الۤرٰ ۗ تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْمُبِيْنِۗ ١
- alif-lam-ra
- الٓرۚ
- அலிஃப், லாம், றா
- til'ka āyātu
- تِلْكَ ءَايَٰتُ
- இவை/வசனங்கள்
- l-kitābi
- ٱلْكِتَٰبِ
- வேதம்
- l-mubīni
- ٱلْمُبِينِ
- தெளிவான(து)
அலிஃப்; லாம்; றா. இந்த அத்தியாயம் தெளிவான இவ்வேதத்தின் சில வசனங்களாகும். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧)Tafseer
اِنَّآ اَنْزَلْنٰهُ قُرْاٰنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ ٢
- innā
- إِنَّآ
- நிச்சயமாக நாம்
- anzalnāhu
- أَنزَلْنَٰهُ
- இதை இறக்கினோம்
- qur'ānan
- قُرْءَٰنًا
- குர்ஆனாக
- ʿarabiyyan
- عَرَبِيًّا
- அரபி
- laʿallakum taʿqilūna
- لَّعَلَّكُمْ تَعْقِلُونَ
- நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
(அரபிகளே!) நீங்கள் நன்கறிந்து கொள்வதற்காக குர்ஆன் என்னும் இவ்வேதத்தை நிச்சயமாக நாமே (உங்களுடைய) அரபி மொழியில் இறக்கி வைத்தோம். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௨)Tafseer
نَحْنُ نَقُصُّ عَلَيْكَ اَحْسَنَ الْقَصَصِ بِمَآ اَوْحَيْنَآ اِلَيْكَ هٰذَا الْقُرْاٰنَۖ وَاِنْ كُنْتَ مِنْ قَبْلِهٖ لَمِنَ الْغٰفِلِيْنَ ٣
- naḥnu
- نَحْنُ
- நாம்
- naquṣṣu
- نَقُصُّ
- விவரிக்கிறோம்
- ʿalayka
- عَلَيْكَ
- உமக்கு
- aḥsana
- أَحْسَنَ
- மிக அழகானதை
- l-qaṣaṣi
- ٱلْقَصَصِ
- சரித்திரங்களில்
- bimā awḥaynā
- بِمَآ أَوْحَيْنَآ
- வஹீ அறிவித்ததன் மூலம்
- ilayka
- إِلَيْكَ
- உமக்கு
- hādhā l-qur'āna
- هَٰذَا ٱلْقُرْءَانَ
- இந்த குர்ஆனை
- wa-in kunta
- وَإِن كُنتَ
- நிச்சயமாக இருந்தீர்
- min qablihi
- مِن قَبْلِهِۦ
- இதற்கு முன்னர்
- lamina l-ghāfilīna
- لَمِنَ ٱلْغَٰفِلِينَ
- அறியாதவர்களில்
(நபியே!) வஹீ மூலம் நாம் உங்களுக்கு அறிவிக்கும் இந்தக் குர்ஆனின் மூலம் சரித்திரங்களில் மிக்க அழகானதொன்றை உங்களுக்கு நாம் விவரிக்கின்றோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீங்கள் இதனை அறியாதவராகவே இருந்தீர்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௩)Tafseer
اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰٓاَبَتِ اِنِّيْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ لِيْ سٰجِدِيْنَ ٤
- idh qāla
- إِذْ قَالَ
- சமயம்/கூறினார்
- yūsufu
- يُوسُفُ
- யூஸுஃப்
- li-abīhi
- لِأَبِيهِ
- தன் தந்தைக்கு
- yāabati
- يَٰٓأَبَتِ
- என் தந்தையே
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- ra-aytu
- رَأَيْتُ
- கனவில் கண்டேன்
- aḥada ʿashara
- أَحَدَ عَشَرَ
- பதினொரு
- kawkaban
- كَوْكَبًا
- நட்சத்திரத்தை
- wal-shamsa
- وَٱلشَّمْسَ
- இன்னும் சூரியன்
- wal-qamara
- وَٱلْقَمَرَ
- இன்னும் சந்திரன்
- ra-aytuhum
- رَأَيْتُهُمْ
- அவற்றை நான் கனவில் கண்டேன்
- lī
- لِى
- எனக்கு
- sājidīna
- سَٰجِدِينَ
- சிரம் பணியக்கூடியவையாக
யூஸுஃப் (நபி, யஃகூப் நபியாகிய) தன் தந்தையை நோக்கி "என் தந்தையே! பதினொரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் எனக்குச் சிரம் பணிய மெய்யாகவே நான் (கனவு) கண்டேன்" என்று கூறிய சமயத்தில், ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௪)Tafseer
قَالَ يٰبُنَيَّ لَا تَقْصُصْ رُءْيَاكَ عَلٰٓى اِخْوَتِكَ فَيَكِيْدُوْا لَكَ كَيْدًا ۗاِنَّ الشَّيْطٰنَ لِلْاِنْسَانِ عَدُوٌّ مُّبِيْنٌ ٥
- qāla
- قَالَ
- கூறினார்
- yābunayya
- يَٰبُنَىَّ
- என்னருமை மகனே
- lā taqṣuṣ
- لَا تَقْصُصْ
- விவரிக்காதே
- ru'yāka
- رُءْيَاكَ
- உன் கனவை
- ʿalā ikh'watika
- عَلَىٰٓ إِخْوَتِكَ
- உன் சகோதரர்களிடம்
- fayakīdū
- فَيَكِيدُوا۟
- சூழ்ச்சி செய்வார்கள்
- laka
- لَكَ
- உனக்கு
- kaydan
- كَيْدًاۖ
- ஒரு சூழ்ச்சியை
- inna l-shayṭāna
- إِنَّ ٱلشَّيْطَٰنَ
- நிச்சயமாக ஷைத்தான்
- lil'insāni
- لِلْإِنسَٰنِ
- மனிதனுக்கு
- ʿaduwwun
- عَدُوٌّ
- எதிரி
- mubīnun
- مُّبِينٌ
- பகிரங்கமான(வன்)
(யஃகூப் நபி யூஸுஃபை நோக்கி) "என் அருமைக் குழந்தையே! நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே. (அவ்வாறு கூறினால்,) அவர்கள் உனக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (சதி செய்யுமாறு அவர்களை அவன் தூண்டக்கூடும்)" என்று கூறினார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௫)Tafseer
وَكَذٰلِكَ يَجْتَبِيْكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَأْوِيْلِ الْاَحَادِيْثِ وَيُتِمُّ نِعْمَتَهٗ عَلَيْكَ وَعَلٰٓى اٰلِ يَعْقُوْبَ كَمَآ اَتَمَّهَا عَلٰٓى اَبَوَيْكَ مِنْ قَبْلُ اِبْرٰهِيْمَ وَاِسْحٰقَۗ اِنَّ رَبَّكَ عَلِيْمٌ حَكِيْمٌ ࣖ ٦
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- இவ்வாறே
- yajtabīka
- يَجْتَبِيكَ
- தேர்ந்தெடுப்பான்/உன்னை
- rabbuka
- رَبُّكَ
- உன் இறைவன்
- wayuʿallimuka
- وَيُعَلِّمُكَ
- இன்னும் கற்பிப்பான்/ உனக்கு
- min tawīli
- مِن تَأْوِيلِ
- விளக்கத்திலிருந்து
- l-aḥādīthi
- ٱلْأَحَادِيثِ
- பேச்சுகளின்
- wayutimmu
- وَيُتِمُّ
- இன்னும் முழுமையாக்குவான்
- niʿ'matahu
- نِعْمَتَهُۥ
- அவன் தன் அருளை
- ʿalayka
- عَلَيْكَ
- உம்மீது
- waʿalā
- وَعَلَىٰٓ
- இன்னும் மீது
- āli
- ءَالِ
- கிளையார்
- yaʿqūba
- يَعْقُوبَ
- யஃகூபின்
- kamā
- كَمَآ
- போன்று
- atammahā ʿalā
- أَتَمَّهَا عَلَىٰٓ
- முழுமைப்படுத்தினான்/அதை/மீது
- abawayka
- أَبَوَيْكَ
- உன்இருபாட்டன்கள்
- min qablu
- مِن قَبْلُ
- முன்னர்
- ib'rāhīma
- إِبْرَٰهِيمَ
- இப்றாஹீம்
- wa-is'ḥāqa
- وَإِسْحَٰقَۚ
- இன்னும் இஸ்ஹாக்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- rabbaka
- رَبَّكَ
- உன் இறைவன்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
- ḥakīmun
- حَكِيمٌ
- மகா ஞானவான்
தவிர, "(நீ கனவில் கண்ட) இவ்வாறே உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் வியாக்கியானங்களையும் உனக்குக் கற்றுக் கொடுத்து, உன் மீதும், யஃகூபின் (மற்ற) சந்ததிகள் மீதும் அவன் தன் அருளை முழுமையாக்கி வைப்பான். இவ்வாறே இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகிய உங்களுடைய இரு மூதாதைகள் மீதும் தன் அருளை முழுமைப்படுத்தி வைத்தான். நிச்சயமாக உன் இறைவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்" (என்றும் கூறினார்கள்). ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௬)Tafseer
۞ لَقَدْ كَانَ فِيْ يُوْسُفَ وَاِخْوَتِهٖٓ اٰيٰتٌ لِّلسَّاۤىِٕلِيْنَ ٧
- laqad
- لَّقَدْ
- திட்டவட்டமாக
- kāna
- كَانَ
- இருக்கின்றன
- fī yūsufa
- فِى يُوسُفَ
- யூஸுஃபில்
- wa-ikh'watihi
- وَإِخْوَتِهِۦٓ
- இன்னும் அவரது சகோதரர்கள்
- āyātun
- ءَايَٰتٌ
- அத்தாட்சிகள்
- lilssāilīna
- لِّلسَّآئِلِينَ
- வினவுகின்றவர்களுக்கு
(நபியே!) நிச்சயமாக யூஸுஃப் மற்றும் அவரது சகோதரர்களுடைய சரித்திரத்தைப் பற்றி வினவுகின்ற (யூதர்களாகிய இ)வர்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௭)Tafseer
اِذْ قَالُوْا لَيُوْسُفُ وَاَخُوْهُ اَحَبُّ اِلٰٓى اَبِيْنَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ ۗاِنَّ اَبَانَا لَفِيْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ ٨
- idh qālū
- إِذْ قَالُوا۟
- சமயம்/கூறினர்
- layūsufu
- لَيُوسُفُ
- திட்டமாக யூஸுஃபு
- wa-akhūhu
- وَأَخُوهُ
- இன்னும் அவருடையசகோதரர்
- aḥabbu
- أَحَبُّ
- அதிகப் பிரியமுள்ளவர்(கள்)
- ilā abīnā
- إِلَىٰٓ أَبِينَا
- நம் தந்தைக்கு
- minnā
- مِنَّا
- நம்மைவிட
- wanaḥnu
- وَنَحْنُ
- நாம்
- ʿuṣ'batun
- عُصْبَةٌ
- ஒரு கூட்டமாக
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- abānā
- أَبَانَا
- நம் தந்தை
- lafī ḍalālin
- لَفِى ضَلَٰلٍ
- தவறில்தான்
- mubīnin
- مُّبِينٍ
- பகிரங்கமானது
(யஃகூப் நபி தன் பன்னிரண்டு மகன்களில் யூஸுஃபையும், புன்யாமீனையும் அதிகமாக நேசிப்பதைக் கண்ணுற்ற மற்ற மகன்கள் பொறாமை கொண்டு) நாம் பலசாலிகளாக இருந்தும் யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர். (இதில்) நம் தந்தை நிச்சயமாக பகிரங்கமான தவறில் இருக்கிறார்" என்றும், ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௮)Tafseer
ۨاقْتُلُوْا يُوْسُفَ اَوِ اطْرَحُوْهُ اَرْضًا يَّخْلُ لَكُمْ وَجْهُ اَبِيْكُمْ وَتَكُوْنُوْا مِنْۢ بَعْدِهٖ قَوْمًا صٰلِحِيْنَ ٩
- uq'tulū
- ٱقْتُلُوا۟
- கொல்லுங்கள்
- yūsufa
- يُوسُفَ
- யூஸுஃபை
- awi
- أَوِ
- அல்லது
- iṭ'raḥūhu
- ٱطْرَحُوهُ
- எறியுங்கள்/அவரை
- arḍan
- أَرْضًا
- பூமியில்
- yakhlu
- يَخْلُ
- தனியாகிவிடும்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- wajhu
- وَجْهُ
- முகம்
- abīkum
- أَبِيكُمْ
- உங்கள் தந்தையின்
- watakūnū
- وَتَكُونُوا۟
- இன்னும் மாறிவிடுவீர்கள்
- min baʿdihi
- مِنۢ بَعْدِهِۦ
- இதன் பின்னர்
- qawman ṣāliḥīna
- قَوْمًا صَٰلِحِينَ
- மக்களாக/நல்லவர்கள்
ஆகவே, "யூஸுஃபைக் கொலை செய்து விடுங்கள். அல்லது பூமியில் எங்கேனும் அப்புறப்படுத்திவிடுங்கள். (அதன் பின்) உங்கள் தந்தையின் பார்வை முற்றிலும் உங்கள் பக்கமே இருக்கும். இதன் பின்னர், நீங்கள் (இறைவனிடம் மன்னிப்புத் தேடிக்கொண்டு) நல்ல மனிதர்களாகி விடுங்கள்" என்றும் கூறினார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௯)Tafseer
قَالَ قَاۤئِلٌ مِّنْهُمْ لَا تَقْتُلُوْا يُوْسُفَ وَاَلْقُوْهُ فِيْ غَيٰبَتِ الْجُبِّ يَلْتَقِطْهُ بَعْضُ السَّيَّارَةِ اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَ ١٠
- qāla
- قَالَ
- கூறினார்
- qāilun
- قَآئِلٌ
- கூறுபவர்
- min'hum
- مِّنْهُمْ
- அவர்களில்
- lā taqtulū
- لَا تَقْتُلُوا۟
- கொல்லாதீர்கள்
- yūsufa
- يُوسُفَ
- யூஸுஃபை
- wa-alqūhu
- وَأَلْقُوهُ
- போடுங்கள் அவரை
- fī ghayābati
- فِى غَيَٰبَتِ
- ஆழத்தில்
- l-jubi
- ٱلْجُبِّ
- கிணற்றின்
- yaltaqiṭ'hu
- يَلْتَقِطْهُ
- எடுத்துக் கொள்வார்(கள்)/அவரை
- baʿḍu
- بَعْضُ
- சிலர்
- l-sayārati
- ٱلسَّيَّارَةِ
- வழிப்போக்கர்களில்
- in kuntum fāʿilīna
- إِن كُنتُمْ فَٰعِلِينَ
- நீங்கள் செய்பவர்களாக இருந்தால்
(அதற்கு) அவர்களில் ஒருவர், "யூஸுஃபை நீங்கள் கொலை செய்யாதீர்கள். நீங்கள் அவருக்கு ஏதும் (கெடுதல்) செய்தே தீர வேண்டுமென்று கருதினால், ஆழமான ஒரு பாழ்கிணற்றில் அவரை எறிந்துவிடுங்கள். வழிப்போக்கரில் எவரேனும் அவரை (கிணற்றில் இருந்து) எடுத்துக் கொள்ளக்கூடும்" என்று கூறினார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௦)Tafseer