களில்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- illā
- إِلَّا
- தவிர
- wahum
- وَهُم
- அவர்கள்
- mush'rikūna
- مُّشْرِكُونَ
- இணைவைப்பவர்கள்
அவர்களில் பெரும்பாலானவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்லை. (அவ்வாறு அவர்களில் எவரேனும் நம்பிக்கை கொள்ளாதபோதிலும்) அவனுக்கு இணையும் வைக்கின்றனர். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௦௬)Tafseer
اَفَاَمِنُوْٓا اَنْ تَأْتِيَهُمْ غَاشِيَةٌ مِّنْ عَذَابِ اللّٰهِ اَوْ تَأْتِيَهُمُ السَّاعَةُ بَغْتَةً وَّهُمْ لَا يَشْعُرُوْنَ ١٠٧
- afa-aminū
- أَفَأَمِنُوٓا۟
- அச்சமற்றுவிட்டனரா?
- an tatiyahum
- أَن تَأْتِيَهُمْ
- வருவதை/அவர்களுக்கு
- ghāshiyatun
- غَٰشِيَةٌ
- சூழக்கூடியது
- min ʿadhābi
- مِّنْ عَذَابِ
- வேதனையிலிருந்து
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- aw tatiyahumu
- أَوْ تَأْتِيَهُمُ
- அவர்கள்/வருவதை/அவர்களுக்கு
- l-sāʿatu
- ٱلسَّاعَةُ
- (முடிவு) காலம்
- baghtatan
- بَغْتَةً
- திடீரென
- wahum
- وَهُمْ
- அவர்கள்
- lā yashʿurūna
- لَا يَشْعُرُونَ
- அறியமாட்டார்கள்
(அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வராதென்றோ அல்லது அவர்கள் அறியாத நிலைமையில் திடுகூறாய் (அவர்களுடைய) முடிவு காலம் அவர்களுக்கு வராதென்றோ அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா? ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௦௭)Tafseer
قُلْ هٰذِهٖ سَبِيْلِيْٓ اَدْعُوْٓا اِلَى اللّٰهِ ۗعَلٰى بَصِيْرَةٍ اَنَا۠ وَمَنِ اتَّبَعَنِيْ ۗوَسُبْحٰنَ اللّٰهِ وَمَآ اَنَا۠ مِنَ الْمُشْرِكِيْنَ ١٠٨
- qul
- قُلْ
- கூறுவீராக
- hādhihi
- هَٰذِهِۦ
- இது
- sabīlī
- سَبِيلِىٓ
- என் வழி
- adʿū
- أَدْعُوٓا۟
- அழைக்கின்றேன் (அழைக்கின்றோம்)
- ilā
- إِلَى
- பக்கம்
- l-lahi
- ٱللَّهِۚ
- அல்லாஹ்
- ʿalā
- عَلَىٰ
- மீது
- baṣīratin
- بَصِيرَةٍ
- தெளிவான அறிவு
- anā
- أَنَا۠
- நான்
- wamani
- وَمَنِ
- இன்னும் எவர்
- ittabaʿanī
- ٱتَّبَعَنِىۖ
- பின்பற்றினார்/என்னை
- wasub'ḥāna
- وَسُبْحَٰنَ
- மிகப் பரிசுத்தமானவன்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்
- wamā anā
- وَمَآ أَنَا۠
- இல்லை/நான்
- mina l-mush'rikīna
- مِنَ ٱلْمُشْرِكِينَ
- இணைவைப்பவர்களில்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "இதுவே எனது (நேரான) வழி. நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (இணை துணைகளை விட்டு) அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். ஆகவே, (அவனுக்கு) இணை வைப்பவர்களில் நானும் ஒருவனல்ல." ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௦௮)Tafseer
وَمَآ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِيْٓ اِلَيْهِمْ مِّنْ اَهْلِ الْقُرٰىۗ اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۗ وَلَدَارُ الْاٰخِرَةِ خَيْرٌ لِّلَّذِيْنَ اتَّقَوْاۗ اَفَلَا تَعْقِلُوْنَ ١٠٩
- wamā arsalnā
- وَمَآ أَرْسَلْنَا
- நாம் அனுப்பவில்லை
- min qablika
- مِن قَبْلِكَ
- உமக்கு முன்னர்
- illā
- إِلَّا
- தவிர
- rijālan
- رِجَالًا
- ஆண்களை
- nūḥī
- نُّوحِىٓ
- வஹீ அறிவிப்போம்
- ilayhim
- إِلَيْهِم
- அவர்களுக்கு
- min ahli l-qurā
- مِّنْ أَهْلِ ٱلْقُرَىٰٓۗ
- ஊர்வாசிகளில்
- afalam yasīrū
- أَفَلَمْ يَسِيرُوا۟
- அவர்கள் செல்லவில்லையா?
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- fayanẓurū
- فَيَنظُرُوا۟
- பார்ப்பார்கள்
- kayfa
- كَيْفَ
- எப்படி?
- kāna
- كَانَ
- இருந்தது
- ʿāqibatu
- عَٰقِبَةُ
- முடிவு
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- min qablihim
- مِن قَبْلِهِمْۗ
- இவர்களுக்கு முன்னர்
- waladāru
- وَلَدَارُ
- வீடுதான்
- l-ākhirati
- ٱلْءَاخِرَةِ
- மறுமையின்
- khayrun
- خَيْرٌ
- மிக மேலானது
- lilladhīna
- لِّلَّذِينَ
- எவர்களுக்கு
- ittaqaw
- ٱتَّقَوْا۟ۗ
- அஞ்சினார்கள்
- afalā taʿqilūna
- أَفَلَا تَعْقِلُونَ
- நீங்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?
உங்களுக்கு முன்னர் பற்பல ஊராருக்கும் நாம் அனுப்பிய தூதர்கள் அவ்வூர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை. எனினும், அவர்களுக்கு (நம்முடைய கட்டளைகளை) வஹீ மூலம் அறிவித்தோம். இவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவில்லையா? (அவ்வாறு செய்தால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை இவர்கள் கண்டுகொள்வார்கள். மறுமையின் வீடுதான் இறைஅச்சம் உடையவர்களுக்கு மிக்க மேலானது. இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௦௯)Tafseer
حَتّٰٓى اِذَا اسْتَا۟يْـَٔسَ الرُّسُلُ وَظَنُّوْٓا اَنَّهُمْ قَدْ كُذِبُوْا جَاۤءَهُمْ نَصْرُنَاۙ فَنُجِّيَ مَنْ نَّشَاۤءُ ۗوَلَا يُرَدُّ بَأْسُنَا عَنِ الْقَوْمِ الْمُجْرِمِيْنَ ١١٠
- ḥattā
- حَتَّىٰٓ
- இறுதியாக
- idhā is'tayasa
- إِذَا ٱسْتَيْـَٔسَ
- போது/நிராசையடைந்தார்(கள்)
- l-rusulu
- ٱلرُّسُلُ
- தூதர்கள்
- waẓannū
- وَظَنُّوٓا۟
- இன்னும் எண்ணினர்
- annahum
- أَنَّهُمْ
- நிச்சயமாக அவர்கள்
- qad kudhibū
- قَدْ كُذِبُوا۟
- பொய்ப்பிக்கப்பட்டனர்
- jāahum
- جَآءَهُمْ
- வந்தது அவர்களை
- naṣrunā
- نَصْرُنَا
- நம் உதவி
- fanujjiya
- فَنُجِّىَ
- பாதுகாக்கப்பட்டனர்
- man nashāu
- مَن نَّشَآءُۖ
- எவர்/நாடுகின்றோம்
- walā yuraddu
- وَلَا يُرَدُّ
- இன்னும் திருப்பப்படாது
- basunā
- بَأْسُنَا
- நம் தண்டனை
- ʿani l-qawmi
- عَنِ ٱلْقَوْمِ
- சமுதாயத்தை விட்டு
- l-muj'rimīna
- ٱلْمُجْرِمِينَ
- குற்றவாளிகள்,பாவிகள்
நம் தூதர்கள் (தாங்கள்) பொய்யாக்கப்பட்டு விட்டதாக நம்பிக்கை இழந்துவிடும் வரையிலும் (அவ்வக்கிரமக்காரர்களை நாம் விட்டு வைத்தோம். பின்னர்) நம் உதவி அவர்களை வந்தடைந்தது. நாம் நாடியவர்கள் பாதுகாக்கப்பட்டனர். நம் வேதனையை குற்றம் செய்யும் மக்களை விட்டு எவராலும் நீக்கிவிட முடியாது. ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௧௦)Tafseer