குர்ஆன் ஸூரா ஸூரத்து ஹூது வசனம் ௯௨
Qur'an Surah Hud Verse 92
ஸூரத்து ஹூது [௧௧]: ௯௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ يٰقَوْمِ اَرَهْطِيْٓ اَعَزُّ عَلَيْكُمْ مِّنَ اللّٰهِ ۗوَاتَّخَذْتُمُوْهُ وَرَاۤءَكُمْ ظِهْرِيًّا ۗاِنَّ رَبِّيْ بِمَا تَعْمَلُوْنَ مُحِيْطٌ (هود : ١١)
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- yāqawmi
- يَٰقَوْمِ
- "O my people!
- என் மக்களே
- arahṭī
- أَرَهْطِىٓ
- Is my family
- என் இனத்தாரா?
- aʿazzu
- أَعَزُّ
- mightier
- அதிகம் மதிப்புடையவர்(கள்)
- ʿalaykum
- عَلَيْكُم
- on you
- உங்களிடம்
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- than Allah?
- அல்லாஹ்வை விட
- wa-ittakhadhtumūhu
- وَٱتَّخَذْتُمُوهُ
- And you have taken Him
- நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள்/அவனை
- warāakum
- وَرَآءَكُمْ
- behind your
- பின்னால் உங்களுக்கு
- ẓih'riyyan
- ظِهْرِيًّاۖ
- backs
- எறியப்பட்டவனாக
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- rabbī
- رَبِّى
- my Lord
- என் இறைவன்
- bimā
- بِمَا
- of what
- எவற்றை
- taʿmalūna
- تَعْمَلُونَ
- you do
- செய்கிறீர்கள்
- muḥīṭun
- مُحِيطٌ
- (is) All-Encompassing
- சூழ்ந்திருப்பவன்
Transliteration:
Qaala yaa qawmi arahteee a'azzu 'alaikum minal laahi wattakhaztumoohu waraaa'akum zihriyyan inna Rabbee bimaa ta'maloona muheet(QS. Hūd:92)
English Sahih International:
He said, "O my people, is my family more respected for power by you than Allah? But you put Him behind your backs [in neglect]. Indeed, my Lord is encompassing of what you do. (QS. Hud, Ayah ௯௨)
Abdul Hameed Baqavi:
அதற்கவர் "என்னுடைய மக்களே! அல்லாஹ்வைவிட என்னுடைய இனத்தாரா உங்களுக்கு மிக்க மதிப்புடையவர்களாகி விட்டனர்? நீங்கள் இறைவனை உங்கள் முதுகுப்புறம் தள்ளி விட்டீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் செயலைச் சூழ்ந்துகொண்டு இருக்கிறான்" என்று கூறினார். (ஸூரத்து ஹூது, வசனம் ௯௨)
Jan Trust Foundation
(அதற்கு) அவர் கூறினார்| “(என்) சமூகத்தவர்களே! அல்லாஹ்வைவிட உங்களுக்கு என்னுடைய குடும்பத்தார் அதிக மதிப்புடையவர்களாய் விட்டார்களா? நீங்கள் அவனை முதுகுக்குப் பின் தள்ளிப் (புறக்கணித்து) விட்டீர்கள். நிச்சயமாக என்னுடைய இறைவன் நீங்கள் செய்யும் செயல்களை (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து (அறிந்து) கொண்டுதானிருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“என் மக்களே! அல்லாஹ்வை விட என் இனத்தாரா உங்களிடம் மதிப்புடையவர்கள்? நீங்கள் அவனை உங்களுக்குப் பின்னால் எறியப்பட்டவனாக எடுத்துக் கொண்டீர்கள். நிச்சயமாக என் இறைவன் நீங்கள் செய்பவற்றைச் சூழ்ந்திருப்பவன்”என்று கூறினார்.