குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௯௩
Qur'an Surah Hud Verse 93
ஸூரத்து ஹூது [௧௧]: ௯௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَيٰقَوْمِ اعْمَلُوْا عَلٰى مَكَانَتِكُمْ اِنِّيْ عَامِلٌ ۗسَوْفَ تَعْلَمُوْنَۙ مَنْ يَّأْتِيْهِ عَذَابٌ يُّخْزِيْهِ وَمَنْ هُوَ كَاذِبٌۗ وَارْتَقِبُوْٓا اِنِّيْ مَعَكُمْ رَقِيْبٌ (هود : ١١)
- wayāqawmi
- وَيَٰقَوْمِ
- And O my people!
- என் மக்களே
- iʿ'malū
- ٱعْمَلُوا۟
- Work
- நீங்கள் செயல்படுங்கள்
- ʿalā makānatikum
- عَلَىٰ مَكَانَتِكُمْ
- (according) to your position
- உங்கள் தகுதிக்கு ஏற்ப
- innī
- إِنِّى
- indeed I am
- நிச்சயமாக நான்
- ʿāmilun
- عَٰمِلٌۖ
- working
- செயல்படுகிறேன்
- sawfa taʿlamūna
- سَوْفَ تَعْلَمُونَ
- Soon you will know
- அறிவீர்கள்
- man
- مَن
- (on) whom
- யாருக்கு?
- yatīhi
- يَأْتِيهِ
- will come
- அவருக்கு வரும்
- ʿadhābun
- عَذَابٌ
- a punishment
- ஒரு வேதனை
- yukh'zīhi
- يُخْزِيهِ
- (that will) disgrace him
- இழிவுபடுத்தும்/தன்னை
- waman
- وَمَنْ
- and who
- இன்னும் யார்?
- huwa
- هُوَ
- [he]
- அவர்
- kādhibun
- كَٰذِبٌۖ
- (is) a liar
- பொய்யர்
- wa-ir'taqibū
- وَٱرْتَقِبُوٓا۟
- And watch
- எதிர் பார்த்திருங்கள்
- innī
- إِنِّى
- indeed I am
- நிச்சயமாக நான்
- maʿakum
- مَعَكُمْ
- with you
- உங்களுடன்
- raqībun
- رَقِيبٌ
- a watcher"
- எதிர்பார்ப்பவன்
Transliteration:
Wa yaa qawmi' maloo 'alaa makaanatikum innee 'aamilun sawfa ta'lamoona mai yaateehi 'azaabuny yukhzeehi wa man huwa kaazib; wartaqibooo innnee ma'akum raqeeb(QS. Hūd:93)
English Sahih International:
And O my people, work according to your position; indeed, I am working. You are going to know to whom will come a punishment that will disgrace him and who is a liar. So watch; indeed, I am with you a watcher, [awaiting the outcome]." (QS. Hud, Ayah ௯௩)
Abdul Hameed Baqavi:
அன்றி, "என்னுடைய மக்களே! நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள் காரியத்தைச்) செய்து கொண்டிருங்கள், நானும் (என் போக்கில் என் காரியத்தைச்) செய்து கொண்டிருக்கிறேன். இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடையும்? பொய் சொல்பவர் யார்? என்பதை நீங்கள் அதிசீக்கிரத்தில் அறிந்துகொள்வீர்கள். (அந்நேரத்தை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் (அதனை) எதிர்பார்த்திருக்கிறேன்" (என்றும் கூறினார்). (ஸூரத்து ஹூது, வசனம் ௯௩)
Jan Trust Foundation
“என் சமூகத்தவர்களே! நீங்கள் உங்களுக்கு இசைந்தவாறு செய்து கொண்டிருங்கள்! நானும் (எனக்கு இசைந்தவாறு) செய்து கொண்டிருக்கிறேன்; இழிவு தரும் வேதனை யாரை வந்தடையும் என்பதையும், பொய்யர் யார் என்பதையும் சீக்கிரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; (அந்நேரத்தை) நீங்கள் எதிர் பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” (என்றும் கூறினார்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“என் மக்களே! நீங்கள் உங்கள் தகுதிக்கு ஏற்ப செயல்படுங்கள், நிச்சயமாக நான் (என் தகுதிக்கு ஏற்ப) செயல்படுகிறேன். தன்னை இழிவுபடுத்தும் வேதனை யாருக்கு வரும்? இன்னும் யார் பொய்யர்? என்பதை (விரைவில்) அறிவீர்கள். எதிர் பார்த்திருங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்ப்பவன் ஆவேன்.”