Skip to content

ஸூரா ஸூரத்து யூஸுஃப் - Page: 10

Yusuf

(Yūsuf)

௯௧

قَالُوْا تَاللّٰهِ لَقَدْ اٰثَرَكَ اللّٰهُ عَلَيْنَا وَاِنْ كُنَّا لَخٰطِـِٕيْنَ ٩١

qālū tal-lahi
قَالُوا۟ تَٱللَّهِ
கூறினர்/அல்லாஹ்வின் மீது சத்தியமாக
laqad ātharaka
لَقَدْ ءَاثَرَكَ
மேன்மைப் படுத்திவிட்டான்/உம்மை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalaynā
عَلَيْنَا
எங்களை விட
wa-in kunnā
وَإِن كُنَّا
நிச்சயமாகஇருந்தோம்
lakhāṭiīna
لَخَٰطِـِٔينَ
தவறிழைப்பவர் களாகத்தான்
அதற்கவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (உங்களுக்குப் பெரும்) தீங்கிழைத்தோம். ஆயினும் நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட உங்களை மேன்மையாக்கி வைத்திருக்கிறான். (எங்களுக்கு நன்மை செய்ய அல்லாஹ் உங்களுக்குச் சந்தர்ப்பமும் அளித்திருக்கிறான்)" என்று கூறினார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௯௧)
Tafseer
௯௨

قَالَ لَا تَثْرِيْبَ عَلَيْكُمُ الْيَوْمَۗ يَغْفِرُ اللّٰهُ لَكُمْ ۖوَهُوَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ ٩٢

qāla
قَالَ
கூறினார்
لَا
அறவே இல்லை
tathrība
تَثْرِيبَ
பழிப்பு
ʿalaykumu
عَلَيْكُمُ
உங்கள் மீது
l-yawma
ٱلْيَوْمَۖ
இன்றைய தினம்
yaghfiru
يَغْفِرُ
மன்னிப்பான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lakum
لَكُمْۖ
உங்களை
wahuwa
وَهُوَ
அவன்
arḥamu
أَرْحَمُ
மகா கருணையாளன்
l-rāḥimīna
ٱلرَّٰحِمِينَ
கருணையாளர்களில்
அதற்கவர் "இன்றைய தினம் (நான்) உங்கள் மீது யாதொரு குற்றமும் (சுமத்த) இல்லை. அல்லாஹ்(வும்) உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவானாக! அவன் கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்" என்றும் கூறினார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௯௨)
Tafseer
௯௩

اِذْهَبُوْا بِقَمِيْصِيْ هٰذَا فَاَلْقُوْهُ عَلٰى وَجْهِ اَبِيْ يَأْتِ بَصِيْرًا ۚوَأْتُوْنِيْ بِاَهْلِكُمْ اَجْمَعِيْنَ ࣖ ٩٣

idh'habū
ٱذْهَبُوا۟
செல்லுங்கள்
biqamīṣī hādhā
بِقَمِيصِى هَٰذَا
எனது சட்டையைக் கொண்டு/இந்த
fa-alqūhu
فَأَلْقُوهُ
போடுங்கள்/அதை
ʿalā wajhi
عَلَىٰ وَجْهِ
முகத்தில்
abī
أَبِى
என் தந்தையின்
yati
يَأْتِ
அவர் வருவார்
baṣīran
بَصِيرًا
பார்வையுடையவராக
watūnī
وَأْتُونِى
வாருங்கள்/என்னிடம்
bi-ahlikum
بِأَهْلِكُمْ
உங்கள் குடும்பத்தினரைக் கொண்டு
ajmaʿīna
أَجْمَعِينَ
அனைவரையும்
"நீங்கள் என்னுடைய இந்தச் சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தில் போடுங்கள். (அதனால் உடனே) அவர் (இழந்த) பார்வையை அடைந்து விடுவார். பின்னர் நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்" என்று கூறி அனுப்பினார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௯௩)
Tafseer
௯௪

وَلَمَّا فَصَلَتِ الْعِيْرُ قَالَ اَبُوْهُمْ اِنِّيْ لَاَجِدُ رِيْحَ يُوْسُفَ لَوْلَآ اَنْ تُفَنِّدُوْنِ ٩٤

walammā faṣalati
وَلَمَّا فَصَلَتِ
பிரிந்த போது
l-ʿīru
ٱلْعِيرُ
பயணக் கூட்டம்
qāla
قَالَ
கூறினார்
abūhum
أَبُوهُمْ
அவர்களின் தந்தை
innī
إِنِّى
நிச்சயமாக நான்
la-ajidu
لَأَجِدُ
உறுதியாக பெறுகிறேன்
rīḥa
رِيحَ
வாடையை
yūsufa
يُوسُفَۖ
யூஸுஃபுடைய
lawlā an tufannidūni
لَوْلَآ أَن تُفَنِّدُونِ
நீங்கள் அறிவீனனாக்காமல் இருக்கவேண்டுமே/என்னை
அவர்களின் ஒட்டக வாகனங்கள் (எகிப்திலிருந்து) பிரியவே, அவர்களின் தந்தை ("இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் நுகர்கிறேன்; (இதனால்) என்னை நீங்கள் பைத்தியக் காரனென்று எண்ணாமலிருக்க வேண்டுமே!" என்றார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௯௪)
Tafseer
௯௫

قَالُوْا تَاللّٰهِ اِنَّكَ لَفِيْ ضَلٰلِكَ الْقَدِيْمِ ٩٥

qālū
قَالُوا۟
கூறினர்
tal-lahi
تَٱللَّهِ
அல்லாஹ்வின் மீது சத்தியமாக
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீர்
lafī ḍalālika
لَفِى ضَلَٰلِكَ
உம் தவறில்தான்
l-qadīmi
ٱلْقَدِيمِ
பழையது
(இதனைச் செவியுற்ற அவருடைய மக்கள்) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மெய்யாகவே நீங்கள் உங்களுடைய பழைய தவறான எண்ணத்தில்தான் இருக்கிறீர்கள்" என்று கூறினார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௯௫)
Tafseer
௯௬

فَلَمَّآ اَنْ جَاۤءَ الْبَشِيْرُ اَلْقٰىهُ عَلٰى وَجْهِهٖ فَارْتَدَّ بَصِيْرًاۗ قَالَ اَلَمْ اَقُلْ لَّكُمْۙ اِنِّيْٓ اَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ٩٦

falammā
فَلَمَّآ
போது
an jāa
أَن جَآءَ
வந்தார்
l-bashīru
ٱلْبَشِيرُ
நற்செய்தியாளர்
alqāhu
أَلْقَىٰهُ
போட்டார்/அதை
ʿalā wajhihi
عَلَىٰ وَجْهِهِۦ
அவருடைய முகத்தில்
fa-ir'tadda
فَٱرْتَدَّ
அவர் திரும்பினார்
baṣīran
بَصِيرًاۖ
பார்வையுடையவராக
qāla
قَالَ
கூறினார்
alam aqul
أَلَمْ أَقُل
நான் கூறவில்லையா?
lakum
لَّكُمْ
உங்களுக்கு
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
aʿlamu
أَعْلَمُ
அறிவேன்
mina l-lahi
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
mā lā taʿlamūna
مَا لَا تَعْلَمُونَ
நீங்கள் அறியாதவற்றை
அச்சமயம் (யூஸுஃபைப் பற்றி) நற்செய்தி கூறுபவரும் வந்து, (யூஸுஃபுடைய சட்டையை) அவர் (தந்தையின்) முகத்தில் போடவே, அவர் இழந்த (தன்) பார்வையை அடைந்து "(யூஸுஃப் உயிரோடிருப்பதைப் பற்றி) நீங்கள் அறியாதவற்றையெல்லாம் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு நிச்சயமாக நான் அறிவேன் என்பதாக (முன்னர்) நான் உங்களுக்குக் கூறவில்லையா?" என்று கேட்டார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௯௬)
Tafseer
௯௭

قَالُوْا يٰٓاَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوْبَنَآ اِنَّا كُنَّا خٰطِـِٕيْنَ ٩٧

qālū
قَالُوا۟
கூறினர்
yāabānā
يَٰٓأَبَانَا
எங்கள் தந்தையே
is'taghfir
ٱسْتَغْفِرْ
மன்னிக்க கோருவீராக
lanā
لَنَا
எங்களுக்கு
dhunūbanā
ذُنُوبَنَآ
எங்கள் பாவங்களை
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
kunnā
كُنَّا
இருந்தோம்
khāṭiīna
خَٰطِـِٔينَ
தவறிழைப்பவர்களாக
(அதற்குள் எகிப்து சென்றிருந்த அவருடைய மற்ற பிள்ளைகளும் வந்து) "எங்கள் தந்தையே! எங்கள் பாவங்களை மன்னிக்கும்படி நீங்கள் பிரார்த்திப்பீராக! மெய்யாகவே நாங்கள் பெரும் தவறிழைத்துவிட்டோம்" என்று (அவர்களே) கூறினார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௯௭)
Tafseer
௯௮

قَالَ سَوْفَ اَسْتَغْفِرُ لَكُمْ رَبِّيْ ۗاِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ ٩٨

qāla
قَالَ
கூறினார்
sawfa astaghfiru
سَوْفَ أَسْتَغْفِرُ
மன்னிப்புக் கோருவேன்
lakum
لَكُمْ
உங்களுக்காக
rabbī
رَبِّىٓۖ
என் இறைவனிடம்
innahu huwa
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
l-ghafūru
ٱلْغَفُورُ
மகா மன்னிப்பாளன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்
அதற்கவர், நான் என் இறைவனிடம் பின்னர் உங்களுக்காக மன்னிப்பைக் கோருவேன். நிச்சயமாக அவன் மிக மன்னிப் பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்" என்று கூறினார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௯௮)
Tafseer
௯௯

فَلَمَّا دَخَلُوْا عَلٰى يُوْسُفَ اٰوٰٓى اِلَيْهِ اَبَوَيْهِ وَقَالَ ادْخُلُوْا مِصْرَ اِنْ شَاۤءَ اللّٰهُ اٰمِنِيْنَ ۗ ٩٩

falammā
فَلَمَّا
போது
dakhalū
دَخَلُوا۟
நுழைந்தனர்
ʿalā yūsufa
عَلَىٰ يُوسُفَ
யூஸுஃபிடம்
āwā
ءَاوَىٰٓ
அரவணைத்தார்
ilayhi
إِلَيْهِ
தன் பக்கம்
abawayhi
أَبَوَيْهِ
தன் பெற்றோரை
waqāla
وَقَالَ
இன்னும் கூறினார்
ud'khulū
ٱدْخُلُوا۟
நுழையுங்கள்
miṣ'ra
مِصْرَ
எகிப்தில்
in shāa
إِن شَآءَ
நாடினால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
āminīna
ءَامِنِينَ
அச்சமற்றவர்களாக
(பின்னர், குடும்பத்துடன் கன்ஆனிலிருந்த) அவர்கள் யூஸுஃபிடம் (எகிப்துக்கு) வந்தபொழுது அவர் தன் தாய் தந்தையை (எகிப்தின் எல்லையில் காத்திருந்து மிக மரியாதையுடன் வரவேற்று ("இறைவன் அருளால்) நீங்கள் எகிப்தில் நுழையுங்கள்! அல்லாஹ் நாடினால் நீங்கள் அச்சமற்றவர்களாய் இருப்பீர்கள்" என்று கூறினார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௯௯)
Tafseer
௧௦௦

وَرَفَعَ اَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوْا لَهٗ سُجَّدًاۚ وَقَالَ يٰٓاَبَتِ هٰذَا تَأْوِيْلُ رُءْيَايَ مِنْ قَبْلُ ۖقَدْ جَعَلَهَا رَبِّيْ حَقًّاۗ وَقَدْ اَحْسَنَ بِيْٓ اِذْ اَخْرَجَنِيْ مِنَ السِّجْنِ وَجَاۤءَ بِكُمْ مِّنَ الْبَدْوِ مِنْۢ بَعْدِ اَنْ نَّزَغَ الشَّيْطٰنُ بَيْنِيْ وَبَيْنَ اِخْوَتِيْۗ اِنَّ رَبِّيْ لَطِيْفٌ لِّمَا يَشَاۤءُ ۗاِنَّهٗ هُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ ١٠٠

warafaʿa
وَرَفَعَ
இன்னும் உயர்த்தினார்
abawayhi
أَبَوَيْهِ
தன் பெற்றோரை
ʿalā
عَلَى
மேல்
l-ʿarshi
ٱلْعَرْشِ
(அரச) கட்டில்
wakharrū
وَخَرُّوا۟
இன்னும் விழுந்தனர்
lahu
لَهُۥ
அவருக்கு
sujjadan
سُجَّدًاۖ
சிரம் பணிந்தவர்களாக
waqāla
وَقَالَ
இன்னும் கூறினார்
yāabati
يَٰٓأَبَتِ
என் தந்தையே
hādhā
هَٰذَا
இது
tawīlu
تَأْوِيلُ
விளக்கம்
ru'yāya
رُءْيَٰىَ
என் கனவின்
min qablu
مِن قَبْلُ
முன்னர்
qad jaʿalahā
قَدْ جَعَلَهَا
ஆக்கி விட்டான்/அதை
rabbī
رَبِّى
என் இறைவன்
ḥaqqan
حَقًّاۖ
உண்மையாக
waqad aḥsana
وَقَدْ أَحْسَنَ
நன்மை புரிந்திருக்கிறான்
بِىٓ
எனக்கு
idh
إِذْ
போது
akhrajanī
أَخْرَجَنِى
அவன் வெளியேற்றினான்/என்னை
mina
مِنَ
இருந்து
l-sij'ni
ٱلسِّجْنِ
சிறை
wajāa
وَجَآءَ
இன்னும் வந்தான்
bikum
بِكُم
உங்களைக் கொண்டு
mina
مِّنَ
இருந்து
l-badwi
ٱلْبَدْوِ
கிராமம்
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
an nazagha
أَن نَّزَغَ
பிரிவினையை உண்டு பண்ணினான்
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
baynī
بَيْنِى
எனக்கிடையில்
wabayna
وَبَيْنَ
இன்னும் இடையில்
ikh'watī
إِخْوَتِىٓۚ
என் சகோதரர்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
rabbī
رَبِّى
என் இறைவன்
laṭīfun
لَطِيفٌ
மகா நுட்பமானவன்
limā yashāu
لِّمَا يَشَآءُۚ
தான் நாடியதற்கு
innahu huwa
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
l-ḥakīmu
ٱلْحَكِيمُ
மகா ஞானவான்
பின்னர் அவர் தன் தாயையும், தந்தையையும் சிம்மாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார். (எகிப்தின் அதிபதியாக இருந்த) அவருக்கு (அக்காலத்திய முறைப்படி) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்து மரியாதைச் செலுத்தினார்கள். அச்சமயம் யூஸுஃப் (தன் தந்தையை நோக்கி) "என் தந்தையே! முன்னர் நான் கண்ட கனவின் வியாக்கியானம் இதுதான். என் இறைவன் அதனை உண்மையாக்கி விட்டான். (எவருடைய சிபாரிசுமின்றியே) சிறைக்கூடத்திலிருந்து என்னை அவன் வெளியேற்றியதுடன் எனக்கும், என் சகோதரருக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டுபண்ணிய பின்னரும் உங்கள் அனைவரையும் பாலைவனத்திலிருந்து என்னிடம் கொண்டு வந்து ஒன்று சேர்த்ததன் மூலம் (என் இறைவன்) நிச்சயமாக என்மீது பேருபகாரம் புரிந்திருக்கிறான். நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்கள் மீது உள்ளன்புடையவனாக இருக்கிறான். நிச்சயமாக அவன் அனைத்தையும் நன்கறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்" என்றார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௦௦)
Tafseer